Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்

ஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்

  • PDF

மத்திய-கிழக்கில் இஸ்ரேல் உருவாகுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, 1928ல் சோவியத் யூனியனில், ஸ்டாலினால் யூத சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இன்று மறக்கப்பட்டு விட்ட, பலர் அறிந்திருக்காத, "பிரோபிஜான்" என்ற பெயரிடப்பட்ட சோவியத் யூதர்களின் தாயகம், இன்று வரை நிலைத்து நிற்கின்றது. 70 வருடங்களுக்கு முன்னர், ரஷ்யாவின் ஆசியப்பகுதியில், ஸ்டாலின் வழங்கிய சைபீரிய நிலத்தில், பல்லாயிரக்கணக்கான சோவியத் யூதர்கள் சென்று குடியேறினார்கள்.

 

பல வருட கடின உழைப்பின் பலனாக பிரோபஜான் நகரம் உருவாகியது. இன்று வரை யூதர்கள், தமது மொழி, கலாச்சார தனித்துவங்களை அந்தப் பிராந்தியத்தில் பேணி வருகின்றனர்.

பாலஸ்தீனர்களின் நிலத்தை பறித்து, மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் உருவான இஸ்ரேல், இன்றுவரை தீராத பிரச்சினைக்குள் சிக்கிக் கொண்டு மீள வழி தெரியாமல் தவிக்கின்றது. அதனுடன் ஒப்பிடும் போது, அமைதியான பிரோபிஜான்,"ஆண்டவரால் வாக்களிக்கப்பட்ட பூலோக சொர்க்கமாக" காட்சி தருகின்றது. அதனை இங்கே இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கும் போதே தெரியவரும். இந்த ஆவணப்படம், சோவியத் யூனியனில்(குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில்) சிறுபான்மை மொழிகள், மதங்கள் அடக்கப்பட்டதாக, மேற்குலகினால் பரப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களையும் கூடவே அம்பலப்படுத்துகின்றது.



மேலதிக தகவல்களுக்கு:
Stalin's Forgotten Zion

Birobidzhan and the making of a soviet Jewish homeland

Last Updated on Thursday, 05 February 2009 14:16