Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் அமெரிக்காவிலேயே புஸ் உருவ பொம்மை மீது செருப்பு வீசிப் போராட்டம்! - புஸ் மீது செருப்பு வீசிய முண்டாசருக்குக் குவியும் பரிசுகள்.

அமெரிக்காவிலேயே புஸ் உருவ பொம்மை மீது செருப்பு வீசிப் போராட்டம்! - புஸ் மீது செருப்பு வீசிய முண்டாசருக்குக் குவியும் பரிசுகள்.

  • PDF

அமெரிக்காவிலேயே புஷ்ஷின் மீது வெறுப்பு

உலகத்தின் காவலராக நடந்து கொள்ள முயற்சிப்பது எல்லா நாடுகளின் உள்விவகாரங்களிலும் தலை இடுவது தனக்கு விருப்பமான செயல்களைச் செய்யச் சொல்லி நிர்பந்திப்பது ஈராக் மீதான யுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவின் மீது வெறுப்பில் உள்ளனர்.

உலகெங்கிலும் புஷ்ஷின் மீது காலணிகளை வீசிய முன்தாஸர் அல்ஸெய்டியை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் நடை பெறும் நிலையில் , அமெரிக்காவிலேயே அமெரிக்க வெள்ளைமாளிகையின் முன்பே புதன்கிழமை புஸசின் உருவ பம்மை மீது செருப்பு வீசி போராட்டம் நடைபெற்றது.

அந்தப் புகைப்படங்கள்,

அந்தப் போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள்

*புஷ்ஷே உண்மையான குற்றவாளி*

 

*முன்தாஸர் அல் ஸெய்டி குற்றவாளி அல்ல"

 

" உலகெங்குமுள்ள கோடிக் கணக்கான மக்களின் குரலாக ஸெய்டி ஒலித்துள்ளார் ''

"புஷ் ஒரு யுத்த குற்றவாளி'"

 

"1.5 மில்லியன் ஈராக்கியர்களதும் 4200 அமெரிக்கப் படைவீரர்களதும் மரணத்துக்கு புஷ்ஷே நேரடி பொறுப்பு''

 

" எனவே புஷ்ஷை கைது செய்".

 

"ஸெய்டியை விடுதலை செய்'' .

 

இப்படிப்பட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றது அமெரிக்காவின் அதிபர் மாளிகையின் முன்புஎன்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். புஸசின் உருவ பொம்மைகள் மீதும் காலணிகள் வீசப் பட்டுள்ளன.

 

இந்தப் போராட்டத்தின் போது ஈராக் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பெயர் விபரங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. நிருபருக்குக் குவியும் பரிசுகள்:

 

ஈராக் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ஊடக நிருபர் முண்டாசர் அல் ஜெய்தி புஷ் மீது காலணிகளை வீசினார்.

 

இதில் புஸ் காயம் அடையாமல் தலையை குனிந்து கொண்டார். நிருபர் முண்டாசர் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்த போதிலும், அவருக்கு பரிசுகள் குவிகின்றன.

 

அமெரிக்க ஜனாதிபதி மீது காலணிகளை வீசிய இந்த ஈராக்கியருக்கு பரிசுகள் குவிகின்றன. பாகிஸ்தானை சேர்ந்த கோடீசுவரர், 6 கதவுகள் கொண்ட மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்க முன்வந்து இருக்கிறார். லிபியா அதிபர் கடாபியின் மகள் காலணிகளை வீசியவருக்கு மாவீரன் என்று பட்டம் சூட்டி, விருது வழங்குவேன் என்று கூறி இருக்கிறார்.

 

லெபனான் நாட்டு டி.வி. நிறுவனம் ஒன்று, முண்டாசருக்கு புதிய வேலை கொடுக்க முன்வந்து உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒருவர் ரூ.50 கோடி பரிசு கொடுப்பேன் என்று அறிவித்து இருக்கிறார்.

 

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த குரேஷ் கான் புனீரி என்பவர் பகரைன் நாட்டில் தொழில் செய்து வருகிறார். அவர் முண்டாசருக்கு 6 கதவுகள் கொண்ட மெர்சிடஸ் பென்ஸ் காரை வழங்க போவதாக அறிவித்து இருக்கிறார். இந்த காரை எடுத்துக் கொண்டு ஈராக் தலைநகர் பாக்தாத் சென்று, முண்டாசரை சந்தித்து அவரிடம் காரை பரிசளிக்க விரும்புவதாக பத்திரிகை நிருபர்களிடம் அறிவித்தார். அரபு நாடுகளின் பெருமைக்குரிய மனிதராக முண்டாசர் ஆகிவிட்டார் என்றும் குரேஷ் கான் புனீரி கூறினார். முன்தாஸர் அல் ஸெய்டிக்கு காணிக்கையாக, தனது 20 வயது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்போவதாக எகிப்திய தந்தை ஒருவர் அறிவித்துள்ளார்.

 

அவரது மகள் அமால் சாத் குமா நேற்று ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு அளித்த பேட்டியில், ""நான் இதை எனக்குக் கிடைத்த கௌரவமாக உணர்கிறேன். நான் அந்த மாவீரருடன் இணைவதை மிகவும் விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார். அவரது தந்தை தனது மகளுடன் அவர்களின் திருமணத்துக்கு தேவையான அனைத்தையும் அவருக்கு வழங்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

 

அமால் சாத் குமா, மத்திய எகிப்திலுள்ள மின்யா பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் மாணவி. அதே போல அமெரிக்க ஜனாதிபதி மீது ஊடகவியலாளர் ஒருவரால் காலணிகள் வீசப்பட்ட இந்த சம்பவமானது, ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சிகளில் நகைச்சுவைக் கட்சிகளாக மாறி விட்டன.

 

நிஜத்தில் காலணி வீச்சிலிருந்து புஸ் குனிந்து தப்பியபோதும், இந்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அமெரிக்க ஜனாதிபதியின் முகத்தின் மீது காலணிகள் விழுவது போல காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு ஆப்கானிஸ்தானத்தில் கிடைத்த வரவேற்பில் இருந்தே அமெரிக்காவின் மீது, அதன் அதிபர் புஸ்சின் மீதும் மக்களுக்கு உள்ள கோபத்தை உணர முடிகிறது.

 

இந்த சம்பவங்கள் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் அமெரிக்க அதிபர் மீதான கோபம் வெளிப்பட்டு உள்ளதுமட்டுமின்றித் தனது உள்நாட்டிலேயே எந்த அளவுக்கு வெறுப்பை சம்பாதித்து உள்ளார் அமெரிக்க அதிபர் புஸ் என்பதைஉணர முடிகிறது. இவரின் நிலையைப் பர்ர்த்த பிறகாவது அடுத்து வரப் போகும் அமெரிக்க அதிபர் அடக்கி வாசிக்கிறாரா? அல்லதுஅவரும் இவரைப் போல வெறுப்பை சம்பாதித்து அவமானப் பட்டு நிற்கப் போகிறாரா? என்பதுப் பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும்..

 

http://arivili.blogspot.com/2008/12/blog-post_7505.html&type=P&itemid=86622

Last Updated on Friday, 19 December 2008 18:15