Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல்

பேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல்

  • PDF

தமிழ்மக்களின் உரிமையை எப்படி 'அரசியல் நீக்கம்" செய்வது என்பதை, அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பலிடம் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். அண்மையில் குமுதம் வெளியீடான தீராநதியில், 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே" என்ற தலைப்பில் ஷோபாசக்தியின் பேட்டி ஒன்றை அ.மார்க்ஸ் எடுத்து வெளியிட்டு இருந்தார். இதை அவர் 'வெறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கின்றேன்" என்ற அ.மார்க்ஸ் குறிப்புடன் அது வெளிவந்துள்ளது.

 

 

இவர்கள் தமிழ் மக்களுக்கு முன்னால் வைக்கும் தீர்வு என்ன? ஏகாதிபத்தியமும், இந்தியாவும், ஏன் பேரினவாதமும் எதைக் கோருகின்றதோ, அதைத்தான் இந்தக் கும்பல் பின்கதவால் வைக்கின்றது. அதைச் சொல்லும் விதம் தான் வேறு. 'ஏராளமான விலையைக் கொடுத்து விட்டோம். 'பாராளுமன்றம் பன்றிகளின்  தொழுவம்" என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை. ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, அனைவருமே ஜனநாயக அரசியல் நெறிகளுக்குத் திரும்பவேண்டும்…" என்கின்றார் ஷோபாசக்தி அன்ட் அ.மார்க்ஸ் கம்பனி. இதைத்தான் பேரினவாதம் அன்று முதல் இன்று வரை கூறுகின்றது. இந்தியாவும் இதைத் தான் கூறுகின்றது. ஏகாதிபத்தியம் இதைத்தான் கூறுகின்றது.

 

இதன் மூலம் தான் தமிழ் மக்களின் உரிமையை 'அரசியல் நீக்கம்" 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே" என்பதானால் அடையமுடியும் என்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்கள் தம் உரிமையை வென்றெடுக்க முடியும் என்கின்றனர். ஆயுதக் கலாச்சாரத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பாதது தான், இலங்கையின் பிரச்சனையாக கூறுகின்றனர். 

 

வேடிக்கை என்னவென்றால் கருணாவும், பிள்ளையானும் கூட இதைத்தான் கூறுகின்றனர். இப்படி இலங்கை அரசினதும், கருணா-பிள்ளையான் கும்பலினதும் அடிவருடிகளாக சோபாசக்தி தலைமையிலான கூட்டுக்கலவிக் கும்பல் குலைக்க வெளிக்கிட்ட பின்பு, 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" அல்ல என்கின்றது. இது தன்னை மூடிமறைக்க தலித்தியம் பேசுகின்றது. இலங்கை அரசின் எடுபிடியாக உலாவுவதால், ஆயுதத்தைக் கைவிட்டு 'பாராளுமன்ற ஜனநாயகத்தை கைக்கொள்ளும்படி, அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பலும் கூறுகின்றது. இதன் மூலம் இவர்கள் பேசும் தலித்தியம் என்பது, அந்த மக்களின் விடுதலைக்கானதல்ல. மாறாக 'அரசியல் நீக்கம்" செய்தபடி, இலங்கை அரசின் எடுபிடிகளாக இருப்பதை மூடிமறைக்க உதவும் மூடுபொருள் தான் தலித்தியம்.

 

இந்தக் கும்பல்  'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்று கூறமுடியாது என்கின்றது. பாராளுமன்ற பன்றித் தொழுவத்தில் கூடுவது தான், மக்களின் விடுதலைக்கான பாதை என்கின்றது.

 

கூட்டுக்கலவியை இலட்சியமாக கொண்டு, பெண்களை வளைக்க நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு அலையும் இந்தக் கும்பல், பன்றிகளின் தொழுவமான பாராளுமன்றத்துக்கு புனிதப்பட்டம் கட்டுகின்றது. இதன் மூலம் இந்தக் கும்பல் என்ன சொல்கின்றது. ஆயுதமேந்தியுள்ள தமிழர்கள் தான், முழு மனித இழப்புக்கும் காரணம் என்கின்றது. அதாவது இதனால் 'ஏராளமான விலையைக் கொடுத்து விட்டோம்" என்கின்றது.

 

பாராளுமன்ற ஜனநாயகத்தில் உள்ளவர்கள் மனித அழிவைச் செய்யவில்லையா? ஜனநாயக வழியில் உள்ள பாராளுமன்றம் ஊடாக நடத்தும் இனவாத யுத்தம் என்ன?  புலிகள் முதல் ஆயுதம் எந்திய குழுக்கள் கொன்று குவித்ததை விட, பல மடங்கு மனித படுகொலைகளை செய்தவர்கள் தானே, இந்த ஜனநாயக வழியில் உள்ள பாராளுமன்ற பன்றிகள். இவர்கள் தான் மொத்த மனித சீரழிவை உருவாக்கியவர்கள். இந்தக் கொலைகார ஜனநாயகத்தை நியாயப்படுத்தும் கைக்கூலிகள் தான் 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" அல்ல என்று கூறி, அதை தம்மைப்போல் ஏற்று வாழ அழைக்கின்றனர். இப்படி 'அரசியல் நீக்கம்" செய்யப்பட்ட பின்நவீனத்துவ லும்பன் தனம் பேரினவாதமாக இன்று புழுக்கின்றது.

