Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் நிதானம் இழந்த எழுத்துக்களும், திரித்த எழுத்துக்களும் வெறும் வம்பு விவாதம் தான்

நிதானம் இழந்த எழுத்துக்களும், திரித்த எழுத்துக்களும் வெறும் வம்பு விவாதம் தான்

  • PDF

எக்சில் 6 இல் நிதானம் இழந்தோ அல்லது திரித்தோ (இதில் எந்த நிலையில் இருந்த எழுதினர் என்பது எமக்கு தெரியவில்லை.) சேணன் கூறுவதைப் பார்ப்போம்;. "புலம் பெயர் இலக்கியக்காரரயும் பழைய இயக்கக்காரராயும்

இருக்கும் றயாகரன் , அசோக் கூட்டு முயற்சியில் வெளியிடப்பட்டது "ஓர் சமூகச் சீரழிவின் தொடக்கம் .." துண்டுப்பிரசுரம் அவர் தம் ஸ்டாலினிசப் பார்வையில் (வெளியில் சொன்னால் வெட்க்கம்) கலாச்சாரச் சீரழிவின் உச்சக கட்டமாகவும் விளங்குகிறதாம்  கண்ணன் பற்றிய எமது துண்டுபிரசுரம்" எனக் கூறி தொடர்ந்தும் கண்ணன் பற்றி நாம் எழுதவில்லை என வேறு புலுடாவிடுகின்றார். இப்படி எழுதுவது மாபெரும் மோசடியாகும்; எமது துண்டுப் பிரசுரம் கண்ணணுக்கு இவர்கள் வெளியிட்ட விளக்கமற்ற, அரசியல் அற்ற துண்டுப்பிரசுரம் மீது செய்யப்பட்டது அல்ல. மாறாக இருள்வெளி மலர் மீதான இருள் வெளி (வசந்தகால ஓன்றுகூடல்?, யை நோக்கி, யிலிருந்கு திரும்பவும், யில் சுகிக்கவும்) கோரி வெளியிட்ட துண்டுப் பிரசுரம் மீதுதான் எமது துண்டுப்பிரசும் வெளியானது. எமது துண்டுப் பிரசுரத்தில் பார்வைக்காக இருள்வெளி துண்டுப் பிரசுரத்தை மீளப் போட்டு இருந்தோம். ஏன்என்றால் திரிப்பதை தடுக்கவும், வாசகர் சொந்ததில் இதைப் புரிந்து கொள்ளவும்.

 

இப்படி இருக்க கதை அளந்து மாற்றுவது ஏன்? இப்படி சேணன் அம்மாவில் செய்துள்ளார். சொல்லாதை சொன்னதாக சொல்லியே அரசியல் பிழைப்பு நடத்தவது கேவலம். முதலில் விடையத்தை சரியாக கிரகரிக்கவேண்டும்;. இல்லாத விவாதங்கள் அர்த்தமற்ற சேறுகள்தான்.


அடுத்து கண்ணன் எழுதிய கதையை விமர்சிக்கவில்லை என்பது எப்படி எடுகோளாகும். எல்லாவற்றையும் எல்லோரும் விமர்சிக்கமுடியுமா? ஏன் நீங்கள் தமிழ் மண்ணில் மாறுக்கப்பட்ட சனநாயகம் பற்றி எங்கேயும் இதுவரை வாயே திறக்காத மர்மங்களில் இருந்தபடி மற்றவர்களை பழைய இயக்கக்கரார்கள் எனச் சொல்வது கேவலாமாகும். அத்துடன் சனநாயகம் மறுக்கப்பட்ட மண்ணில்  சரி, பின்னால் சரி என்னதான கிளித்துள்ளிர்கள். பரிசில் தலித்தாக முன் மக்களுக்கு என்னதான் பிரச்சனை எனக் கேட்ட நீங்கள் தலித் எதையும் மாற்றாது என்று தெரிந்தவுடன் அதில் தொங்கிய படி மாற்றவர் மீது குற்றம் சாட்டுவது கேவலம் ஆகும்;. நான் இயக்கத்தில் இருந்த போது மக்களின் சனநாயகத்துக்காக, பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக, சாதியத்துக்கு எதிராக எல்லாம் போராடினோம். ஏன் இயக்கத்தில் இருக்கவும், போராடவும் கூடாது என்பதற்காவே சனநாயகம் மறுக்கப்பட்டது. இதைத்தான் இன்று நீங்கள் கோட்பாட்டிலும், நடைமுறையிலும் எம்மை நோக்கிச் செய்கின்றிர்கள். இதைத்தான் மக்கள் "எந்த அமைப்பிலும் சேர்ந்து போராட உரிமை வேண்டும்" என்று கோசம் வைத்து போராடினர்.

