Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் வழிப்பட்ட மார்க்சிய தேசிய அணுகு முறை தோல்வி பெற்ற விட்டது எனக் காட்டும் வித்தையினுடாக, மார்க்சிய-லெனினிய-மாவோ வழிப்பட்ட சிந்தனை காலாவதியாகிவிட்டது!?

வழிப்பட்ட மார்க்சிய தேசிய அணுகு முறை தோல்வி பெற்ற விட்டது எனக் காட்டும் வித்தையினுடாக, மார்க்சிய-லெனினிய-மாவோ வழிப்பட்ட சிந்தனை காலாவதியாகிவிட்டது!?

  • PDF

அடுத்து மரபு வழிப்பட்ட மார்க்சிய தேசிய அணுகு முறை தோல்வி பெற்ற விட்டது எனக் காட்டும் வித்தையினுடாக, மார்க்சிய-லெனினிய-மாவோ வழிப்பட்ட சிந்தனை காலாவதியாகிவிட்டது என்கின்றார். மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வழிப்பட்ட தேசிய இனப் பிரச்சனை அணுகும் முறையை நிராகரிப்பதன் மூலம் ஏகாதிபத்துpய வழிப்பட்டு வழிகாட்டலை முன்வைக்கின்றனர். அது தான் இவர்கள் தேசிய அரசு தேசியம் என்பன ஐரோப்பிய கருத்துக்கள் இது ஒதுக்கப்பட வேண்டும். இது நவீனத்துவத்தின் விளைவு எனக் கூறுவதன் மூலம் தேசிய, தேசிய அரசு எனக் கூறி போராட வேண்டும் என்கின்றார் அ.மார்க்ஸ்.

 அதாவது இன்று ஏகாதிபத்தியம் கோரும் உலக மயமாதலின் தேசிய உற்பத்தியை, மற்றும் தேசிய அரசையும், தேசங்களின் எல்லையைக் கடந்து அழிக்கின்றது. அதாவது தேசம், தேசிய அரசு எனக் கோராத நிலையை, ஐரோப்பிய மார்க்சிய வாதமாகக் காட்டி விடுவதன் மூலம், அதை முன்னெடுக்காத வரை ஏகாதிபத்திய உலகமயமாதல் எதிர்ப்பின்றி வேகம் பெறும் என்றும் கனவு காண்கின்றனர். அதாவது ஐரோப்பிய நோக்கத்தை நிறைவு செய்ய தரகு முதலாளிய அரசு போல் மக்கள் மாற வேண்டும் என்கின்றார். அதைத்தான் அ.மார்க்ஸ் கோருகின்றார்.


அதில் இருந்து தான் பின் நவீனத்துவத்தை முன் தள்ளுகின்றார். அதாவது தேசியம், தேசிய அரசு எல்லாம் ஐரோப்பிய வாதம், நீ உனக்குள் உள்ள சிறு முரண்பாட்டை மட்டும் எடு போராடு ஐக்கியப்படாதே என்கின்றார். அதாவது தன்னார்வக் குழுக்களின் வழியில் முழுமையில் அல்ல பகுதிக்குள் நீ தேடி. உலகளாவிய ரீதியில் அல்ல நாட்டு ரீதியில், பின் அதற்குள்ளும் நீ தேடு பின் அதற்குள்ளும் தனியாக முழுமையில் அல்ல பகுதி நிலையில், என பின் நவீனத்துவத்தை முன்வைக்கின்றார்.


நவீனத்துவம், பின் நவீனத்துவம் என இரண்டும் ஏகாதிபத்தியத்தின் உலக மயமாக்கலை பாதுகாக்கும் ஒன்றில் இருந்து ஒன்றான வௌவேறு வடிவக் கோட்பாடுகளே. இதை முன்வைத்து தேசம், தேசியம், தேசிய உற்பத்தி முறை என்பதன் ஊடான உற்பத்தி முறையின் இயங்கியலை மறுத்து ஏகாதிபத்தியத்துக்கு வக்காலத்து வாங்கு கின்றனர்.


தேசம், தேசிய அரசு, மார்க்சியம் சோசலிய அரசு, கம்யூனிசம் என அனைத்தும் தனிமனிதர்களினதோ ஐரோப்பிய கொள்கையோ அல்ல அதாவது உற்பத்தி மீது நடக்கும் வர்க்கப் போராட்டத்தில் வௌவேறு வடிவங்கள் கோட்பாடுகளே. சமூகப் பொருளாதார விளைவில் ஏற்பட்ட கோட்பாடே. சமூகத்தின் வளர்ச்சியில் பொருளாதார முன்னேற்றத்தின் விளைபொருளே இவை. இவை தவிர்க்க முடியாமல் உற்பத்தி மீது அதன் மீதான வர்க்கப் போராட்டத்தின் மீதும் எழுகின்றன.


தமிழ் ஈழப் போராட்டம் எழுகின்றது எனின் ஐரோப்பியன் சொல்லித் தந்தல்ல. மாறாக தமிழீழப் பகுதி ஒரு தேசமாக உள்ள நிலையில் அதாவது தமிழ் ஈழ உற்பத்தி முறை மீதான வர்க்கப் போராட்டத்தின் மீதான அரசைக் கோரி சிங்கள இனவாத ஒடுக்கு முறை, மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்கு முறையின் விளைவே ஒழிய, வெறும் பொறாமை, ஆத்திரம், கோபம், எதிர்பார்ப்பின் வெளிப்பாடு அல்ல. அப்படிக் கூறும் அ.மார்க்ஸ் உள்ளிட்டவர்கள், தமிழீழப் போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே கொச்சைப் படுத்துகின்றனர்.


