Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

  • PDF

 


எப்பொழுதுமே நமது கணினியானது ஹார்டு டிஸ்க் ( வன் வட்டு ) கின் உதவியில் பூட் ஆகி இயங்க ஆரம்பிக்கும். பூட் என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.

ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி பூட் ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது ஃப்ளாப்பி,சிடி,டிவிடி வாயிலாக பூட் செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.

ஆனால் பல நேரங்களில் நம்மிடம் பூட் ஃப்ளாப்பியோ, வேறு பூட்டிங்க் நினைவகங்களோ இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் யுஎஸ்பி கருவிகள் கண்டிப்பாக இருக்கின்றன. ஐபாடு,யுஎஸ்பி நினைவகம், செல்போன் எனப் பலவித நவீனக் கருவிகளை இவர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம்.

இந்த இயங்குதளத்தை உங்கள் யுஎஸ்பி நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை பூட் செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த யுஎஸ்பியில் இருந்தபடி பூட் செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.

கோப்பு இங்கே

வின்ரார் கொண்டு இதை விரித்தெடுத்தபிறகு கிடைக்கும் Readme.txt கோப்பைப் படித்து அதன்படி செயல்படவும்..

குறு நுட்பங்களைத் தெரிந்துகொள்ள

 

http://tamizh2000.blogspot.com/2008/09/blog-post_18.html