 

கண்ணனை விமாசிக்கவில்லை என்பது உண்மையா? நான் கண்ணையும், இது போல் எழுதிய வேறு சிலரின் வக்கிரமான பாலியல் எழுத்துகளை எல்லாம் விமர்சித்து எழுதியிருந்தேன். பார்க்க சமர். இப்படி எழுதியிருக்க, அதே நேரம் எமது துண்டுப் பிரசுரம் சம்மந்தமே இல்லாத விடையத்தை எடுத்து முடிச்சு போட்டு கதையளப்பது வம்பளப்புதான்.

 

ஸ்ராலின் எனச் சொன்னால் வெட்கம் என்கின்றார். ஆம் மூலத்தனக் கனவான்களுக்கும், அதை அண்டி நக்கி பிழைத்து திரிந்த முதுகெலும்பற்ற ஐடங்களுக்கும் ஸ்ராலின் பெயர் சிம்ம சொற்பனமே. பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்கங்களின் கனவுகளை சிதைத்தால், அதன் மீதான அச்சம் கூடிய ஏகாதிபத்திய அவதூறுகளை நக்கிய இன்றை பூர்சுவா ஆதிக்க உலகம் ஸ்ராலின் மீது பொலியும் அவதூற்றை மீறியும்  ஸ்ராலின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் வாழ்வது கண்டு எழும் வெப்பியரம்தான் சேணனின் பாட்டாளி எதிர்ப்பு புலம்பல்கள்.

 

அடுத்து "தான் வெள்ளாளன் என்பதைக் குறிப்பிட்டு எனது ஊர் பள்ளர் பள்ளிகளைச் சபைக்கிருத்தினேன் (உயிர்நிழல்) என்று வெள்ளாளத்திமிரைக் காட்டுகிறார்." என சேணன் என் பற்றி கூறி புல்லாரிக்க வைக்கின்றார். நானா என்னை வெள்ளான் என்று சொன்னேன். இல்லையே நீங்கள் எடுத்தக் காட்டும் ஷோபா சக்தி எனக்கு சேறுவீச வெளியிட்ட நினைவுக் கல்வெட்டில் எனக்கு சாதித் தடிப்பு என எழுதிய போதுதான் என்னை சாதியின் பெயரால் அடையாளம் காட்டினர். இதில்தான் எனது போராட்டத்தை பற்றி எழுதினேன். எனது குடும்பம், எனது உறவினரை எதிர்த்து எனது சொந்த ஊரில் மக்களுக்காக போராடியது என்பது எனது சாதித்தடிப்பில் அல்ல. நான் சாதி கடந்து திருமனம் செய்தது சாதித் தடிப்பில் அல்ல. தலித் எப்படி சாதியை ஒழிக்கும் எனக் கேட்டால் வெள்ளாத் திமிர் என முத்திரை குத்துவீர்கள் எனக் குறிப்பிட்டே இதை முன்வைத்தேன். அதே போல் மிளவும் வெள்ளாத்திமிர் என்கின்றார் சேணன். நான் ஊரோடு சம்பந்த மில்லாத இடத்தில் புரட்சி பேசவில்லை. மாறாக குடும்பத்தில், உறவினர்க்குள், சுற்று வட்டராத்துக்குள் போராடியவன்;. இந்த இடத்தில் சேணன் பரிசில் இலக்கியம் பேசி தலித்தாகிய போது சொந்தத்துக்குள் இவைஎல்லாம் பேசுவதில்லை. சொந்தத்துக்குள் பார்பனிய மந்திரம் கூற பயபக்தியாக அமர்ந்து சாதியப்படி சாதிக் கடமைகளை வெட்கம் இன்றி செய்து ஊர்க்கு நல்ல சாதிப் பிள்ளையாக உருண்டவர். மற்றவர்களிடம் பார்ப்பணிய ஒழுங்கு தகர்க்க பிரகடனம் செய்தபடி ஊருக்குள் சாதிய கடமைகளை வழுவாது பரிசிலும், nஐர்மனியிலும் சிரமெந்தி ஒழுங்கு உட்பட்டு திரிந்தவர்தான் இன்று பலர் மீது தாக்குகின்றார். மற்றவர்களின் தவறு என்பது விமர்சனத்துக்குரியதாக இருக்கின்ற போது அதை செய்ய எந்த தகுதியும் நேர்மையும் சேணனுக்கு கிடையாது. ஏன்எனின் ஓரே சாக்கடைதான்;. சாக்கடையில் இருந்தபடி மற்றவனை நோக்கி கைநீட்டி விட்டால் தூய்மையாகி விட்டாதாக காட்டமுனையும் அங்கலாய்ப்புதான் இந்த கட்டுரை.  நான் சொந்த ஊரில் இருந்து எனது முன்னைய பதிலில் நான் முன்வைக்காத பல தாழ்த்தப்பட்ட கிராமத்தில் அவர்கள் உடன் வாழ்ந்தே பேராடினேன். வெள்ளாத்திமிர் என்பது அரசியல் அற்ற வெற்று புலம்பல் உடன் கூடிய பிழைப்புதான்.

