Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் பதிவர்களே உஷார்!! ப்ளாகர் கணக்குகள் Hack செய்யப்படுகின்றன‌

பதிவர்களே உஷார்!! ப்ளாகர் கணக்குகள் Hack செய்யப்படுகின்றன‌

  • PDF

சமீபகாலமாக மின்னஞ்சல் முகவரிகளை கடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ப்ளாகர் கணக்கை கடத்துவது எளிதானது என்று கூகிளான்டவர் குறி சொல்கிறார்.

   சில நாட்களுக்கு முன் என் அக்காவின் ஆர்குட் கணக்கு கடத்த‌ப்பட்டது.பின் ஒருவழியாக அந்த கணக்கையே முடக்க முடிந்தது. சென்ற வாரம் பதிவர் விஜய கோபலாசாமியின் கணக்கு திருடப்பட்டது. இன்று புதுகை.அப்துல்லாவின் கணக்கும் திருடப்பட்டிருக்கிறது. ஒரு வழியாக அவரின் மின்னஞ்சல் கணக்கை கைப்பற்றிவிட்டோம். ஆனால் ப்ளாகர் கணக்கு இன்னமும் எதிரிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

    நாம் அடிக்கடி கடவுச்சொல் மாற்றுவதால் மட்டுமே இதை தடுக்க முடியாது. ஏனெனில் அவர்களின் திருடும் வழிமுறை கடவுச்சொல்லை கைப்பற்றுவதல்ல. எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளால் கடத்தப்பட்ட கணக்கை மீண்டும் பெற முடியும். முதலில் உங்கள் Security Question  மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின் மறக்காமல் அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து உங்கள் Secondary Email மாற்றுங்கள். ஜிமெய்ல் முகவரி என்றால் secondary email யாஹூவாக இருக்கட்டும். கடத்துபவன் கில்லாடி என்றால் இவைகளை உடனே மாற்றிவிடுவான். அப்போது என்ன செய்யலாம்?

    இப்போதே நீங்கள் ஜிமெய்லின் எந்தெந்த சேவைகளை உபயோகிக்கறீர்கள் என்ற தகவலை சேமியுங்கள். அந்த கணக்கு தொடங்கப்பட்ட நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கூகிளின் இந்த உதவிப் பக்கத்தில் இருக்கும் படிவம் மூலமாகத்தான் நாம் இதை முறையிடவெண்டும். அடிக்கடி ஒரே ஐ.பி.முகவரியில் வேலை செய்பவர்களுக்கு கொஞ்சம் எளிதாக கிடைத்துவிடும். ஒவ்வொரு Netcentre ஆக அலையும் தாமிரா போன்றவர்களுக்கு இது சிரமம்தான். அந்தப்படிவத்திலே கூகிள் வழங்கும் பலதரபட்ட சேவைகளின் பட்டியல் இருக்கிறது. உடனே இதில் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் தனியாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நம் கணக்கும் கடத்தபட்டால் இருக்கும் விவரங்களை கொண்டு கைப்பற்றிவிடலாம். அதற்குள் திருடியவன் எதையாவது அழித்து விட்டால் என்ன செய்வது?

    தமிழ்மணத்தில் இருப்பவர்களுக்கு இது எளிதான வேலை. தமிழ்மண கருவிப்படையில் புத்தகம் போல் இருக்கும் ஐகானை அழுத்தினால் உங்களின் கடைசி 20 பதிவுகளின் பட்டியல் வரும். இதன் மூலம் அந்தப் பதிவுகளை பி.டி.எஃப் கோப்புகளாக சேமித்துக் கொள்ளலாம். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்வதின் மூலம் நம் பதிவுகளை பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அதிக அக்கறை உள்ளவர்கள் தமிழ்மணத்தில் இணைக்கும்போதே பி.டி.எஃப் ஆக மாற்றிக் கொள்ளுங்கள். இதுவல்லாமல் வேறு மென்பொருள் ஏதாவ்து இருக்கிறதா என்ற விவரம் கூகிளில் தேடிக் கொண்டிருக்கிறேன்.கிடைத்தால் பின்னூட்டத்தில் சொல்கிறேன்.