Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பெண்கள் ஆண்களின் அடிமை அல்ல, பெண்கள் போராடவும் தலைமை தாங்கவும் தகுதியுடையவர்களே.

பெண்கள் ஆண்களின் அடிமை அல்ல, பெண்கள் போராடவும் தலைமை தாங்கவும் தகுதியுடையவர்களே.

  • PDF

"துயரம் மலையளவுதான், ஆனால் மௌனம் காத்தல் சாத்தியம் இல்லை"" என தலைப்பிட்டு ராதிகா குமாரசாமி சரிந.pகர் 118இல் எழுதியுள்ள விமர்சனம் தலையங்கத்திற்கு எதிராகவே உள்ளது.

 

தமிழ் இனத்தின் துயரம் என்பது மௌனத்தை சாத்தியமாக்கவில்லை. மாறாக போராட முன்தள்ளுகின்றது. அப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக வெடிக்கின்றது. மனித இனத்தின் எல்லா வரலாறும், ஏன் எல்லா உயிர் வாழ்வும், ஏன் எல்லா உயிரினமும் போராடியே வாழ்கின்றன. ஆகவே போராட்டம் என்பது மனிதனின் தவிர்க் முடியாத வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை ஆகும். இதை இன்று ஏகாதிபத்தியம் மறுதலிக்க, மக்களை பண்ணை மாடாக்க முனைகின்றது.


இன்று புலிகளில் இனைந்து போராடும், பெண்கள் போராட்டம் அதற்கு உள்ளடங்கியதே ஆகும். புலிகளின் அரசியலும் அதனால் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் என்பது ஒரு மனித இனத்தின் போராட்டத்தை மறுதலிப்பதுக்கு இட்டுச் செல்ல முடியாது. மாறாக அது விமர்சனாத்திற்குரியது.

 

அடுத்து ஓர் இடத்தில் ""முழு உலகையும் எடுத்துக் கொண்டாலும் சரி, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனித உரிமைகளை ஈட்டிக் கொள்வதற்கு எதிராக பெரும் தடைக் கற்றளாக உள்ளவை மத, இனத்துவ மற்றும் தேசிய வாதத் தத்துவார்த்தங்களே இந்த யதார்த்த நிலையை"" எனக் குறிப்பிட்டு இவர் கருத்துக் கூறுகின்றார்.

 

இந்த பிரதான கூற்றுதான் இக்கட்டுரையின் மையமாகும். தேசிய, இன, மதத்திற்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் யார்? வல்லவனின் ஒஐக்கு முறைக்கு எதிரான ஒடுக்கப்படும் மக்களின் குரல்களே. இன்று உலக மக்களின் சனநாயகத்திற்கு, சமாதானத்திற்கு சவால் விடுகின்றது எனக் கூறுவது இன்றைய உலகில் ஒற்றைப் பொருளாதார ஒழுங்கை பாதுகாக்கக் கோருவதே யாகும்.

 

இன்று உலகில் சமாதானத்துக்கு, ஜனநாயகத்திற்கு சவால் விடுபவர்கள் உண்மையில் மேல்நிலை வல்லரசுகளே. அதை மறுத்து அதற்கு பூச்சடிக் விரும்பும் இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய, இன, மத உணர்வுகள் மீது சுமத்தி விடுவது என்பது ஆபதத்தானதே. 



இன்று உலகில் எப்பத்திலும் எழும் மத, இன, தேசிய, நிற வாதத்தை எடுப்பின், அதன் பின்னனியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேல் நிலை வல்லரசுகள் மிகத் திட்டமிட்டு இயங்குகின்றன. இந்த நெருப்பில் குளிர்காயும் ஏகாதிபத்தியங்கள், அதையே இவர்கள் மீது குற்றச்சாட்டாக மீள வைக்கின்றனர். அதை நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்வைக்கின்றனர். அதையே ராதிகா குமாரசாமியும் செய்கின்றார் என்பதை மேற்கூறிய வாதம் தெளிவாக்கிறது.