 

அடுத்து பாதுகாப்பு கருதி பெயர் குறிப்பிட முடியாத ஒருவர் என குறிப்பிட்டு என் மீது தாக்குதல் தொடுத்து கட்டுரையை முடித்துள்ளர். "தலித்துக்கள் சலுகைகள் கேட்டு புழுத்துப்பெருகுகிறார்கள்" என் குறிப்பிட்டு--- தொடர்ச்சியில் "விளைவுகளை விரைவில் சந்திக்க வேண்டிவரும்" என கல்வெட்டு பாணியில் மிரட்டல் விடுத்து எச்சரித்தும் விடுகின்றார். இப்படி எழுதும் சேணன் நான் எழுதியதை வைத்து பதிலளிக்க வக்கில்லை. வக்கற்றவர் இப்படி எழுதி மிரட்டி எச்சரிக்கமுடியும். தலித்துகள் சலுகைக்கு அப்பால் சாதி ஒழிக்க முடியும் எனின் எப்படி? நான் எந்த சந்தர்ப்பத்திலும் புழுத்துப்பெருகின்றனர் என எழுதியதில்லை. இது அவரின் உள்உணர்வு சார்ந்த உண்மை வெளிப்பாடாகும். ஏன்எனின் தலித் சாதி ஒழிக்காது என்பது நன்றாக தெரிந்து வைத்துள்ள பிழைப்பவாத புத்தியீவியாவர்.. தலித்தைச் சொல்லி அதை பாதுகாப்பது என்பது அடிப்படையில் சாதி அமைப்பை சீர்திருத்துடன் பாதுகாக்க முடியும். இதனால்தான் இந்தியாவில் உள்ள பாhப்பணிய, ஏகாதிபத்திய பாத்திரிகைகள் எல்லாம் தலித் என்ற சொல்லை விசுவாசத்துடன் உயர்த்தி எழுதுகின்றன. தலித் சலுகையை கோரவில்லை என நிறுவி பதிலளித்து இருப்பின் என் கருத்தை மீள் பரிசிலனை செய்து இருப்பேன். இல்லாத வரை என்னதான்; நடைமுறை போராட்டத்தில் ஈடுபட்டாலும்,  சாதி அமைப்புக்குள் சலுகைக்கு அப்பால் இம்மியும் நகராது. இதை மறுத்து நிறுவாத வரை வம்பு விவாதம் கற்பனைத்தளத்தில் மற்றவர் மீது கற்பித்து தொடராத்தான் லயக்கு.

 

