Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் "பாப்பரசர் ஹமாஸ் பிரச்சாரகர்!" - இஸ்ரேல் குற்றச்சாட்டு

"பாப்பரசர் ஹமாஸ் பிரச்சாரகர்!" - இஸ்ரேல் குற்றச்சாட்டு

  • PDF

முற்றுகைக்குள் அல்லலுறும் பாலஸ்தீன காஸா பகுதி, நாஜிகளின் வதைமுகாம் போல காட்சிதருவதாக, வட்டிகான் கார்டினல் ஒருவர் இத்தாலிய பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்று இஸ்ரேலிய அரசை கொதிப்படைய வைத்துள்ளது.

"மனித உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, இஸ்ரேலும் ஹமாசும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்." என்ற பாப்பரசரின் வேண்டுகோளை பிரதிபலித்த கார்டினல், காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி பற்றி கருத்து தெரிவிக்கும் போதே வதைமுகாமுடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு பதிலாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு, "பாப்பரசரும், வட்டிக்கானும் ஹமாசிற்காக பிரச்சாரம் செய்வதாக" குற்றஞ்சாட்டியுள்ளது.(Israel Accuses Vatican of Spouting 'Hamas Propaganda')

 




12 நாட்களாக தொடரும், காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரில், இதுவரை 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதில் 220 பேர் சிறுவர்கள். ( Herald Sun)

 

 

 

 

 

 

இராணுவரீதியாக இஸ்ரேல் மேலாண்மை வகித்தாலும், சர்வதேச பிரச்சார யுத்தத்தில் கடும் தோல்வியடைந்துள்ளது. காஸா பகுதிக்குள் சர்வதேச ஊடகவியலாளர் செல்வதற்கு இஸ்ரேலிய இராணுவம் அனுமதி கொடுக்க மறுத்து வருகின்றது. அதேநேரம் விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களால் கொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்களை கைகளில் ஏந்திய பெற்றோரின் படங்கள், உலக மக்கள் மத்தியில் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது. ஐ.நா.மன்றம் தனது பாடசாலை தாக்கப்பட்டமை குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
UN: No Hamas Fighters in Bombed Gaza School




12 நாட்களாக தொடரும், காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரில், இதுவரை 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதில் 220 பேர் சிறுவர்கள்.

 

 

WARNING
This blog contains pictures of children killed in Israel's attack on Gaza.

 

 

Last Updated on Thursday, 08 January 2009 16:11