 

அடுத்து இவர் குறிப்பிடுகிறார் ""இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேணஇடும் எனில் வன்முறைப் போராட்டமே சட்ட நிலைத் தகவுள்ள வழி என்று  .......""  எனக் கூறி ஆயுதப் பொராட்டத்தை எதிர்க்கும் இவர் ஆயுதத்தைக் கைவிடக் கோருகின்றார். இலங்கையில் ஆயுதப் போராட்டம் அல்லாத மாற்று வழியை முன்வைக்கின்றார். 1948 முதல் அவர் காட்டும் உதாரணத்தை மட்டம் கட்டுரையில் காணவில்லை. ஏன்? ஆயுதப் போராட்டம் மாற்று வழி இன்றித்தான் உருவானது என்பதை சிங்கள இனவாதிகள் மறுப்பது போல் இவரும் முறுப்பதுதான் வேடிக்கை.

 

ஆயுதப் பொராட்டம் தமிழ் மக்கள் மாற்று வழி இன்றித் திணிக்கப்பட்டதே ஒழிய தாமாக வரிந்து கொண்டல்ல. இதில் ஆண் போராடினால் என்ன, பெண் பொராடியால் என்ன அது தமிழ் மக்கிளன் போராட்டமே ஒழிய அதைத் தனித்தனியாக வேறுபடுத்தி அடையாளப் படுத்துவது அவசியமில்லை. ஆனால் அப்போராட்டத்தின் அரசியல் என்ன என்பது மட்டுமே ஆண் பெண்ணின் பண்பியல் மாற்றத்தை மாற்றுகின்றது.

 

""........ அவர்கள் தமது பெண்மையைக் கைவிடும் பலவந்தம் ஏற்படுகின்றது..."" எனக் கூறி பெண்மை என்பதை நியாயப்படுத்த விரும்புகின்றார்.  பெண்மை என்பது ஆண்டாண்டு காலமாக ஆண்ணளால் உருவாக்கப்பட்ட வரையறையே ஒழிய பெண்களால் உருவாக்கப்பட்ட வரையறை அல்ல. பெண் நிலைவாதியான இவர் அதைக் காண மறுப்பது ஏன்? பெண்மை என்பது ஆண்களால் திணிக்கப்பட்டதே ஒழிய, பெண்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரிவோ, மக்களின் இயன்பான கண்டு பிடிப்போ அல்ல.

 

""......... சங்க கால இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்ற ராகவன் அவர்கள் கன்னிப் பெண்கள் எதிரியுடன் போர் புரிவதற்கென உண்மையில் ஒரு முறைமை ரீதியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு முன் நிகழ்வைக் கூற முடியுமா?"" எனக் கோட்டு சவால் விடுகின்றார்.

 

ஒரு பெண் நிலைவாதி அதுவும் பெண்ணாக இருந்து இக்கோள்வியைக் கேட்பது  எனக்கு அதிர்ச்சியை ஊட்டுகின்றது. மனித இனத்தின் அரம்பத்திலேயே பெண்கள் தலைமை தாங்கியதும் மற்றைய குழுக்களுடன் யுத்தத்தில் ஈடுபட, பெண் உட்பட பெண் தலைமையில் போராடியது மனித இன வரலாறு. சங்க கால இலக்கியம் என்பது பெண்கள் அடிமையாக்கப்பட்ட பின் எழுதப்பட்டதே ஆகும். அப்போது பெண்கள் பிள்ளை பெறவும், Nணை மகிழ்சிக்கவும், அணுக்கு செவை செய்யவும் என வரையறுக்கப்பட்ட பின் எழுதப்பட்டதே சங்க கால இலக்கியமாகும்.

 

கி.மு. 300 வருடங்களில் இருந்த சமூக அமைப்பில் பெண்கள் யுத்தத்தில் ஈடுபட்டழதயும், தலைமை தாங்கியதையும் கொண்ட கல்வேட்டு நூல்கள் இன்னும் உள்ளது. "சிந்து முதல் கங்கை வரை"  என்ற கல்வேட்டு நூலைப் படித்துப் பாருங்கள். அதில் எப்படிப் பெண் இருந்தாள் என்பதையும், பல்வேறு சமூகக் கூட்டத்தில் பெண்ணின் பாத்திரம் சிலவேளை உங்கள் கட்டுரையை தலைகீழாக மாற்றி விடும். பெண்கள் எப்படி இருந்தனர், தலைமை தாங்கினர், போராடியர் என்பது தெரிந்து கொள்வதும் அதன் அடிப்படையில் போராட்டங்களைக் காண்பதும் முன் நிபந்தனையாகும். அதனுடாக அரசியலைப் பார்ப்பதும், அதை விமர்சிப்பதும் அடிப்படை யாகின்றது.

Last Updated on Friday, 18 April 2008 18:25