 

அன்றைய இயக்கங்கள்; பற்றி குறிப்பிடும் போது 'இவர்கள் தாங்கள் வைத்திருந்த இடதுசாரி, சோஷலிசக் கருத்தாக்கங்களை ஒவ்வொன்றாகக் கைவிட்டுக்கொண்டே வந்தார்கள்." என்று அதை 'அரசியல் நீக்கம்" என்று கூறும் இவர்கள், இன்று அதையே செய்கின்றனர். 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" அல்ல என்று கூறிக்கொண்டு, புலியை விமர்சிக்க பயன்படுத்தி இடதுசாரி, சோஷலிசக் கருத்தாக்கங்களை கைவிட்டு அரச கைக்கூலிகளாக தம்மைத்தாம் 'அரசியல் நீக்கம்" செய்தபடி குலைக்கின்றனர்.     

 

பாராளுமன்ற ஜனநாயகமே ஆயுதமேந்தியதை விட சிறந்தது என்கின்றனர். அதுவே அமைதியைக் கொண்டு வரும் என்கின்றனர். இப்படி 'அரசியல் நீக்கம்" செய்த இந்த ஜனநாயக பாராளுமன்றம் 1971, 1978-1979 காலத்திலும் ஜே.வி.பியின் பெயரில் பல பத்தாயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்தது. இந்த பாராளுமன்றம் தான்;, 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களையும் கொலை செய்தது. இப்படி இருக்க, 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே" என்று கூறிக்கொண்டு, பாராளுமன்ற பன்றிகளாகி கொலை செய்யக் கோருகின்றனர் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல். கூட்டுக்கலவியையே இலட்சியமாக கொண்டலையும் இந்த கும்பலுக்கு, வேறு அரசியல் போக்கிடம் கிடையாது. தொட்டுக்கொள்ள தலித்தியம், பின்நவீனத்துவம்.

 

கூட்டுக்கலவி மயக்கத்தில் இருந்து எழுந்து அலம்பும் போது 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" அல்ல என்கின்றனர். இப்படி 'அரசியல் நீக்கம்" செய்தபடி, அனைவரையும் இலங்கை பாராளுமன்றத்தில் கைக்கூலிகளாக, தம்மைத்தாம் தம்மைப்போல்  'அரசியல் நீக்கம்"  செய்ய அழைக்கின்றனர்.

 

இதற்கு மாறாக தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை கைக்கொள்ளும்படி கோரவில்லை. தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரித்து போராடும்படி கோரவில்லை. தமிழ் மக்களை நேசிக்க கோரவில்லை. மாறாக பாராளுமன்ற பன்றிகளாக மாறும்படியே கோருகின்றனர். இதுதான் தமிழ் மக்களை நேசிக்கும் அரசியல் வழி என்கின்றனர்.  தமிழ்மக்களின் சுயநிர்ணயத்தையும், அவர்களின் உரிமையையும் கைவிட்ட, அரச எடுபிடிகளாக குலைக்கின்ற இந்த கும்பல், 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை." என்கின்றது. அதனால் தான் மக்களின் உரிமையைக் கோருவதை, தாம் இழந்துவிட்டோம் என்கின்றது. எப்படித்தான் சக்தி இருக்கும்?

 

கூட்டுக்கலவிக்காவே அலையும் போது, ஒரு பெண்ணுடன் பலர் படுத்து புரள்வதும், கூட்டாகவே ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவதும் வாழ்வான பின், சக்தி எப்படித் தான் இருக்கும். இப்படி மக்களின் வாழ்வு வேறு, உங்கள் வாழ்வோ வேறு. இலங்கை அரச எடுபிடிகள் எல்லாம் ஒன்றாக கூடினால், 'கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை." என்றுதான் கூறமுடியும். 'பாராளுமன்றம் பன்றிகளின்  தொழுவம்" அல்ல, அங்கும் கூட்டுக்கலவியை நடத்த அழைக்கின்றனர்.   

  
இதற்கு தலித் கோசம். அரச கைக்கூலிகளாக குலைக்கும்போது, புலிகளின் படுகொலை அரசியலை 'அரசியல் நீ.க்கம்" செய்து அதை தலித்தாக திரித்துப் பார்க்கும் பேரினவாத தர்க்கம். புலியின் படுகொலை என்பது, 'அரசியல் நீக்கம்" செய்யப்பட்ட வெறும் தலித்தியமல்ல. இப்படி திரிப்பதன் மூலம், அது கொண்டுள்ள வலதுசாரிய பாசிச யாழ் மேலாதிக்கத்தை மூடிமறைப்பது தான். புலியின் அரசியல் என்பது, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையுமே அது தனது எதிரியாக இனம் காண்கின்றது. அந்த வகையில் பல ஆயிரம் கொலைகளை செய்துள்ளது. இப்படி அந்த பொது அரசியல் தளத்தை ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நின்று எதிர்க்க தயாரற்று, 'அரசியல் நீக்கம்" செய்தபடி பேரினவாத அரசுக்காக குலைப்பதைத்தான் தலித்தியம். அதுதான் பாராளுமன்ற பன்றித்தனத்தை வழிகாட்டுகின்றது.

 

 

பி.இரயாகரன்
04.11.2008

Last Updated on Tuesday, 04 November 2008 20:04