Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் மேலும் சில ஆதாரங்கள்

மேலும் சில ஆதாரங்கள்

  • PDF

பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் "பகத்சிங்கும் இந்திய அரசியலும்'' (வெளியீடு: கனிமுத்து பதிப்பகம், 727, அண்ணாசாலை, சென்னை 600 006) என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ள சில ஆதாரங்கள்:


ஆ "மகாராணியின் அனுகூலமான என்றும் மறப்பரிய, கீர்த்திமிக்க ஆட்சியில் ஐம்பது வருடம் முடிவு பெற்றதைக் குறித்துச் சக்கரவர்த்தினியிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன், பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் மீது அம்மகராணி இன்னும் பல வருஷம் ஆள வேண்டுமென்று வாழ்த்துகிறது'' (1886 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரசு மாநாட்டின் முதல் தீர்மானம்.)


மகாராணியார் பல பல வருஷம் வாழவேண்டுமென்று கூட இல்லை. பல பல வருஷம் நம்மை ஆளவேண்டுமென்றே நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஆங்கிலேயர்களை வெகுவாக மகிழ்வித்திருக்கும். (பக். 6566)


நாடெங்கும் இருந்த புரட்சிகர நிலைமைகளில் 1930இல் காங்கிரசு மீண்டும் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கியது (நாம்)


1931ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அப்போராட்டம் மிகப் பெரிய வலுவோடு நடை போட்டுக் கொண்டிருந்தது. 1931 மார்ச்சில் காங்கிரசு பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சமாதானம் செய்து கொண்டு போராட்டத்தை நிறுத்திவிட்டது.


1922இல் திடீரென அறப்போர் நிறுத்திக் கொள்ளப்பட்டது மாதிரியே இப்போதும் நடந்தது. ஒவ்வொரு முறையும் "வெண்ணெய்' திரண்டு வருகிற போதெல்லாம், தாழி "கவனமாக' உடைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இம்முறை ஒரே ஒரு வித்தியாசம் தென்படுகிறது. 1922இல் காந்தியாரே, யாரையும் கலக்காமல், போராட்ட நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இம்முறையோ, அரசாங்கத்திற்கும், காங்கிரசுக் கட்சிக்கும் இடையில் ஒரு சமரச உடன்பாடு (எச்ணஞீடடி ஐணூதீடிண கச்ஞிt) ஏற்கப்பட்டு பின் போராட்டம் நிறுத்தப்பட்டது (பக்.75)


பெரிய வளர்ச்சிதான்! மொத்தக் கட்சியே துரோகக் கும்பலாக வளர்ந்ததைக் குறிப்பதே இது. (நாம்).


ஆ ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்ட தேசாபிமானமிக்க போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்ட காங்கிரசு கட்சி, அராஜகம் புரிந்த போலீசார் மீது விசாரணை கூடத் தேவையில்லை என்று அரசு கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டது. (பக்.78)


ஆ ... காங்கிரசுத் தலைவர்களில் ஒருவர் தாக்கப்பட்டால் நமக்கென்ன என நினைக்கும் மனப்பான்மை புரட்சியாளர்களிடம் இல்லாமலிருந்தது என்பதையே, சாண்டர்ஸ் கொலை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.


... இன்னொரு செய்தியையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். லஜபதிராய் புரட்சியாளர்களிடம் அன்பு கொண்டிருந்தார் என்றாலும், தன்னுடைய கடைசி காலங்களில், கட்சியின் போக்கிற்கு எதிராகச் செயல்பட விரும்பாமல், புரட்சியாளர்களைத் தன் வீட்டிற்கு வருவதற்குக் கூட அனுமதிக்கவில்லை என்று பகத்சிங்கின் நண்பர் சிவவர்மா தன் நூலில் குறித்துள்ளார்.


... ஆனால் புரட்சியாளர்களின் மீதான காங்கிரசுக் கட்சியின் பார்வை, இவ்வளவு நட்புரிமை கொண்டதாக இல்லை. அது மட்டுமின்றி தங்கள் தலைவர்களில் ஒருவரான லஜபதிராயைக் கொன்றவர்களிடம் காங்கிரசு நடந்து கொண்ட முறை வினோதமாய் இருந்தது.
அரசாங்கம் தன் அறிக்கையில், "லாலாஜியின் மீது சில அடிகள் விழுந்திருக்கலாமென்றும், ஆனால் காயங்கள் ஏதும் இல்லை என்று நம்பப்படுவதாகவும்'' குறிப்பிட்டது.


மேலும், இருதய நோயின் காரணமாகவே லாலாஜி காலமானார் என்றும் அரசாங்கம் சொன்னது.


ஆனால் 19.11.28 ஆம் நிõள் "தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் வெளியாகியுள்ள மருத்துவர்களின் அறிக்கையோ, "இருதய நோய்க்கான எந்த அறிகுறியுமில்லையென்றும், நெஞ்சில் பட்ட தடியடிகளே சாவிற்குக் காரணமாகி இருக்கலாம்'' என்றும் விளக்கியது.