குறிப்பு 1: கண்ணன் வாசகர் கடிதம் தொடர்பாக, மொழியில் ஒருமை பாவிப்பது நல்லது அல்ல என்கிறார். மொழியில் நான் தனிநபர் மீது தாக்குதாலாக அரசியலுக்கு வெளியில் பாவித்து இருப்பின் எப்படி என விளக்கியிருக்கவேண்டும். விளக்கியிருப்பின், அது சரியாக இருப்பின் நிச்சயமாக சுயவிமர்சம் செய்து இருப்பேன். மொழியில் ஒருமையை பாவிப்பது சாத்தியமானது. நண்பர்களுக்கு இடையில், எதிரியின் நிலையில் மொழியலில் ஒருமை இயல்பானது. எனது கட்டுரையில் ஒருக்காலும் நான் ஷோபாசக்தியை தனிப்பட்ட எதிரியாக பார்க்கவில்லை. இந்த ஒருமை சொற் பிரயோகம் கட்டுரை எழுதிய பின் கூட பன்மையில் (பன்மையில் உள்ள மொழியியல் பூர்சுவா கண்ணோட்டம் கொண்டவை) திருத்த முடியாத நிலையிலும்,  அரசியலுக்கு வெளியில் தனிநபர் தாக்குதல் உண்டா என்ற தீவிர வாசிப்பின் பின்தான் நான் பிரசுரித்தேன். கட்டுரை எக்காரணம் கொண்டும் தனிநபரைத் தாக்க கூடாது என்பதில் மிக அவதானமாக இருந்தேன்;. எனது விமர்சனம் எல்லாம் என் மீதான தாக்குதல் ஊடாக கடந்த கால சனநாயகப் போராட்டத்தின் மீது இருந்த என்பதால்தான். இது பற்றிய பார்வையை யாருமே கணத் தவறிய அரசியல் என்பது வரலாற்றை இருட்டாக்கி பாதுகாக்கா துனை போதல் ஆகும். அதே நேரம் கடந்தகாலத்தில் சனநாயகத்துக்கான போராட்டத்தில் செய்த தியாகங்கள், போராட்டங்கள் எல்லாவற்றையும் மீள ஒருக்க புதைத்ததுக்குச் சமன்.  கடந்த காலப் போராட்டங்கள் கூட தனிநபர்களை வைத்துவெளிப்படுவதால் (இது இன்றைய குறிப்பான அரசியல் சூழல்) நான் என்னைப்பற்றியும் எழுதுவேண்டியேற்பட்டது. இன்று நான் சரி ஷோபாசக்கி சரி நேரில் சந்திக்கும் போது (அடிக்கடி காண்பவர்கள்) எதிரியாக அணுகுவது கிடையாது.  முன்புபோல் தான் பழகுகின்றோம்.

 

இதுஒருபுறம். ஆனால் இதைச் சொல்லி கண்ணன் தனது அரசியலையும் நியாப்படுத்த முனைகின்றார். எம்மை "தத்துவச் சறுக்கலில்" உள்ளவர் என்று கூறியவர் அந்தச் தத்துவச் சறுக்கல் என்ன எனக் கூறாத விவாதம் அர்த்தமற்றது. எனது கட்டுரை எல்லாப் பிரச்சனை மீதான தத்துவார்த்த  விளக்கத்தை கொண்டாது அல்ல. அவைக்கு சமர் மற்றும் எனது எழுத்துக்களைப் பார்க்க வேண்டும். மாறக சம்பவங்கள் மீதும், அதையொட்டிய கேள்விகளையே எழுப்பினேன். கேள்வி ஷோபாசக்தி மீது மட்டுமல்ல, இப்படி தாத்துவச் சறுக்கல் என கூறுபவர்களையும் நோக்கியே எழுப்பப்பட்டுள்ளது. இதற்க்கு பதில் அளித்த உங்கள் தத்துவ சறுக்கல் அல்லாத வாதங்களை எனது வாதங்கள் மீது வையுங்கள். அடுத்த ஷோபாசக்தி மார்க்சியத்தை கொண்ட தத்துவார்த்த சறுக்கலில் உள்ளவர் என்ற உங்கள் கருத்தில் எப்படி ஷோபாசக்தி மார்க்சியத்தைக் கொண்டுள்ளர் என தத்துவச் சறுக்கல் இல்லாத பார்வையில் வையுங்களேன்;. இல்லாத போனல், போகிற போக்கில் கூறுவது அர்த்தமற்றவை.

 

குறிப்பு 2:ஸ்பாட்டக்கஸ் தாசன் சுகனின் வக்கிரத்தை சனநாயகத்தின் உச்சம் எனக் குறிப்பிட்டு சலுகை வழங்கக் கோரி விண்ணப்பித்து வாக்களத்தை வாங்குகின்றார். இதற்க்கு இவர் கோரிய பெண்களே பதில் அளிப்பர் என்ற நம்பிக்கையில் சிறு குறிப்பொன்றை மட்டும் எழுதுகின்றேன்.

