Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தமிழ் தேசம் தான் தனக்கு மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக தேசிய விடுதலைப் போரை நடத்தி அதற்கூடாக. தனக்கான அரசைக் கோருகின்றது.

தமிழ் தேசம் தான் தனக்கு மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக தேசிய விடுதலைப் போரை நடத்தி அதற்கூடாக. தனக்கான அரசைக் கோருகின்றது.

  • PDF

அடுத்து நிறப்பிரிகை என்ற மார்க்சிய விரோதிகள் குழு கூறும் கூற்றைப் பார்ப்போம்.


"ஈழத்தமிழர்களின் மீதான ஒடுக்கு முறை என்பது சிங்களப் பேரினவாதம் என்கின்ற கட்டமைப்பின்- கற்பிதத்தின் விளைபொருள் இதற்கு எதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் தவிர்க்க இயலாதது. ....... பாசிசத்தில் போய் முடியக் கூடியது என்கின்ற கரிசனம் இருக்குமாயின் அதற்குரிய வகையில் நாம் தேசியத்தை கற்பிதம் செய்ய வேண்டும். ........ தேசியப் போராட்டங்கள் மூலமாகத்தான் தேசங்கள் கட்டப்படுகின்றன." என்று கூறுவதன் மூலம் இலங்கை தமிழ் இனம் ஒரு தேசமாக இருப்பதை அடிப்படையில் மறுக்கின்றனர்.


அதாவது ஸ்ராலினின் வரையறையை மறுத்த நிறப்பிரிகைக் குழு இலங்கையில் தமிழ் தேசம் ஒன்று இருப்பதை மறுத்து விடுகின்றனர். தமிழ் தேசம் என்பது பொது மொழியில், பாண்பாட்டில், நிலத்தொடரில், பொருளாதாரச் சந்தை என்பனவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு தேசமாக இருந்தால் தான், அதைக்கைப்பற்ற சிங்கள அரசும், ஏகாதிபத்தியமும் அதை மறுதலிப்பதின் விளைவுதான் தேசவிடுதலைப் போராட்டம். இங்கு தேச விடுதலைப் போராட்டம் தேசத்தை அடையாளப்படுத்த நடத்தவில்லை. மாறாக தமிழ் தேசம் தான் தனக்கு மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக தேசிய விடுதலைப் போரை நடத்தி அதற்கூடாக. தனக்கான அரசைக் கோருகின்றது.


இலங்கையில் தமிழ் தேசம் ஒன்றை நாம் கற்பிதம் செய்ய வேண்டும் என அ.மார்க்ஸ் கூறுவது தமிழ் தேசம் என்ற ஒன்றை சிங்கள இனவாத நிலையில் நின்று மறுப்பதாகும். ஏன் எனின் புதிதாக ஒன்றை கற்பிதம் செய்வதாக காட்டுவதன் மூலம, சிங்கள இனவாதம் மற்றும் ஏகாதிபத்திய பிரச்சாரத்தை கோட்பாட்டு அளவில் நிறுவ நிறப்பிரிகைக் கும்பல் முனைகிறது. சிங்கள இனவாதிகள் தமிழ் தேசம் என்பது கற்பிதம் என மீள மீளக் கூறுவதும் அ.மார்க்ஸ் கூறுவதும் அடிப்படையில் ஒன்றே ஒழிய வேறில்லை.


அதேபோல் சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, வெறும் கற்பிதமாக காட்டுவதன் மூலம், சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ் மக்களின் தேசிய முதலாளிய பண்பையும், தமிழ் பிரிவுச் சந்தையையும் சூறையாடும் பக்கத்தை மறுத்து, எதோ கற்பிதமாக கட்டப்பட்டு விட்டதாக கூறி ஏகாதிபத்திய மற்றும் சிங்கள முதலாளித்துவ சந்தை சூறையாடலை மறுப்பதாகும். அதேபோல் இதன் பின் உள்ள ஏகாதிபத்திய நலனை, ஏகாதிபத்திய சூறையாடலையும் அதனால் எழும் சிங்கள இனஒடுக்கு முறையையும் மூடிமறைத்து ஏதோ சிங்களவர் தற்செயலாக தமிழர் பற்றி கற்பிதம் செய்து விட்டனர் என கரடிவிடுவதாகும்.


எனவே தமிழ் தேசம் என்ற ஒன்று இலங்கையில் உண்டு. அதுதான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துகின்றது. அது தான் தனக்கான அரசைத்தான் புதிதாகக் கோருகின்றது. இதைவிடுத்து தமிழ் மக்கள் போராட்டத்தை கற்பிதம் செய்து (வெற்றிடத்தில்) போராடவில்லை. அதுபோல் சிங்களப் பேரினவாதம் கற்பிதம் செய்தல்ல. மாறாக ஏகாதிபத்திய பொருளாதார அடிப்படை மீதான போராட்டமே இனமோதலாக மாற்றம் அடைந்தது.