இவர்கள் எப்படி தேசிய இனப் போராட்டத்தை கொச்சைப் படுத்தி அதற்கு எதிராக இருந்தபடி ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதலின் காவடியாக உள்ளனர் என்பதை, நாம் இனிக் கூறத் தேவையில்லை. அவர்களின் சுற்றிவளைத்த எல்லா வாதமும் இதைத்தான் காட்டுகின்றது.


இதை அ.மார்க்ஸ் மேலும் "மார்க்ஸ் ஏங்கல்சிடமே அய்ரோப்பிய மையவிரவல் கொள்கையின் கூறுகள் இருந்ததை இங்கு நினைவூட்டிக் கொள்வது பொருந்தும்." எனக் கூறி மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனைக்கு எதிராக தங்கள் ஏகாதிபத்திய சார்புக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர். மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆய்வுரைகள் மார்க்சியத்தின் உயிரோட்டமுள்ள ஆய்வுகள் ஐரோப்பாவில் இருந்து கண்டு பிடித்தவை அல்ல. மாறாக சமூகப் பொருளாதார ஆய்வுகளில், முதலாளித்துவப் புரட்சியின் வெற்றி தோல்விகளை ஆய்வுக்குள்ளாக்கியும், எழுந்து வந்த சமூகப் பொருளாதாரப் போராட்டத்தில் மேல் கட்டு மானத்தின் அனைத்துப் பகுதியையும், அதன் செயல்தளமான அடிக் கட்டுமானத்தின் மேல் நின்று தான் மார்க்சியம் உருவானது. மார்க்சியம் என்பது முதலாளித்துவத்தின் விளைவே ஒழிய மார்க்சின் கற்பனை அல்ல. அதாவது மார்க்சியம் முதலாளித்துவ உற்பத்தி முறை மீதான வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய கோட்பாடே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.


இருக்கும் பொருளாதார அமைப்பைப் பாதுகாக்க முனையும் அ.மார்க்சும் அவரது சீடர்களும் மார்க்ஸ் ஏங்கல்ஸ் தத்துவத்தை ஐரோப்பிய மையவிரவல் கொள்கை என முத்திரை குத்தி காட்டிவிடுவதன் மூலம் உண்மையில் ஏகாதிபத்திய உலகமயமாதலை விசுவாசமாக எந்த வெட்க மானமும் இன்றி பாதுகாக்கின்றனர். அதாவது இன்று உலக மயமாதலை எதிர்த்த ஒரே ஒரு போராட்டமான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை மார்க்ஸ்-ஏங்கல்சை நிராகரிப்பதன் மூலம் அ.மார்க்ஸ் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்கின்றார். அ.மார்க்ஸ், மார்க்ஸ்-ஏங்கல்ஸை ஐரோப்பிய மையவிரவல் கொள்கை எனக் காட்டி நிராகரிப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து முன் தள்ளும் பின்நவீனத்துவ கோட்பாடுபடி, தன்னார்வக் குழுக்கள் வழியில் சீரழிய பகுதிப் போராட்டத்தை எதிர் மறையில் முன்னெடுத்து மொத்த மக்களுக்கு எதிராக நடத்துக் கோருகின்றனர்.


அதாவது அ.மார்க்சின் நோக்கம் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பி உலக மயமாதலைப் பாதுகாக்க மார்க்ஸ்-ஏங்கல்ஸை ஐரோப்பிய மையவிரவல் கொள்கையாளர்கள் என முத்திரை குத்தி சேறடிக்கின்றனர். இதற்காக மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்களை ஏற்றவர்கள் என்றும், N:கலியத்தின் தொடர்ச்சி என்றும் பலவாக வசைபாடுகின்றனர்.


அடுத்து அ.மார்க்ஸ் வர்க்கப் போராட்டத்தை எப்படி சிதைக்க முனைகின்றார் எனப் பார்ப்போம். "செவ்வியல் மார்க்சிய தேசியப் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக அணுகுகின்றது. என்றும் "சமூக வளர்ச்சிப் போக்கில் உருவாகும் வர்க்கப் பிரச்சனைகளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்ததே தேசியப் பிரச்சனை" என மார்க்சிய-லெனினிய கல்வி நிறுவனம் வலியுறுத்தும் போது தேசியப் பிரச்சனையின் ஒப்பிட்டளவிலான சுயேச்சைத் தன்மை முற்றாக மாறுபட்ட ஒரு வகை வறட்டு வர்க்க வாதத்திற்கே இட்டுச் செல்லும் ஆபத்து குறிப்பிடத் தக்கது. இத்தகைய போக்கிற்கு நேரெதிராக எல்லா விதமான வர்க்கப் பகுப்பாய்விற்கும் அப்பாற்பட்ட சுயேச்சைச் சக்தியாகத் தேசியத்தைப் பார்க்கிற சிந்தனைப் போக்குகளும் சமீபகாலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள. ஆட்டோபாயர், கார்ல்ரென்னர் போன்றோரின் சிந்தனைகளில் இக்கருத்து செல்வாக்கு வகுத்ததை முன்பே குறிப்பிட்டோம். புகழ் பெற்ற மார்க்சிய அறிஞர் நீகோஸ்பவுலன்ட்சாஸ், வர்க்க நடைமுறைகளிலிருந்து சுதந்திரமாய் வரலாற்றில் செயற்படுகிற சுயேட்சையான சக்தியாக தேசித்தைப் பார்க்கிறார்." என அ..மார்க்ஸ் முன்வைத்து "புகழ் பெற்ற மார்க்சிய அறிஞர் நிகோஸ்பவுலண்ட்சாஸ்" என்று கூறுவதன் மூலம் மார்க்சியத்தின் பேரில் முதலாளித்துவ தேசியத்தை மூடி மறைக்க மார்க்சிய அறிஞராக சினிமா காட்டி வக்காலத்து வாங்கியுள்ளார்.