 

"மறுப்பு மறுப்பறிக்கையை எழுதியவுடன் சுகன் இறந்து விட்டான். (படைப்பாளி இறந்து விட்டான்ள் என்ற கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு உள்ளது.) "என்கிறார். இந்த புளிச்சல் கதை எங்கிருந்து வருகின்றது. இன்று உழைக்கும் மக்கள் தாம் உற்பத்தி செய்த பொருட்களுக்கு (தான் படைத்தவைக்கு) உரிமை கோரா முடியாதது எப்படியோ அப்படியே  படைப்பையும் காட்டுகின்றனர். சொத்துடைய வர்க்கம் சொத்தற்ற வர்க்கத்தை மூலதனத்துக்கு அடிபணிய வைத்து இயந்திரத்தக்கும், தொழில் நுட்பத்துக்கும் கீழ்படுத்தி அவன் மூலம் உற்பத்தி செய்த பொருட்களை தனதாக்கி, ஊற்பத்தி செய்தவனை பட்டினியில் சுதந்திர மனிதனாக சித்தரித்து, உற்பத்தியை சந்தையில் (படைப்பாளி இறந்தது போல்) நுகரக் கோரும் சுதந்திரத்தை இலக்கியத்தில் முன்தள்ளுகின்றனர். பொருட்களின் உற்பத்தி என்பது உயிர் உள்ள மனித உழைப்பை பொருட்க்கள் மீது நடத்துவதால் நடக்கின்றது. படைப்பு என்பது உயிர் உள்ள மனித உழைப்புக்கும் பொருள் மீதான சிந்தனைத்தள செயலால் நிகழ்கின்றது. இந்த இடை வெளியை மீறி இதில் வேறுபாடு இருப்பதில்லை. பொருளைப் போல், படைப்பும் பயன்பாட்டில் வர்க்க எல்லைக்குள் சுருங்கி விடுகின்றது. பொருள் மீதான உரிமைக்கும், படைப்பு மீதான உரிமைக்கும் ஒடுக்கபட்ட மக்கள் தமதாக்க போராடுவதுக்கு எதிராக படைப்பை உரிமையில் இருந்து விலக்கக் கோரும் கோசங்கள்  இன்றைய பொருளாதார அமைப்பின் பிரதிபலிப்புத்தான். படைப்பு படைப்பாளியை விட்டு விலக்கவும் முடியாது,. அதபோல் வசகரை விட்டு விலத்தவும் முடியாது. ஆணால் வர்க்க எல்லையை விட்டு விலகிச் செல்லும். இதை மறுதலிக்கவும், எழுதிய ஒடுக்கும் வர்க்க எழுத்துக்களை பாதுகாக்கவும் வைப்பவைதான் படைப்பாளி இறந்த கோட்பாடு.

 

சுகன் பெண்கள் மார்பை இந்தபிடி இந்த பிடி என எழுதியதும், கண்ணன் குத்தீட்டி முலை என எழுதியதும், பாம்பாய் சினிமாவில் பெண்ணின் மார்பை கமரா முன் கொண்ட வந்ததும், சிலுக்கை அiகுறை ஆடையில் நடனம் ஆட விடுவதும், அல்பேனியாவில் பெண்ணை அரைகுறை ஆடையில் விளம்பரக் கண்ணடி முன் நிறுத்துவதும், இதே போல் பிரான்சில் பிரபலமான கடை விளம்பர கண்ணடி முன் இளம் பெண்களை நிறுத்தியதும் (இதற்க்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராடினர்), நோர்வையில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் உணவு பரிமாற வைத்தபோது ((இதற்க்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராடினர்) எல்லாம் ஓரேவகையானது. வித்தியாசம் இடமும், சூழலும் மட்டுமே. ஏன் ஆணாதிக்க நோக்கில் பெண் வேண்டும் எனக் கேட்டதும், புரிசன்சனுடன் நேற்று பிரச்சனையா எனக் கேட்டதும், பெண்கள் இந்தபிடி எனத் திரிபவுர்கள் என பலவாக எழுதிய எழுத்தில் எந்தக் கட்டத்திலும் இந்த ஆணாதிக்கம் பிழையானது என கதை கூறவில்லை. மாறாக இது நியாயமானது என உயர்த்தப்பட்டன. பெண்ணின் உணர்வுகள் அங்கு கொச்சைப்படுத்தப்பட்டு, பெண் ஆணின் போகத்துக்குரியவளாக ஆண் காண்பதை, ஆணுக்கு கிடைக்காத (புலம் பெயர் சமூகத்தின் அதிகமானவர்க்கு சிறப்பான நிலைமை) பாலியல்  பரிதாபத்தில் மழுங்கடிக்கப்பட்டன. ஆணுக்கு இருக்க கூடிய பாலியல் தேவை மறுக்கப்படும் நிலையில் பெண்ணின் உணர்வுகள் அதற்க்குள் சங்கமம் ஆக்கியதுடன், ஆணின் தேர்வை இந்த ஏகாதிபத்திய பண்பாட்டால் நியாப்படுத்திய போதுதான் வக்கிரம் கொப்பளிக்கின்றது.

