Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2

  • PDF

மார்பகப் புற்று நோயின் வகைகள்:-

 


மார்பகப் புற்று நோயில் பல வகைகளுண்டு. எளிய வகைகள் கிழே தரப்பட்டுள்ளன.

 

1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.

2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.

3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும் பரவும் அபாயம் உருவாகிறது.

 

மார்பகப் புற்றுநோயின் படி நிலைகள் (stages)


மார்பகப் புற்று நோயில் நான்கு படி நிலைகள் உள்ளன.

1. முதல் படி நிலை:-

முதல்படிநிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னம் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றம், கட்டியின் சுற்றளவு 2,5 செ,மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.

2. இரண்டாம் படி நிலை:-

அக்குளின் கீழேயுள்ள நெரிக்கட்டி (நிணநீர்கட்டி) களில் புற்று நோய் பரவி விட்டது என்றம் மார்பகக் கட்டியின் சற்றளவு 2..5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

3. மூன்றாம் படி நிலை:-

பொதுவாக மூன்றாம் படிநிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் இதில் ஈடுபட்டுள்ளது என்றம் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

.

4. நான்காம் படி நிலை:-

இந்த நான்காம் படி நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோநய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்(நெரிகட்டிகள்)கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.



மீண்டும் வரும் புற்று நோய் (
Recurrent Cancer)

மீண்டும் வரும் புற்றுநோய் என்றால் துவக்க மருத்துவத்திற்குப் பின்னரும் மீண்டு வரும் நோயாகும். மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.

 

 

அறுவை மருத்துவம் என்றால் என்ன?


கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனை காலையில் நடந்த பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள படி நிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறம். இந்த மருத்துவம் மார்பகத்தில்ம்ட்டும் அல்லது சிஸ்டமிக்( முழு உடலுக்கும்) கொடுக்கும் முறையில் இருக்கும். ஒருவர் ஒன்று அல்லது பல மருத்துவங்களை பெறுவார்.

 

தொடரும்

http://ruraldoctors.blogspot.com/2008/12/2.html

Comments  

 
#1 செபாஸ்டியன் 2012-05-23 19:05
நேர்மையான மருத்துவர்கள் பேச:


Dr டாக்டர் பிராடி தகுதிகள்: ஊட்டச்சத்து மற்றும் சுயதாக்குதல் துறையில் செயல் மருத்துவம் செயல் இம்யூனாலஜி நரம்பியல் செயல்பாட்டு நோய் நாடல் வல்லுநர் சான்றளிக்கப்பட் ட சிரோபிராக்டிக் நரம்பியல் செயல்பாட்டு முறைகள்

MMS குளோரீனீரொட்ச ைட்டு டாக்டர் பிராடி ஹர்ஸ்ட் ட்ரூ உடல்நலம் மையம் - YouTube


A Conscientious Doctor Comments On Mms Një Komente ndërgjegjshëm mjek MMS

MMS உலக:http://2012mmsthrive.blogspot.fr/2012/05/100-cuddling-dyscrasic-osteosarcoma.html
Quote
 

Add comment


Security code
Refresh