தேசியம் சுயேட்சையாக இருக்க முடியும் என்கிறார். வர்க்கத்தைக் கடந்த சுயேட்சையாக தேசியம் இருக்க முடியும் என்கிறார். மார்க்சியம் தேசியத்தை வர்க்கமாகக் கருதுவது வறட்டு வாதம் என்கிறார். அ.மார்க்ஸ். நல்லது. அ.மார்க்ஸ் ஐயா அவர்களே நாம் கொஞ்சம் ஈழப்போராட்டத்தைப் பார்ப்போம்.


தமிழீழப் போராட்டம் சுயேட்சையாக வெளிப்பட்டதா? சுயேட்சை எதில் இருந்து ஐயா வெளிவந்தது? உமது மூக்கில் இருந்தா ?


தமிழீழப் போராட்டத்தை முன்னெடுப்பதில் 1977 தேர்தலில் கூட்டணி தான் பகிரங்கமாக முன் வைத்து பிரச்சாரம் செய்தது. அதாவது கூட்டணிக்கும் அதை அங்கீகரித்த மக்களுக்கும் வர்க்கம் கிடையாதா? எனின் NLFT முதல் LTTE ஈறாக 32 இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன் வைத்த போது இவ்வியக்கத்திற்கு வர்க்கம் கிடையாதா?


இதற்கு வெளியில் வர்க்கமற்ற ஒரு போராட்டம், எப்படி எந்த வேலைத் திட்டத்தில் உருவாயிருக்க முடியும் அ.மார்க்ஸ் அவர்களே. கொஞ்சம் விளக்குங்கள் முடிந்தால்?. முடியுமா ? முடியாதே.


தேசியம் சுயேச்சையாக எழுவதில்லை. ஏன் பிரஞ்சுப் புரட்சிக்கு முன் இந்த பல லட்சம் ஆண்டு மனித வரலாற்றின் ஏன் தேசியம் தோன்றவில்லை. சுயேட்சை எனில் தோன்றி இருக்கும் அல்லவா? சமூகத்தில் ஏற்பட்ட உற்பத்தி மீதான பொருளாதார மாற்றங்கள் உடன் தான் தேசியம் அரங்குக்கு வந்தது. இந்தத் தேசியம் எந்தப் பொருளாதார அமைப்பு மீது உருவானதோ,அந்த பொருளாதார அமைப்பின் கோரிக்கையாகவே எழும்.


தேசியம் ஒரு பொருளாதார அடுக்கின் விளைவே ஒழிய மனிதனின் கற்பனை அல்ல. கற்பனையில் உதிர்த்த சுயேட்சையும் அல்ல. மாறாக உற்பத்தி முறை மீதான பொருளாதார அடுக்கின் விளைவாக அது வர்க்க அடிப்படை கொண்டுள்ளது.


இந்தத் தேசியப் போராட்டம் எப்படி பண்பால் மாறுபடுகின்றது என்பதைப் பொறுத்தே பல்வேறு வர்க்கங்களும் தமது வர்க்கக் கண்ணோட்டத்துடன் அதில் ஈடுபடுகின்றன. அங்கு இவை ஒரு ஐக்கிய முன்னணியையும், சிலவேளை பிளவுபட்டும் போரிடுகின்றனவே ஒழிய வர்க்கம் இன்றி சுயேட்சையாக அல்ல. போராட்டத்தின் பொதுப் போக்கில் வர்க்க சக்திகளின் பங்கு மற்றும் வர்க்க அடிப்படையைப் பொறுத்து ஒரு வர்க்க மேலாண்மை நிச்சயமாக பெற்றிருக்கும் அ.மார்க்ஸ் ஐயா அவர்களே. இங்கு சுயேட்சைக்கு மந்திரம் தந்திரம் என எதுவும் சாத்தியமில்லை.


ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் பல்வேறு வர்க்கத்தின் செயல்பாட்டில் எழும் போது மேல் கட்டுமானத்தில் பாரிய மாற்றங்கள் நடக்கின்றன. சிலவேளை இருப்பதை தக்கவைத்தல் அல்லது மேலும் வளர்த்து மையப்படுகின்றது. ஆகவே எப்போதும் அரசியலில் தான் பிரச்சனை மையம் கொள்கிறது. அது மற்றவற்றுடன் தொடர்புடையது. இறுதியாக அடிக்கட்டுமானத்தில் சிறு சிறு மாற்றங்களுடன் பேணுகின்றது, அல்லது தலைகீழாகின்றது. இவை எதிலும் தலையிடாது சுயேட்சையாக இருப்பது என்பதன் மூலம், இந்தப் பிரச்சனை மீதான ஏகாதிபத்திய தலையீட்டை சுயேட்சையின் பேரில் மறுத்துப் பாதுகாக்கும் ஒரு விளையாட்டின் தொடர்ச்சிதான் "சுயேட்சை" என்ற வாதம்.


