Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மனித வாழ்வைச் சூறையாடும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொழுப்பு

மனித வாழ்வைச் சூறையாடும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொழுப்பு

  • PDF

 மக்களின் வாழ்வைச் சூறையாடும் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகில் எப்படி பெருக்கெடுத்து எப்படிக் கொழுக்கின்றது என்பதை சில நாடுகள் ரீதியாக விரிவாகவும் குறிப்பாகவும் ஆராய்வோம்.


 உலகில் அமெரிக்கா அல்லாத மிகப் பெரிய 500 நிறுவனங்களில், மிகப் பெரிய ஆஸ்திரேலிய நிறுவனங்களின் சொத்துக்கள் கோடி டாலரில்


                                                                                                                                2003          2002        2001          2000       1999        1998          1997
மிகப்பெரிய ஆஸ்திரேலிய நிறுவனம்                                               1,520        1,778       1,607        1,833        1,641      1,646         1,440
மிகப்பெரிய 5 ஆஸ்திரேலியப் பன்னாட்டு நிறுவனங்கள்        6,660         6,910      7,250         7,065        7,035     6,735         6,036
மிகப்பெரிய 10  ஆஸ்திரேலியப் பன்னாட்டு நிறுவனங்கள்   10,650      11,310    11,755       11,415     11,490    10,585        9,697


 உலகில் அமெரிக்கா அல்லாத மிகப் பெரிய 500 நிறுவனங்களில், மிகப் பெரிய கனடா நிறுவனங்களின் சொத்துக்கள் கோடி டாலரில்
                                                                                                                                2003         2002         2001          2000        1999         1998        1997
மிகப்பெரிய கனடா நிறுவனம்                                                              1,750        1,751        3,029          2,221       1,355        1,228       2,065
மிகப்பெரிய 5 கனடா பன்னாட்டு நிறுவனங்கள்                           7,660       7,905         9,300         7,440       6,135         7,140      6,440
மிகப்பெரிய 10 கனடா பன்னாட்டு நிறுவனங்கள்                       13,840     14,650      15,855       12,725     16,265      11,820    10,605


 உலகில் அமெரிக்கா அல்லாத மிகப் பெரிய 500 நிறுவனங்களில், மிகப் பெரிய பிரான்ஸ் நிறுவனங்களின் சொத்துக்கள் கோடி டாலரில்


                                                                                                                               2003       2002         2001         2000        1999        1998             1997
மிகப்பெரிய பிரான்ஸ் நிறுவனம்                                                       9,650       9,424      10,554       8,306        7,872       7,690           6,048
மிகப்பெரிய 5 பிரான்ஸ் பன்னாட்டு நிறுவனம்                         32,505    32,760      35,585      27,720     22,875     22,140        21,625
மிகப்பெரிய 10 பிரான்ஸ் பன்னாட்டு நிறுவனங்கள்               52,647    52,285       52,320     43,805     38,215     37,190         36,890
மிகப்பெரிய 25 பிரான்ஸ் பன்னாட்டு நிறுவனங்கள்               82,731    81,450       80,100      67,890    65,890     64,265         62,085


 1995இல் பிரான்சில் 3497 இயந்திர தொழில்துறை உற்பத்தியில் 2.3 கோடி ஈரோ அதிகமான (12 கோடி பராங்) முதலீட்டை தாண்டியிருந்தது. இதில் 12.25 கோடி ஈரோவை (100 கோடி பராங்) தாண்டிய முதலீட்டைக் கொண்ட 756 நிறுவனங்கள் இருந்தன. 2000இல் 20 பேருக்கும் குறைந்த வேலை செய்யும் உற்பத்தித்துறை மொத்த தொழில் துறையில் 97 சதவீதமாக இருந்தது. இதில் 58 லட்சம் பேர் வேலை செய்தனர். இது பிரான்சின் மொத்த தொழில் செய்வோரில் 37 சதவீதமாகும். இதில் சம்பளம் பெறுவோர் 40 லட்சம் மட்டுமே. மிகுதிப் பேர் தனிப்பட்ட சிறிய முதலாளிமாராவர். அதாவது 18 லட்சம் பேர் அப்படி உள்ளனர். சிறு உற்பத்தித்துறை கட்டும் வரி 16,800 கோடி ஈரோவாகும். அதாவது மொத்த வரியில் 28 சதவீதமாகும் இவர்கள் தமது உற்பத்தியில் 4,800 கோடி ஈரோவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இது மொத்த ஏற்றுமதியில் 9 சதவீதமாகும் இவர்களின் வருடாந்தர முதலீடு 2,600 கோடி ஈரோவாகும். இது மொத்த முதலீட்டில் 20 சதவீதமாகும். 20 உழைப்பாளிகளுக்கு குறைந்த நிறுவனங்கள் படிப்படியாக அழிந்து வருகின்றன. பெருமளவில் சிறு கடைகளே எஞ்சிக் கிடக்கின்றன. பெரும் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் தான் கொழுத்து வருகின்றது. இது ஒவ்வொரு ஏகாதிபத்தியத்தினுள்ளும் நடக்கும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இன்று தனிப்பட்ட உற்பத்தி முறையை அடிப்படையாக கொண்ட செயல்பாடுகள், பிரான்சில் மொத்தமாக 24 லட்சமாக உள்ளது. இது பிரிட்டனில் 34 லட்சமாகும். ஸ்பெயினில் 35 லட்சமாக உள்ளது. இவை படிப்படியாக குறைந்து வருகின்றன.