... சினங் கொள்ள வேண்டிய காங்கிரசுத் தலைமை அரசாங்கத்தைப் புகழ்ந்து கொண்டிருக்க, கருத்து வேறுபாடு கொண்ட புரட்சியாளர்கள் பழிக்குப் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டனரென்பது, கொடூரமான முரணாகவே (இணூதஞுடூ ஐணூணிணதூ) உள்ளது. (பக். 79,80)

 

ஆ ... பகத்சிங்கும் அவரது புரட்சிகரத் தோழர்களும் வரிசையாகக் கைது செய்யப்பட்ட பின், சிறையில் அவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம், காங்கிரசின் அறப்போராட்டங்களை எல்லாம்விட மிக உன்னதமானதாக இருந்தது....
உண்ணாவிரதப் போராட்டத்தில், 63 நாட்கள் உயிரோடு போராடி இறுதியாக 13.09.1929 அன்று தோழர் ஜதீந்திர நாத் தாஸ் காலமானார். அவருடைய வீரமரணத்தைப் புகழாத பத்திரிக்கைகளே இல்லை....


இப்படி நாடே போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்த மாவீரனைப் பாராட்டி ஒரு தீர்மானம் கூட நிறைவேற்ற முன்வரவில்லை காங்கிரசுத் தலைமை... (பக் 81,82)
ஆ இன்றைய அரசியல் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிலரும் காந்தி, பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்கப் பாடுபட்டார் என்றே கூறுகின்றனர்.


ஆனால் பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்க காந்தி பாடுபட்டார் என்பதற்கு எழுத்து வடிவில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. காந்தியார், அரசாங்கத்திற்கு எழுதியுள்ள எந்தக் கடிதத்திலும் இப்படி ஒரு வேண்டுகோள் இல்லவே இல்லை.


தன்னிடம் நேரில் பேசும்போது குறிப்பிட்டதாகவே இர்வின் பிரபுவும் கூறுகிறார்.


பேச்சுவாக்கில் சொல்லிவிட்டுப் போகிற விசயமா இது? நேரில் கூறியதாகச் சொல்லும் காந்தியார், அதையே ஏன் எழுத்து வடிவில் ஒரு வேண்டுகோளாக வைத்திருக்கக் கூடாது? அல்லது காந்தி இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பு அதை ஏன் ஒரு நிபந்தனையாக ஆக்கியிருக்கக் கூடாது? (பக் 88)


காந்தியார் தண்டனையைக் குறைக்கச் சொன்னாரா என்பது ஒருபுறமிருக்க, தண்டனையை எப்போது நிறைவேற்றலாம் என்று அரசுக்கு யோசனை சொல்லியிருக்கிற விசயம் அரசாங்கக் கோப்பில் உள்ளது.


இச்செய்தியை தி ட்ரிபியூன் (The Tribune) பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது.


பட்டாபி சீதாராமையாவும் பட்டும் படாமல் உண்மையை ஒப்புக் கொள்கிறார். தண்டனையைக் குறைக்க காந்தியார் முயன்றும், இர்வின் பிரபுவால் அந்த விசயத்தில் உதவ இயலாமல் போய்விட்டது. "Lord Irvin was unable to help in the matter"  என்றும், கராச்சி காங்கிரசு முடியும்வரை வேண்டுமானால் தண்டனையை ஒத்திப் போடுவதாகக் கூறியதாகவும் காந்தியாரோ, அவ்விளைஞர்களைத் தூக்கிலிடுவதாக முடிவு செய்துவிட்டால் காங்கிரசு மாநாட்டுக்கு முன்பே தூக்கிலிடுவதுதான் நல்லது என்று உறுதியாகக் கூறிவிட்டதாகவும் சீதாராமையா எழுதுகிறார். (பக். 88,89)


எப்படியோ காந்தியார் தான் ஒரு அருமையான ராஜதந்திரி என்பதை நிரூபித்துவிட்டார். ஒருக்கால், இர்வின் பிரபு கூறிய மாதிரி, மாநாட்டுக்குப் பிறகு தூக்குத் தண்டனை என்று வைத்திருந்தால், பெரிய குழப்பம் ஏற்பட்டு, காந்தி இர்வின் ஒப்பந்தம் நிறைவேற, பகத்சிங்கின் தண்டனையைக் குறைப்பது ஒரு நிபந்தனையாக்கப்பட்டிருக்கலாம். ஆனால், காந்தியார் கூறியபடி, மாநாட்டுக்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டுவிட்டதால், வெறும் இரங்கல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிவிட்டு, ஒப்பந்தத்தை மாநாடு ஏற்றுக் கொண்டு விட்டது. (பக்.94)


இப்படி ஒரு கொடூரமான, துரோகத்தனத்தை என்னவென்று சொல்வது? கச்சிதமாக காந்தியும், காங்கிரசும் என்று சொல்லலாம்! (நாம்).
ஆ மக்கள் விரோதக் காங்கிரசு கட்சியைப் புறக்கணிப்போம்!
ஆ "அகிம்சாமூ­ர்த்தி' காந்தியின் துரோகங்களை அம்பலப்படுத்துவோம்!
ஆ போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்!
ஆ புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!