 

ஸ்பாட்டக்கஸ் தாசன் பிரச்சனையை திசைதிருப்பி உடல் உறுப்புகளை எழுதக் கூடாத என்ற விடையத்துக்கு முடிச்சுப் போடுகின்றார். ஆண், பெண் இந்த உலகத்தில் நிர்வாணமாகவே வாழ்ந்தனர். இன்றும் பல நாடுகளில் காடுகளில், கிராமங்களில் நிர்வாணமாக வாழ்கின்றனர். ஆணால் இந்த நிர்வாணத்தை அந்த சமூகத்தில் வக்கிரத்துடன் அனுகுவதில்லை. ஆணால் எங்கள் சமூகத்தில் பெண்ணை நிர்வாணமாக்க துடிக்கம் வக்கிரம், பார்வை, விளக்கங்கள் எப்படி அணுகுவது. (பெண் செத்த பின் கூட நிர்வாணமக்கும் ஆணாதிக்கம். அதாவது கொல்லப்பட்ட புலி பெண்களை நிர்வாணமாக்கி இலங்கை தொலைக் காட்சி விளம்பரம் செய்து, சிங்கள ஆணாதிக்க ஆண்களை படையில் திரட்ட எடுத்த மறைமுக முயற்சியும் கூட. கைதாகும் புலி பெண் போராளிகளை நிர்வணமாக்கி பெண் உறுப்பை சிதைக்கும் ஆணாதிக்க வீரம் வேறு. இதற்க்கு வெளியில் ஒரு பெண் நிர்வாணமாக (உதாரணமாக கோணேஸ்வரியின் சம்பவத்தை படமக்கல்) அவளின் ஒடுக்குமுறை மீது படமாக்கப்பட கூட முடியும். ஆணால் அதையே ஆணாதிக்க வக்கிரத்தை தூண்டும் பொருளாக, சதைப் பிண்டமாக கட்சிப்படுத்துவதை எப்படி சகிக்கமுடியும். எப்படி மௌனமாக ஏற்றுக் கொள்ளமுடியும். இதே செயல் தளம் உடல் உறுப்புக்கும் பொருந்தும்.

 

சுகனின் ஆணாதிக்க வக்கிரத்தையும், கலாவின் கவிதையையும் முடிச்சுப் போட்டு நிறுவுவது என்பது காதுக்கு பூ வைப்பதாகும். கலாவின் கவிதை பெண் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான கோபக் கனல்;. ஆணால் சுகனின் கதை ஆணாதிக்க வக்கிரத்தை கொட்டி நியாயப்படுத்திய சுகனின் சொந்த வக்கிரங்களே. இங்கு படைப்பாளி இறந்த விட்டான் என்று கூறி பாதுகாப்பது அதே வக்கிரத்தைத் தான். இந்த வக்கிரத்தை அம்மாவில் சேணன் நியாப்படுத்தியற்க்கு 100 பிராங் போத்தலுக்கு அன்பளிப்பு. இந்த நியாப்படுத்தலுக்கு எதாவது உண்டோ?


குறிப்பு:3 ஷோபாசக்தியின் கதை தொடர்பாக ஒரு சின்னக் குறிப்பு. கணவணுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் பெண்ணை வாழ்த்துகிறது கதை. இதுதான் பெண் விடுதலையோ? இதேபோல்தான் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் தமிழ் குழுக்கள். இரண்டும் சராம்சத்தில் பொதுவானவை. இதைத்தான் புலம்பெயர் செக்ஸ்க்கு உண்ணத எழுத்தளார் காட்டும் பாதையாகும். தொடருங்கள் துரோகத்தில் இருந்து. அப்போது துரோகம் புதுத் தத்தவமாகி மக்களை விடுவிக்கும் எனச் சாத்தியம் செய்யமுடியும்;. 

 

Last Updated on Friday, 18 April 2008 18:12