Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் முதலாளித்துவம் கொல்லுது - சத்யம் IT ஊழியரின் தற்கொலை

முதலாளித்துவம் கொல்லுது - சத்யம் IT ஊழியரின் தற்கொலை

  • PDF
த்யம் கம்பேனி 420 வேலை செய்து மாட்டிக் கொண்ட கதை இப்போது அனைவருக்கும் தெரிந்த விசயமாகிவிட்டது. இதே போல ஊழல் குற்றச்சாட்டில் விப்ரோ நிறுவனமும் அசிங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒட்டிய கிளைக் கதையில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கும்பலை சேர்ந்தவரின் பாலியல் வக்கிர கதைகள் மீண்டும் அரங்கிற்கு வந்து அசிங்கப்பட்டது.

இத்தனை அயோக்கியத்தனமும் செய்யும் இந்த பகாசுர சூதாட்ட முதலாளிகள், 420 பேர்வழிகள் எந்த தண்டனையும் அனுபவிப்பது இல்லை. ஆனால் எந்த தவறும் செய்யாதா அந்த நிறுவனங்களில் பணி புரிபவர்கள்தான் இதன் கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள். இந்திய தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்த பணம் சேர்த்த தொழில்துறை முதலாளிகள் அந்த பணத்தை சூதாடி தோற்றனர். இன்று சூதாட்டத்தின் நஸ்டத்தை தொழிலாளர் தலையில் சுமத்தி வேலையை விட்டு நீக்குகிறார்கள், வயிற்றில் அடிக்கிறார்கள்.

அது போலவே இந்திய IT துறை சுதாடிகளும், 420 களும் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலையை விட்டு தூக்கப்பட்டுள்ளனர் IT துறையில். IT துறை சூப்பரு சூப்பரு என்று சொல்லி எல்லாரையும் அதனையே படிக்க சொல்லி ஊக்கப்படுத்திய அரசுகளோ இன்று IT துறை கவிழ்ந்து கிடக்கும் நேரத்தில் முதலாளிகளுக்கு அறிவுரை வழங்கி காப்பாற்றுகிறது. இந்த அரசை நம்பி IT படித்தவர்களைப் பற்றியோ அல்லது விவசாயம் செத்து போனதால் நகரத்துக்கு வந்த தொழில்சாலை தொழிலாளி பற்றியோ இந்த அரசுக்கு கவலையில்லை. வாழ்வையிழந்த, எதிர்காலம் நிச்சயமற்ற சதாரண மக்களுக்கு வாய்க்கரிசி போட வருகிறது அரசு. முதலாளிகளுக்கோ சின்ன எறும்பு கடி என்றால் கூட பெயில் அவுட் எடுக்கிறது.

வெட்கமின்றி கொஞ்சம் கூட பயமின்றி சத்யம் கம்பேனியில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்லி அறிவுரை செய்துள்ளது இந்திய அரசு. இதன் மூலம் அதனது லாபம் 20% அதிகமாகும் என்று இந்த அறிவுரையை சொல்லியுள்ளது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு இன்னும் வரவில்லை என்று நாம் எண்ணியிருந்த வேளையில் மேலே பதியப்பட்டுள்ள சத்யம் ஊழியரின் தற்கொலை செய்தி வெளி வந்துள்ளது. அவரை வேலையை விட்டு தூக்கியதால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவருகிறது.

எந்தளவுக்கு இந்த அரசு IT ஊழியர்களையும், இந்திய தொழிலாளர்களையும் கேவலமாக, முதுகெலும்பு அற்றவர்களாக நினைத்திருந்தால் 10,000 பேரை வேலையை விட்டு தூக்கிவிட அறிவுரை சொல்லியிருக்கும். மோசடி செய்தவனெல்லாம் சொகுசாக வலம் வருகிறான். வயிற்றுப் பிழைப்புக்கு கிடைத்த வேலையை செய்யும் சதாரணம் மக்களோ இப்படி உடனுக்குடன் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார், ஓரமா நின்னு பாத்தத்துக்கு தண்டனையாடா என்று அது போல முதலாளிகளின் மோசடிகளை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததற்கு நமக்கு தண்டனையா? இனிமேலும் இதை அனுமதிக்க முடியாது. இவர்கள் இனிமேலும் இந்த நாட்டை அதன் உற்பத்தியை நிர்வாகிக்கும் தகுதியை கொண்டிருக்க முடியாது. நாம்தான், மக்கள்தான் அனைத்தையும் உருவாக்குகிறோம் இதனை நாமேநிர்வாகிப்போம்.

தனிமனித லாப வெறியில் வித விதமாக சூதாடி, மோசடி செய்து, சதி திட்டம் தீட்டி நாட்டை நாசமாக்கும் பன்னாட்டு, தரகு பாகசுர முதலாளிகளை நாட்டை விட்டு விரட்டினால்தான் அனைவருக்கும் விடுதலை. வருத்தபப்ட்ட பாரம் சுமந்தது போதும் IT ஊழியர்களே. உங்களது சகோதரர்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள். சிறிது கண் திறந்து பாருங்கள்.

முதலாளித்துவம் கொல்லும்! கம்யுனிசமே வெல்லும்!!

அசுரன்

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!! 

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!! 

இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!! 

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

 

Last Updated on Thursday, 15 January 2009 07:05