உலகில் எந்த ஒரு மனிதனும் சுயேட்சையாக இருக்க முடியாத சமூக அமைப்பாக இன்று உலகம் உள்ளது. உலகில் உள்ள எல்லா மனிதன் மீதும், ஏன் அ.மார்க்ஸ் மீதும் கூட சட்ட ஒழுங்குக்கு உட்பட்ட கருத்து முன்வைக்க முடிகின்றது. இந்த சட்ட ஒழுங்கு என்பது கீழிருந்து மேலாக, ஒவ்வொரு மனிதனில் இருந்து உலகம் முழுக்க ஒழுங்கு படுத்துப்பட்டு கட்டுப் படுத்துப்பட்டு உள்ளது.


இருக்கும் சட்ட கட்டமைப்பை மீறி யாரும் செயற்படவோ, கருத்துக் கூறவோ முடியாது. அப்படி மீறுகின்ற போது சட்டமும் பாய்கின்றது. இச்சட்ட அமைப்பு இருக்கும் உற்பத்தி முறை மீது அரசு வடிவம் மீதான வர்க்கப் போராட்டத்தை ஒட்டி ஆட்சி வடிவம் கட்டமைக்கப் படுவதின் ஊடாக சட்ட அமைப்பு உருவாகின்றது.


இந்த சட்டத்தை மக்கள் ஏற்காத நிலை ஏற்படும் போது அந்த உற்பத்தி முறையைப் பேணியபடி வர்க்கப் போராட்டத்தின கடுமையில் புதிய சட்ட அமைப்புகள், புதிய அரச வடிவங்கள் திணிக்கப்படுகின்றன.


இன்று மனிதர்கள் எப்போதும் சட்டத்திற்கு உட்பட்ட வர்க்க சமுதாயத்திலும் தான் இருக்க முடியும், சுயேட்சை என்பது கற்பனை விபச்சாரமாகும்.


பாட்டாளி வர்க்கக் கருத்தை முன்வைப்பவர்கள் கூட சுயேட்சையாக இருப்தில்லை இந்த சமூக எல்லைக்குள் உள் வர்க்கப் போராட்டத்தில் ஒரு பிரதிநிதியாக இருக்கின்றார்களே ஒழிய வெளியில் அல்ல.


ஒருவன் தான் சுயேட்சையாக இருக்கின்றான் எனக் கூறினான் எனின், அது முதலாளித்துவ ஜனநாயகத்தில் சுரண்டும் ஜனநாயகத்தை தானே ஒழிய வெளியில் இல்லை. அ.மார்க்ஸ அவர்களே.


அடுத்து "இலத்தின் அமெரிக்காவின் தேசிய உருவாக்கங்கள் என்பன சந்தை உருவாக்கத்தால் கட்டமைக்கப்படவில்லை. ஸ்தூலமான அரசியற் களத்தில் அது கட்டமைக்கப் பட்டது." என்றார் டெர்ராரிவர்ஸ் என அ.மார்க்ஸ் அதை மீள முன்மொழிகின்றார்.


அதாவது சந்தை இன்றி தேசம் உருவானது என்றால் உற்பத்தி முறையின் வர்க்கப் போராட்டமும் இன்றியும் அரசு உருவாகி உள்ளது என்கின்றார். இது 20ம் நூற்றாண்டின் அ.மார்க்சின் அரிய கண்டு பிடிப்பு. அதாவது அ.மார்க்ஸ் வாதிடும் "ஸ்ராலினின் வரையறை தவறு" என்ற வாதத்தை இது கொண்டுள்ளது. சந்தை மையமிடாத லத்தீன் அமெரிக்கா தேசிய அரசுகள் ஏன் 17ம் நூற்றாண்றிற்கு முன் தோன்றவில்லை. அத்துடன் லத்தீன் அமெரிக்காவில் அரசு இருக்கவில்லையா? வர்க்க சுரண்டல் இருக்கவில்லையா ?


அரசியல் என்பது சுயேட்சையானது அல்ல. பொருளாதாரத்தின் ஒன்று செறிந்து ஆளும் கருவியே அரசியல். இந்த அரசியல் மேல்கட்டுமானதுத்துடன் பல்வேறு துறையுடன் ஒன்று சேர்ந்து செயலாற்றுகின்றது. தேசிய அரசியல் என்பது தேசிய சந்தை உருவாக்கத்துடன் தான் தோன்றியது. தேசிய சந்தை இன்றி தேசிய அரசியல் இருக்க முடியாது. உற்பத்தி முறை இன்றி அதன் மீதான வர்க்கப் போராட்டம் இன்றி தேசிய அரசியல் இருக்க முடியாது. அப்படி இருக்கிறது எனின் தேசியத்தை சூறையாடும் ஏகாதிபத்தியத்தின் பொம்மை அரசுகளே. இங்கு வர்க்கப் போராட்டம் உண்டு. எனவே சுயேட்சையான தேசிய அரசோ, சுயேட்சையான தேசியமோ. சொந்த சந்தை இன்றி ஒருக்காலும் உருவாக முடியாது. முடியும் எனின் அது ஏமாற்றம் கபடம் நிறைந்த அ.மார்க்சின் சொற்கபடங்களே.


