Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தலைமையாசிரியாரா? சமூக விரோத ரவுடியா?

தலைமையாசிரியாரா? சமூக விரோத ரவுடியா?

  • PDF

 நாகை மாவட்டம் அருகேயுள்ள திருமருகல் அரசு மேநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக இருப்பவர் பா.திருமாவளவன். காலை 11 மணிக்குமேல்தான் பள்ளிக்கு வருவது; பள்ளியிலே தண்ணியடித்து விட்டுத் தனியறையில் தூங்குவது

 மட்டுமல்ல; சட்டவிரோதமாக கல்வி கட்டணம், கட்டாய நன்கொடை என 1,50,000க்குமேல் வசூலித்தது தொடங்கி, பள்ளியிலிருக்கும் தூங்குமூஞ்சி மரங்களை வெட்டியும், ஓடுகளைப் பிரித்தும், பழைய இரும்பு, தேர்வுத்தாட்களை  எடைக்குப் போட்டும் பொறுக்கித் தின்றது வரையிலான திருவாளர் திருமாவளவனின் "புகழ் பாட' பக்கங்கள் போதாது.


 திட்டச்சேரி காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் உள்ள (எச்.எஸ். 232) சண்முகம் பத்தர், எம்.ஜி.ராஜேந்திரன், மணிவாசகம், தட்சிணாமூர்த்தி, எம்.முருகராஜ், மணிவேல் ஆகியோர் திருமாவளவனின் கூட்டாளிகளாக உள்ளனர். இதனைத் தக்க ஆதாரங்களுடன் பட்டியலிட்டு கடந்த 10.10.08 அன்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பிய இப்பள்ளி மாணவர்களை மிரட்டி வெற்றுத்தாளில் கையெழுத்தையும் வாங்கியிருக்கிறான் கிரிமினல் திருமாவளவன்.


 இந்நிலையில் இப்பகுதியில் செயல்படும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர  அமைப்புகளிடம் மாணவர்கள் முறையிடவே, இதனை அம்பலப்படுத்தி உடனடியாக சுவரொட்டிகளை ஒட்டினர் இவ்வமைப்பினர். ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைக் கிழித்ததோடு, தோழர்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டவும் செய்தது, மேற்படி ரௌடி கும்பல். இதனைத் தொடர்ந்து 05.12.08 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து சுவரொட்டி ஒட்டிய தோழர்களை மீண்டும் தாக்கியது இக்கும்பல். இதில்  திட்டச்சேரி காவல் நிலையத்தில் ஏட்டுகளாக பணிபுரியும் ஜனார்த்தனன், சேதுபதி, ஜெகநாதனும் அடக்கம்.


 ரௌடிகளின் கூட்டாளிகளான போலீசின் கைங்கரியத்தில் 4 தோழர்கள் மீது பொய்வழக்கு பதிவாகிச் சிறையலடைக்கப்பட்டனர். பினையில் வெளியே வந்த தோழர்கள் ""அடைமழையையொட்டி ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்படுகிறது'' என்பதை அறிவிக்கும் சுவரொட்டிகளை ஒட்டினர். மீண்டும் தாக்குதல், மீண்டும் பொய்வழக்கு! வி.வி.மு.வைச் சேர்ந்த ராஜ்குமார், செல்வராஜ் ஆகிய இரு தோழர்களை மீண்டும் சிறையலடைத்தது போலீசு.


 இதனையடுத்து மாவட்ட கல்வித்துறை,போலீசுஇரண்டையும் கண்டித்து 09.01.09 அன்று நாகை பேருந்து நிலையம் அருகில், திரளான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன்  கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் இவ்வமைப்பினர். வி.வி.மு. திருமருகல் கிளைச்செயலர் தோழர் தட்சிணா மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ச.பரமானந்தம், ம.க.இ.க மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் மற்றும் முன்னணியாளர்கள்  கண்டன உரையாற்றினர்.

 

—  வி.வி.மு., திருமருகல்.