அடுத்து பாசிசம் என்பதை எதிர்ப்பதற்கு, தமிழ் மக்கள் பாசிசம் பற்றி "கற்பிதம்" செய்து எதிர்ப்பது அல்ல. மாறாக வர்க்க அடிப்படையில் பிரச்சiனையை அணுகுவதும், அதேநேரம் முதலாளித்துவத் தேசியம் பாசிசமாகவே தவிர்க்க முடியாது இருக்கும் என்ற வரலாற்றுப் பாடத்தை, ஏகாதிபத்திய சகாப்தத்தில், உலக மயமாதலில் நாம் தெளிவாகக் கண்டு கொள்ளும், உலக வர்க்க ஆய்வுதான் எம்முன் தேவை. அதைவிடுத்து "கற்பிதம்" என கரடி விடுவது, உண்மையில் மக்களை மந்தைகளாக்குவதே ஒழிய வேறு ஒன்றுமல்ல.


இந்தியாவில் நிறப்பிரிகைக் கும்பல் "தமிழகத்தில் தேசிய இயக்கங்கள் எழுச்சிபெற்றுக் கொண்டிருக்கின்றன" என்கின்ற வாதத்தில் இவர்கள் கூறும் " தேசிய விடுதலைப் போர்தான் தேசத்தை உருவாக்குகின்றது " என்பது தமிழ் நாடு என்ற ஒரு தேசம் இருப்பதை மறுக்கின்றது. மாறாக தமிழ் நாடுதான் தேசிய விடுதலையைக் கோருகின்றது.


இனி தமிழ் நாடு தேசிய இன முரண்பாட்டை பிரதான முரண்பாடான இந்தியாவில் கொண்டிருக்கின்றதா? எனின் இல்லை.


ஏன் எனின் இந்தியாவில் காஸ்மீர், நாகா, ....... தேசிய இனமுரண்பாடு கூர்மை அடைந்தது போல் தமிழ் நாட்டு தேசிய இன முரண்பாடு இருக்கவில்லை. மாறாக தேசிய இனமுரண்பாடு இரண்டாவதாகவே உள்ளது. வர்க்கப் போராட்டம் முதன்மையானதாகவும் அதற்குப்பின் தேசிய, சாதிப் போராட்ங்கள் உள்ளன. ஏனெனில் பாட்டாளிவர்க்கம் முனைப்பான போராட்டத்தில் ஈடுபடுகின்றது.


இதை மறுதலித்தபடி நிறப்பிரிகைக் குழு "தலித்விடுதலை, பெண்விடுதலை, இன்றி தமிழ் தேசிய விடுதலை பேசுவதில் பொருள் இல்லை" என்கின்றனர். அதாவது இவை வர்க்கப் போராட்டத்திற்கு புறம்பாக, தனியாக அல்லது தமிழ் தேசியத்தின் அங்கமாக காட்டுவதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை அடிப்படையில் மறுதலிக்கின்றனர்.


வர்க்கப் போராட்டம் என்பது தனித்துவமான ஒரே ஒரு இயக்கமல்ல. வர்க்கப் போராட்டம் என்பது சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலும், எல்லா போராட்டத்திலும் நடக்கும் ஒரு கூட்டுப் போராட்டமேயாகும்.

இதை லெனின் " சோஷலிசப்புரட்சி என்பது ஒரே தனிச்செயல் அல்ல, ஒரு களத்திலான ஒரே ஒரு போரும் அல்ல. கூர்மையான வர்க்கச்சச்சரவுகள் கொண்ட ஒரு சகாப்தம் அது. எல்லா முனைகளிலும், அதாவது பொருளாதார, அரசியல் பிரச்சனைகள் அனைத்திலும் தொடர்ச்சியான நீண்ட போராட்டங்கள் நடக்கும் சகாப்தம் அது. " என்றார். -லெனின்- -தே-பி.பா.ச-பக்-181


அப்படி அல்லாத எதுவும் வர்க்கப் போராட்டமல்ல. மார்க்சியம் வர்க்கப் போராட்ட அடிப்படை என்பது எல்லாத் துறைகளிலும் புரட்டிப் போடுவதாகும். இப்படி இருக்க இந்த மார்க்சிய விரோதக் கும்பல் மார்க்சியம், தேசியம், பெண்ணியம், சாதிப் போராட்டம் பற்றி சோவியத் முதல் இன்று வரை மார்க்சியம் கவலைப்படவில்லை. அல்லது பற்றாக் குறை உள்ளது எனக் கூறி, ஏகாதிபத்தியக் கோட்பாட்டை புகுத்தும் கயமையை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


சோவியத் சரி, சீனா சரி நடந்த அனைத்து வர்க்கப் போராட்டங்களிலும், இவைகளை கவனத்தில் எடுக்காது ஒருக்காலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. அத்துடன் இவைகளுக்குள் இருந்த முரண்பாடு சோசலிச கட்டம் முழுக்க நீடிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் திரிபுவாத மார்க்சிய விரோதக் கும்பல் எப்போது, புரட்சியின் பின் இருந்து என்று ஆதாரமான ஒன்றைக் காட்ட முற்படுகின்றனர். இவர்கள் அரசைக் கைப்பற்றியவுடன் எல்லாம் முடிந்துவிடும் என்ற இயங்கா நிலையியல் கோட்பாட்டை முன்தள்ளி, பின்னர் முதலாளித்துவக் கூறுகளும், அதன் தொடர்ச்சியில் நீடிக்கும் சோசலிச சமுதாயத்தை சுட்டிக்காட்டி மார்க்சியத்தை சொச்சைப் படுத்தி மறுக்க முனையும் விளைவுதான் இந்த வாதங்கள்.