அடுத்து தேசத்தை எல்லா வர்க்கப் பிரிவுகளின் உருவாக்கம் எனக் காட்ட முனையும் அ.மார்க்ஸ் எடுத்து வைக்கும் வாதத்தைப் பார்ப்போம். "நவீன தேசம் என்பது முதலாளிகளின் படைப்பு அல்ல எனக் கூறும் பவுலன்ட்காஸ் "அது உண்மையில் நவீன சமூக வர்க்கங்களுக்கிடையேயான சக்திகளின் உறவின் வெளிப்பாடாகும்." என அ.மார்க்ஸ் எடுத்து முன்வைக்கிறார். அடுத்து இதை மேலும் அ.மார்க்ஸ் செழுமைப்படுத்த "தேசியத்தை இரட்டை நிகழ்வாகக் காண்பவர் ஆப்ஸ்பாம். முதலாளிய எழுச்சி காலனியச் சுரண்டல் போன்ற போன்ற சமூக மாற்றங்களை எதிர் கொள்ளும் வழிமுறையாக ஒன்று, நவீன மத்தியப்படுத்தப்பட்ட அரசின் குடிமை மதமாக இன்னொன்று." அதை மேலும் பலப்படுத்த அ.மார்க்ஸ் "தேசியத்தின் இரு பணிகளாக ஜான்ப்நய்பி குறிப்பிடுவது கிட்டத்தட்ட இத்துடன் பொருந்தும். அவை

 

(1) அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மக்களை இறுக்கி இணைத்தல்.

 

(2) யாரை அது கட்டுப்படுத்துகிறதோ அந்த மக்களை நியாய பூர்வமாகத் தோற்றமளிக்க ஒரு குறிப்பிட்ட அரசுக்கு பயன்படல். தேசியம் என்பது அரசியல் ரீதியாய் நியாயப்படுத்திக் கொள்ளப்பயன்படும் கொள்கை எனக் கெல்னர் கூறுவதும், தங்களுக்குரிய அரசைக் கைப்பற்றவும் தக்க வைக்கவும் உருவாக்கப்படும் செயற்பாடுகள், கருத்தியல் மற்றும் இயக்கங்களைத் தேசியம் என்கின்றோம் எனப் பிட்டர்ஒர்ஸ்சி குறிப்பிடுவதுடன் இணைந்து பார்க்க வேண்டும்." என அ.மார்க்ஸ் தனது மார்க்சிய விரோதக் கோட்பாட்டை உயர்த்த அடுக்கடுக்காக முன்வைக்கின்றார்.


தேசம் தொடர்பான மேல் உள்ள கூற்றுகள் நகைப்புக்குரியது. தேசம் ஏன் எப்படி, எங்கே தோன்றியது என்ற வரலாற்று இயங்கியலை மறுக்கின்றது. ஒரு தேசம் தோன்ற தேவையான அடிப்படை பொருளாதார கட்டமைப்பை மறுக்கும் கோதாவில் தான் பல்வேறு மேல்கட்டுமானங்களை முன்தள்ளி மூடி மறைக்கின்றனர்.


அடிப்படை பொருளாதார அதாவது உற்பத்தி முறை இன்றி தேசம் உருவாக முடியும் என்று கூறுவதன் மூலம், தேசியத்துக்கு ஏகாதிபத்தியத்தால் ஆபத்து இல்லை என்கின்றனர். அதாவது இருக்கும் தேசங்கள் தமது சுயாதீனத்தை பொருளாதாரத்தில் இழந்தாலும, அவை தேசமாக இருக்கும் என்கின்றார். அதாவது பல்வேறு வர்க்கங்கள் ஒன்றுபட்டிருக்க, வௌவேறு அரசியல் சூழலில் வாழ என பலவாக தேசிய அடிப்படைப் பொருளாதாரத்தில் இன்றி இருக்க முடியும் என்பதன் மூலம், ஏகாதிபத்திய உலக மயமாதல் தரகு முதலாளித்துவ அரசுகளை கூட தேசியமாக இருப்பதாகக் காணவேண்டும் என்கின்றார்.


ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத அதிகாரப் பங்கீட்டை வலியுறுத்துகின்றனர். பல்வேறு வர்க்கங்கள் தமக்குள் மோதி, அதில் தேசியமாக மாறி இருக்கக் கோருகின்றனர். அடிக்கடி மாறுகின்ற ஆட்சிகள் போலவும், கட்சிகளை மாற்றுவதன் மூலம் இந்த ஏகாதிபத்திய உலகமயமாதலை கேள்விக்கு உள்ளாக்காத சொந்த தேசியம் எனக் கோருவது, தேசிய முதலாளித்துவம் எனக் கூறுவதும், ஏகாதிபத்தியத்துக்கு ஆபத்தானது எனவே அதை மூடி மறையுங்கள். இல்லை எனச் சொல்லுங்கள். மாறாக முதலாளித்துவமல்லாத தேசியம் எனக் கோரின் அது ஏகாதிபத்துpயத்துக்கு எதிரானது அல்ல. ஏகாதிபத்தியத்துக்கு சார்பானது என்ற உண்மையை சரியாகக் கிரகித்த படிதான் அ.மார்க்ஸ் இதைக் கோருகின்றார். அதாவது தேசிய முதலாளித்துவக் கோரிக்கை கூட ஏகாதிபத்திய சகாப்தத்தில் முற்போக்கானது. அதுதான் அதை முதலாளித்துவம் இல்லை எனக் கூறுவதன் மூலம் அதன் போராட்டத்தைத் தடுக்க முடியும். அத்துடன் முதலாளித்துவமாக இனம் கண்ட வர்க்கப் போராட்டத்தை தடுக்க முடியும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். இதன் மூலம் எகாதிபத்தியத்தின் எதிர்ப்பு சக்திகளான தேசிய முதலாளித்துவம் மற்றும் பாட்டாளி வர்க்க சக்திகளை இயங்க விடாத கோட்பாடு தேவைப்படுகின்றது, என அ.மார்க்ஸ் தமிழ் மக்களுக்கு முன்வைக்கின்றார்.


