Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் கூகிள் கணக்கீடுகள் (Google Analytics) என்றால் என்ன...?

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics) என்றால் என்ன...?

  • PDF
Google Analytics என்றால் என்ன? அதை எப்படி செயற்படுத்துவது என்று தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த பதிவு.


Google Analytics இணையதளத்தின் வெற்றியை அளவிட பயன்படும் மிகச்சிறந்த கருவியாகும்.உங்களுடைய விற்பனை உத்திகளையும், பொருட்களையும், சேவைகளையும் கணிக்கஉதவும் கருவியே இந்த Google Analytics.

எதற்கு கணக்கீடுகள்?

90- களில் வலைதள பார்வை எண்கள் (Web counter) பயன்படுத்தப்பட்டன. இவை எத்தனை பேர்பார்வையிட்டனர் என்ற தகவலை எல்லோருக்கும் தெரிவித்ததோடு பார்பதற்கும் அழகாகஇருக்கவில்லை. மேலும் எண்ணிக்கைகள் எந்தவிதமான புள்ளியியல் கணக்கீட்டுக்கும் பயன்படவில்லை. ஆனால் (Google கணக்கீடுகள்) ஏராளமான தகவல்களை அளிக்கின்றது. நாம்இம்மாதிரியான கணக்கீட்டு தகவல்களை பயன்படுத்துவதின் மூலம் நமது இணையதளத்தின்வளர்ச்சியை றிந்துகொள்ள இயலுவதோடு, வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளையும் எடுக்கஏதுவாகிறது.

என்ன மாதிரியான தகவல்களை பெறலாம்?

• மொத்த பார்வையாளர்கள் எத்தனை பேர்?
• புதியவர்கள் எத்தனை பேர்?
• மீண்டும் வந்தவர்கள் எத்தனை பேர்?
• எவ்வளவு நேரம் செலவழித்தார்கள்?
• எந்தப் பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது?
• எங்கிருந்து வந்தார்கள்?
• இருப்பிடம் எது?
• எந்தெந்த தேதியில் வந்தார்கள்/
• எப்படி உங்கள் தளத்தைப் பற்றி அறிந்துகொண்டார்கள்?
• உங்கள் தளத்தைப் பற்றி அறிந்துகொள்ள தேடுபொறி யில் பயன்படுத்தப் பட்ட வார்த்தைகள்என்னென்ன?



இப்படி ஏராளமான புள்ளியியல் தகவல்களை நமக்கு அளிக்கின்றது. இத்தகவல்களின்அடிப்படையில் நாம் பல முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உதாரணமாக, ஒரு செய்திநிறுவன இணையதளத்தில் விளையாட்டு சம்மந்தமான பக்கங்கள் திகமாகபார்க்கப்படுகிறது எனில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக செய்திகளைவெளியிடலாம். குறிப்பிட்ட நாட்டினர் அதிகம் பார்க்கிறார்கள் எனி ல், அந்நாட்டுச் செய்திகளைஅதிகம் வெளியிடலாம். பார்வையாளர்கள் மிகக் குறைந்த நேரத்தில் வெளியேறிவிடுகின்றனர்எனில், எந்த பக்கங்களிலிருந்து வெளியேறுகின்றனர் என்பதை அறிவதன் மூலம்,அப்பக்கங்களை மறுஆய்வு, மறுமதிப்பீடு செய்து அதற்கான காரணங்களை கண்டறியலாம்.

ஒவ்வொரு நாளின் வளர்ச்சியை அளவிடுவதன் மூலமே, நாம் இணைய உலகில் ஜொலிக்கமுடியும்.

முழுக்க முழுக்க இலவசமாக வெளியிடப்படும் இச்சேவையை பெறுவதற்கு தங்களுக்கு Google-ல் கணக்கு (Account) இருக்க வேண்டும். அதாவதுGmail-ல் மின்னஞ்சல் முகவரிவைத்திருக்க வேண்டும்.

முகப்பு பக்கத்தில், Gmail-பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை அளித்து உள்ளேசெல்லவும்.

Sign-up பக்கம் தோன்றும்.


இதில் உங்கள் இணையதளம் அல்லது வலைப்பூவினை பற்றிய தகவல்களை அளித்தவுடன்சில வரிசைகளைக் கொண்ட நிரல் (Program Code) அளிக்கப்படும். அதனை நகலெடுத்துக்கொண்டு, நம் இணையபக்கத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஒட்டிவிட வேண்டும் . வலைப்பூவில் Edit Html பகுதிக்கு சென்று </body> என்ற கோடுக்கு முன்னர் ஒட்ட வேண்டும்.

ஒட்டிய 48 மணிநேரத்திற்கு பின்பாகவோ அல்லது சிறிது முன்பாகவோ நமக்கு தகவல்கள்அளிக்கத் தொடங்கிவிடும். இதற்கு முன் Google அளித்த நிரலை சரியாக ஒட்டியிருக்கிறோமாஎன்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

தகவல்கள் பெறப்படுகின்றன” (Receving data) என்ற செய்தி நம் இணையதளம் தொடர்பானசெய்திகள் பெறப்படுகின்றன என்பதை உறுதி செய்கிறது. புள்ளியியல் கணக்கீடுகள் தற்போதுகைவர ஆரம்பிக்கிறது. இங்கே Google Analytics சென்று உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.