Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் நிலப்பிரபு எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பேரலை

நிலப்பிரபு எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பேரலை

  • PDF

போங்கீர் மாநாட்டிற்குப் பின்னர் பல கிராமங்களில், "சங்கம்'' என்ற பெயரில் ஆந்திர மகாசபையின் கிளைகள் அமைக்கப்பட்டன. கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், கட்டாய வரி வசூலிப்பு மற்றும் விவசாயிகளை நிலத்தை விட்டுப் பலாத்காரமாக வெளியேற்றுவது ஆகியவற்றுக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஒரு பெரும் கிளர்ச்சி தொடங்கப்பட்டது.

கண்துடைப்புக்காக நிஜாம் மாநில நவாப், அரசு சட்டங்களில் மட்டும் சில சலுகைகளை மக்களுக்குக் கொடுத்திருந்தான். ஆனால் இவை கூட ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை. எனவே இச்சமயம் கிளர்ச்சியின் முழு இலட்சியமும் அரசு சட்டங்களாக உள்ள இச்சலுகைகளை நடைமுறைப்படுத்துவதே. கிளர்ச்சி, அரசு சட்டங்களின் எல்லைக்கு வெளியே செல்லவில்லை. கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், நிலத்தைவிட்டு விவசாயிகøளப் பலாத்காரமாக வெளியேற்றுவது ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் சட்டத்தின் அமைப்பைவிட்டு மீறவில்லை.


இச்சமயத்தில் முந்தரை கிராமத்தில் ஒரு நிலப் பிரச்சினை, இயக்கத்தின் பரிசீலனைக்கு வந்தது. கட்டாரி ராமச்சந்திர ராவ் என்னும் மிகப் பிரபல கொடிய மிராசுதாரருக்குச் சொந்தமான 3040 ஏக்கர் நிலத்தை லம்பாடி விவசாயிகள் உழுது வந்தனர். லம்பாடிகளுக்கு கொடுத்திருந்த குத்தகைக் காலம் முடிந்தவுடன் நிலப்பிரபு ரௌடிக் கூட்டமொன்றுடன் நிலத்தை மீட்க வந்தான். எல்லா லம்பாடி விவசாயிகளும் தடுக்கத் தயாராயினர். ரிசர்வ் போலீசு மற்றும் நிலப்பிரபுவின் குண்டர்கள் ஒருபுறமும், தடிகள், இதர கிராமக் கருவிகள் இவற்றால் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டு செங்கொடி ஏந்திய லம்பாடி உழவர்கள் மறுபுறமும் ஒருவருடன் ஒருவர் மோதத் தயாராகினர். ரிசர்வ் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தத் தயாரானபோது மிகவும் விருப்பமின்றி உழவர்கள் பின்வாங்க வேண்டியிருந்தது.


இம்மாதிரி மற்றொரு போராட்டம் பாலகுருத்தி என்னும் கிராமத்தில் நடந்தது. ராமச்சந்திர ரெட்டி என்னும் விஷ்ணூ<ரின் தேஷ்முக், சாகலி இலம்பா என்னும் ஏழை விவசாயியிடமிருந்து நிலத்தைப் பலாத்காரமாக எடுத்துக் கொள்ள முயன்றான். விளைந்த பயிரைப் பலாத்காரமாக எடுத்துச் செல்ல தனது குண்டர்களை அனுப்பினான். ஆந்திர மகாசபையின் தலைமையில் 18 விவசாயிகள் குச்சிகள் மற்றும் இதர கிராமக் கருவிகளை ஆயுதங்களாகக் கொண்டு ஏழை விவசாயியின் விளைந்த பயிரைப் பாதுகாக்கப் போரிட்டனர். குண்டர்களை அடித்து விரட்டிப் பயிரைப் பத்திரமாக இலம்பாவுக்கு மீட்டுத் தந்தனர்.


மறுநாள் காலை போலீசு வந்து சங்க ஊழியர்களைக் கைது செய்தது. போலீசு நிலையத்தில் சங்க ஊழியர்கள் மிகக் கொடூரமாக அடிக்கப்பட்டு மனிதத் தன்மையற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டனர். இரகசிய உறுப்புகளில் குச்சிகளை திணிப்பது, கண்களில் மிளகாய்ப் பொடி தூவுவது, வாயில் சிறுநீர் ஊற்றுவது இவை போலீசு மற்றும் குண்டர்களால் பயன்படுத்தப்பட்ட முறைகளில் சிலவாகும்.


இப்போõரட்டத்தினோடு புதுவிதமான நிலப் பிரச்சினைகள், இயக்கத்தினால் தீர்க்கப்பட முன்வரத் தொடங்கின. இதுவரை விவசாயிகளை அவர்கள் குத்தகை நிலத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றுவதற்கு எதிராகவும், அவர்களது குத்தகை நிலங்களை அவர்களே மீண்டும் குத்தகைக்கு எடுக்கவும் கிளர்ச்சிகள் நடந்தன.முந்தரை நிகழ்ச்சிக்குப் பிறகு, மிராசுதாரர்கள் பலாத்காரமாக எடுத்துக் கொண்ட நிலங்களின் பிரச்சினைகள் முன் வந்தன. இவற்றைச் சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் தீர்க்கப்பட முடியவில்லை. சட்ட வரம்பை மீறிச் சென்று மக்கள் இந்நிலங்களை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இது, மக்கள் போராட்டங்களால் மட்டுமே தீர்க்கப்பட முடியும். இயக்கம், இப்பிரச்சினையைக் கையிலெடுத்துப் போராட்டங்களுக்காக மக்களை அமைப்பாகத் திரட்டியதால் ஓர் உயர்ந்த கட்டத்திற்கு இயக்கம் முன்னேற முடிந்தது.