அதாவது தேசியம் முதலாளித்துவத்தின் விளைபொருள் அல்ல என்பதன் மூலம் தேசிய முதலாளிகளை முடக்குவதும், தேசியம் முதலாளித்துவத்தின் விளைபொருள் எனக் கண்டு வர்க்க சக்திகள் சர்வதேசியத்தை முன்னெடுப்பதைத் தடுப்பதன் மூலம், பிரதான எதிரியான ஏகாதிபத்தியத்தையும், தரகு முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளையும் இணங்காணாது இருக்கக் கோருகின்றார். இந்த விருப்பில் தான் அ.மார்க்ஸ் எல்வாவற்றையும் மறு வாசிப்பு, மறு ஆய்வு என்ற பெயரில் செய்யும் முயற்சியாகும்.


அடுத்து இவர் "ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டந் தான் இந்திய தேசியத்தை கற்பித்தது."என அ.மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். இந்தியச் சுதந்திரப் போராட்டம் எப்படி இந்திய தேசியத்தை உருவாக்க முடியும். அதாவது இந்திய சுதந்திரப் போராட்டம் என்கின்ற போது இந்தியா என்பது முன்பே உருவாகிவிட்டது அல்லவா? இந்தியா என்ற ஒன்று தான் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தது. அதாவது இந்தியா என்ற தேசம் தான் இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தது.


அதாவது தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு முன் இந்தியா என்ற தேசம் உருவாகி விடுகின்றது. அதாவது இந்தியா தேசம் தனக்கான பல மையச் சந்தையை, நிலத் தொடரை, பல மொழித்தளத்தை, பல கலாச்சாரத்தைக் கொண்டு அதில் ஒரு குறித்த அடையாளப்படுத்துதலின் ஊடாக பல் தேசிய விடுதலையை ஐக்கியமுன்னணியாக இந்தியா என்ற ஒழுங்கு அமைவுக்கு ஊடாகக் கோரியது. இங்கு பல்வேறு தேசிய இனங்கள் தத்தம் சுயநிர்ணயத்தை பெற்று, பல்தேசிய அரசாக இருப்பதற்குப் பதில் தேசிய இன ஒடுக்கு முறை ஊடாக இந்திய தேசியத்தைப் பெற்றதன் மூலம் தேசிய விடுதலைப் போர் இந்தியாவிற்குள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.


இந்தியா பல்தேசியம் என்ற ஒன்று பல்வேறு தேசியங்களின் கூட்டாக முன்கூட்டியே உருவாகிவிடுகின்றது. இது தான் இந்திய தேசியத்தைக் கோரியது. இல்லாது ஆங்கிலேய காலனித்துவத்துக்கு முந்திய, பல பிராந்திய அரசுகளின் போராட்டத்துக்கு ஊடாக இந்தியா உருவாகவில்லை. மாறாக காலனித்துவ வாதிகளால் உருவாக்கப்பட்டு மையப்படுத்தப்பட்ட பொருளாதார அலகு, ஆங்கிலப் பொது மொழி, ஒரு நிலத்தொடர், இந்து என்ற மதத்தின் ஊடாக ஒரு கலாச்சார அலகை முன்வைத்துத்தான் இந்தியா என்ற ஒரு நாடு அடையாளப்படுத்தப்பட்டது. இங்கு பல பிராந்தியங்கள் தனித்தனியாக இருந்தபோதும், சில பொது அடையாளங்கள் ஊடாக பல முரண்பாட்டுடன் தான் இந்தியா உருவானது.


காந்தியின் காங்கிரஸ் இதன் அடிப்படையில் மேலும் இந்தி, சமஸ்கிருதத்தை முன் தள்ளி தான், தமது தேசிய விடுதலைப் போரை முன்னெடுத்தனர். முஸ்லீம், இந்து மோதல் கூட இந்தியாவின் (மதக்) கலாச்சாரப் பிளவுடன, பொருளாதாரச் சந்தையை முஸ்லீம்களிடம் இந்துக்கள் பறிக்க முனைந்ததன் விளைவாக பாக்கிஸ்தான் என்ற ஒரு நாடு உருவானது. இன்னும் இந்தியாவிற்கு இந்தியா பொது அடையாளப்படுத்தல் என்பது பிற்போக்காக உள்ளதால் அது பிளவைக் கோருகின்றது. இந்தியா என்ற ஒரு தேசம் அடையாளப்படுத்தப்பட்ட பின் தான் இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்றதே ஒழிய மறுதலையாக அல்ல. இந்தியா எனற் ஒரு நாட்டில் உற்பத்தி மீதான பொது அடையாளப் படுத்தல் அங்கு நடந்த வர்க்கப் போராட்டமும் தான் இந்திய அரசை உருவாக்குகின்றது. இதை மையமாக வைத்தே ஆங்கிலேயக் காலனியாதிக்க வாதிகள் ஆண்டனர். பல்வேறு ஆட்சிகளை ஒன்றுபடுத்தி ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த நிலையில், ஏற்பட்ட உற்பத்தி முறையின் மாற்றம் இந்திய தேசத்துக்கு அடிப்படையாகும்.

 
"ஆக தேசம் என்பது அரசியல் ரிதியாக வரையறுக்கப்படுவது. ......... தேசப் போராட்டத்தை வெறும் வர்க்கப் போராட்டமாக சுருக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் அது வர்க்க ஆய்வுகட்கு அப்பாற் பட்டது அல்ல." என அ.மார்க்ஸ் முரண்பட்டபடி ஒரு கேலிக்கூத்தை முன்வைக்கிறார்.


தேசம் அரசியல் ரீதியாக வரையறுக்கப்பட்டது என்பது எடுத்த எடுப்பில் சரியாக இருக்கும். ஆனால் அடிப்படையில் பார்த்தால் அது தவறு. தேசம் பொருளாதார ரீதியில் வரையறுக்கப் பட்டவை. அதாவது தேச உற்பத்தி மீதான வர்க்கப் போராட்டத்தில் வரையறுக்கப்பட்டது. ஒரு தேசத்தின் அரசியல் என்ன என்பதில் இருந்து தேசத்தை வரையறுத்துக் கொள்ள முடியாது. ஏன் எனில் இன்றைய உலக மயமாதலில் இருக்கும் அரசுகள் தேசமாக இருப்பது போல் இருக்கும். ஆனால் உள்ளடக்கத்தில் அது தேசமாக இருப்பதை அழிக்கிறது. அல்லது இருப்பதுமில்லை.
இருக்கும் அரசியலில் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் கொண்டுள்ள இன்றைய அரசுகள் தேசிய அரசுகள் அல்ல. அங்கு என்னவிதமான பொருளாதாரம் உள்ளது என்பது மட்டும் தான் அது உண்மையில் தேசமாக தேசியமாக உள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.


அரசியல் தான் எல்லாவற்றினதும் குவிய மையம் என்பது, போராட்டம் என்பது அரசியலை மையமாக வைத்துத்தான் என்பது அடிப்படையாவை. ஆனால் தேசத்தை வரையறுக்கும் போது அந்த அரசியலின் பின் என்ன பொருளாதாரம் உள்ளது என்பது முதன்மையாகின்றது. அடிப்படையை விட்டு மேல் உள்ளதைப் பார்ப்பதில்லை. அடிப்படையை முதலில் இனம் கண்ட பின் தான் மேலே உள்ளதை ஆராய வேண்டும். அரசியல் கற்பனையின் வெளிப்பாடு அல்ல.உற்பத்தி மீதானதே அரசியல்.


அத்திவாரத்தை விட்டு விட்டு மேலே எப்படி கட்டிடத்தை கட்டி விட முடியாதோ அதே போல் தேசியமும். அடுத்து தேசத்தை வர்க்கமாகவும் வரையறுக்க முடியாது, ஆனால் அது வர்க்க ஆய்வுக்கு அப்பாற் பட்டது அல்ல எனக் கூறும் அ.மார்க்சின் விளையாட்டுச் சொல்லாடல் என்பது கபடம் நிறைந்த ஏமாற்றாகும். அதாவது இதோ, அதோ எனக் குழப்புவதும் பின் ஒட்டு மொத்தமாக ஓரம் கட்டி செல்லும் மார்க்சிய விரோதப் போக்கின் கைதேர்ந்த மோசடித்தனம் தான் அ.மார்க்ஸ் அது இது என்ற வார்த்தை யாடல்கள்.


"........... வரலாற்றுச் சூழலுல், உலக அரசியலும், உலக முதலாளிய பொருளாதாரக் கட்டமைப்பும் முற்றிலும் வேறு பட்டுள்ள இன்றைய சூழலில் இத்தகைய (இத்தகைய என்பது மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை இது நாம்) அணுகு முறை உதவாது." என அ.மார்க்ஸ் அடிக்கிச் செல்கிறார்.


உலக அரசியல், உலக முதலாளித்துவம், வரலாற்றுச் சூழல், மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வரையறுப்புக்கு எந்த விதத்திலும் விலகிச் செல்லவில்லை. ஏகாதிபத்திய சகாப்தத்தில் தொடரான மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை ஆய்வு முறைகள் இன்றைய உலக நிலையை மிகச் சரியாக மிக ஆழமாக விளங்குகின்றன. தேசியம், பெண்ணியம், வர்க்கப் போர் என அனைத்தும் எந்த விதத்திலும் அதன் பொதுத் தன்மையில் இருந்து விலகி விடவில்லை.


மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை பொதுவான வர்க்கப் போரின் ஆய்வுரைகள், இன்றைய உலக மாற்றங்களால், எதுவும் மாறி விடவில்லை. மறுபுறம் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை மீதான பொது அடிப்படை மீதான குறிப்பான நிலமைகள் மட்டும் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையில் மாறுபடுகின்றன. இந்த மாறுதல் கடந்த வர்க்கப்போராட்ட வரலாறு எங்கும் நீடித்து நிற்கின்றன. ஆனால் அ.மார்க்சுக்கு மட்டும் இவை கண்ணுக்கு மின்னுகின்றன. நல்ல ஒரு கண்ணாடி வாங்கிப் போட்டால் சிலவேளை நல்ல பார்வை வரும் அ.மார்க்ஸ் அவர்களே.


இன்று உள்ள ஏகாதிபத்திய உலகம், மார்க்சிய-லெனினிய-மாவோ கால உலகில, என்ன அடிப்படை மாற்றத்தை சுரண்டுவதில் கொண்டு வந்துள்ளது. சுரண்டும் முறையில் மாற்றங்கள் நடந்தனவே ஒழிய, சுரண்டும் வர்க்க முரண்பாடு பொதுவானதாகவே உள்ளது. நீடிக்கின்றது.


உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அரசு வடிவங்களை மாற்றி உள்ளன. அதில் நடந்த வர்க்கப் போராட்டங்கள் ஆட்சி அமைப்பை முறையைத் தீர்மானித்தன. ஆனால் இவை ஏகாதிபத்திய சுரண்டல் உலகில் சுரண்டுவதும், வர்க்க முரண்பாடும் நீடிக்கின்றன. சுரண்டல் சுரண்டுவதாகவே நீடிக்கின்றது. இது நீடிக்கின்ற வரை எப்படி புதிய நிலமைகள் வந்துள்ளன அ.மார்க்ஸ் அவர்களே.


சுரண்டுவதற்கு இசைவான உற்பத்தி முறைகள் அரசு வடிவங்கள் ஆட்சி முறைகளை வர்க்கப் போராட்டத்தின் மீது கட்டி அமைத்து மாறி வந்த ஏகாதிபத்திய யுகம், எந்த விதத்திலும் அடிப்படையில் சுரண்டும் வடிவம் மட்டும் மாறவில்லை. இது உள்ளவரை எப்படி புதிய நிலமை உள்ளது எனக் கூற முடியும்.
குருடாகிப் போன அ.மார்க்சின் மேற்கூறியதை மேலும் வளர்த்து எடுப்பதைப் பார்ப்போம். "நாம் நடைமுறைப் பிரச்சனையை மேற்கு ஐரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேசிய இனப் பிரச்சனையினுடனோ, இல்லையெனில் காலத்திய கிழக்கு அய்ரோப்பிய நாடுகளைப் போல வளர்ந்து வரும் முதலாளியக் காலகட்டத்தின் தேசியத்துடனோ இல்லை ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை கோரும் காலனியப் பிரச்சனையோடோ ஒப்பிட முடியாது. ........ (1) இங்கேயுள்ள எந்தத் தேசிய இனப்பிரச்சனையும் வளர்ந்து வரும் முற்போக்கான முதலாளிய வர்க்கத்தால் கட்டமைக்கப்படுவதாகக் கொள்ள முடியாது. ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து வரும் இன்றைய முதலாளியம், எந்த வகையிலும் தொடக்ககால முதலாளியத்தைப் போல் எந்த ஒரு அம்சத்திலும் முற்போக்காக இல்லை. (2) ரசியாவில் ரசிய தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இனமாகவும் மற்றையவை ஒடுக்கப்படும் இனமாகவும் இருந்தது போல் இங்கே எந்தத் தேசிய இனத்தையும் ஒடுக்கும் தேசிய இனமாகச் சுட்டிக்காட்ட முடியாது. மூலதனம், தொழில் நுட்பம், சந்தை ஆகிய மூன்றிலும் ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து நிற்கும் இந்தியப் பெரு முதலாளிகள் எந்த ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்துக்குள்ளும் தங்கள் செயற்பாட்டை முடக்கிக் கொள்ளவில்லை. ........... ஒரு காலனிய, அரைக்காலனிய அரசமைவில் மாவோ போன்றவர்கள் வரையறுத்த தேசிய முதலாளிகள் என்ற கருத்தாக்கத்தை பல்தேசிய இன அரசாகிய இந்தியாவில் தேசிய இன முரண்பாடுகளை விளங்கி கொள்ளப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. .......... பொது மொழி என்ற ஒன்று இல்லை யாகையால் அகில இந்திய தேசியம் என ஒன்று கிடையாது, ......." என அ.மார்க்ஸ் தனது மார்க்சிய விரோத நிலையில் ஏகாதிபத்தியத்துக்காக எப்படி வாதிட முனைகின்றார் என கொஞ்சம் பார்ப்போம்.
தேசிய இனப் பிரச்சனை வளர்ந்து வரும் முதலாளித்துவத்துடன் பார்க்க முடியாது என அ.மார்க்ஸ் பிரகடனம் செய்வதன் மூலம் ஏகாதிபத்திய உலக மயமாதலை ஏற்கக் கோருகின்றார். அதாவது உலகமயமாதல் தேசியச் சொத்துரிமையை, உற்பத்தியை மறுதலித்து விடுகின்றது. இந்தியா சரி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தேசிய முதலாளிகள் மட்டும் இன்றி தனிநபர் சொத்துரிமையை கூட உலகமயமாதல் மறுக்கத் தொடங்கி விட்டது. எப்படிச் செல்வம் சில நாடுகளை நோக்கியும், பின் சிலரிடமும் குவிகின்றது என்பதற்கு புள்ளிவிபர ரீதியாக சில ஆதாரங்களை நாம் இன்று காட்ட முடியும். அந்தளவுக்கு தேசிய முதலாளித்துவத்தின் மீது நடத்தப்படும் சுரண்டல், சூறையாடலை எதிர்த்து உருவான நாடுகளிலும், புதிதாக உருவாகும் நாடுகளிலும் ஆட்சி இல்லாத தேசிய முதலாளித்துவப் பிரிவு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தொடர்ந்து போராட முனைகின்றன. சாதாரண தேர்தல்களில் கூட ஏகாதிபத்திய சார்பு எதிர்கட்சி முதல் அனைத்து எதிர்கட்சிகளிலும் அனேகமாக எல்லாம் உலக மயமாக்கலுக்கு எதிராக பேசும் அளவுக்கு இப்பிரச்சனை இன்று உள்ளது. அதாவது தேசிய முதலாளித்துவப் பிரிவுகள், தனது இழந்து செல்லம் உரிமையை மீளப் பெற தேசிய சந்தையை தக்க வைக்க பல விதமாகப் போராடுகின்றன, போராட முயல்கின்றனர்.