 உலகில் அமெரிக்கா அல்லாத மிகப் பெரிய 500 நிறுவனங்களில், மிகப் பெரிய ஜெர்மானிய நிறுவனங்களின் சொத்துக்கள் கோடி டாலரில்


                                                                                                                            2003              2002           2001            2000          1999         1998      1997
மிகப்பெரிய ஜெர்மனியப்  பன்னாட்டு நிறுவனம்                    14,078           13,680       14,960         15,163         7,630        7,155      7,070
மிகப்பெரிய 5 ஜெர்மனியப்  பன்னாட்டு நிறுவனங்கள்         45,668           44,915       44,295         42,230       30,575      29,985   29,860
மிகப்பெரிய 10 ஜெர்மனியப் பன்னாட்டு நிறுவனங்கள்       67,710          67,545       66,570         62,270       49,725      48,525    49,035
மிகப்பெரிய 25 ஜெர்மனியப் பன்னாட்டு நிறுவனங்கள்    1,00,560       1,01,565    1,00,340         93,090       83,045      79,670   82,650


 உலகில் அமெரிக்கா அல்லாத மிகப் பெரிய 500 நிறுவனங்களில், மிகப் பெரிய இத்தாலிய நிறுவனங்களின் சொத்துக்கள் கோடி டாலரில்


                                                                                                                          2003         2002           2001         2000       1999       1998         1997
மிகப்பெரிய இத்தாலியப் பன்னாட்டு நிறுவனம்                     5216         5152           5307         4393       5105        5260        5049
மிகப்பெரிய 5இத்தாலியப்பன்னாட்டு நிறுவனங்கள்           20410       19805        19880       17895     15765      15405      15385
மிகப்பெரிய 10 இத்தாலியப் பன்னாட்டு நிறுவனங்கள்     25510       26735        26855       23175      21215      20330      21110


 உலகில் அமெரிக்கா அல்லாத மிகப் பெரிய 500 நிறுவனங்களில், மிகப் பெரிய ஜப்பானிய நிறுவனங்களின் சொத்துக்கள் கோடி டாலரில்


                                                                                                                 2003           2002         2001          2000         1999         1998              1997
மிகப்பெரிய ஜப்பான் பன்னாட்டு நிறுவனம்                  13,162        12,075       10,980      12,370      10,919      14,275           14,495
மிகப்பெரிய 5 ஜப்பான் பன்னாட்டு நிறுவனங்கள்       52,475        51,210       57,925      58,095      51,780      61,205           66,400
மிகப்பெரிய 10 ஜப்பான் பன்னாட்டு நிறுவனங்கள்     86,630        84,420      96,770       98,600      87,240      99,910        1,07,175
மிகப்பெரிய 25 ஜப்பான் பன்னாட்டு நிறுவனங்கள்  1,29,090    1,38,640    1,61,630    1,60,115  1,40,440   1,53,905       1,69,620


 உலகில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு நிகராகவே, ஜப்பான் மிகப் பெரிய அளவில் பன்னாட்டு  நிறுவனம் சார்ந்த ஒரு வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. 1999இல் ஆசியாவில், அதாவது ஜப்பான் தொடக்கம் ஆஸ்திரேலியா வரையில் காணப்படும் மிகப் பெரிய 1000 நிறுவனங்களில் 696 ஜப்பானுக்குச் சொந்தமானதாக இருந்தது. 70 நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமானது. தென்கொரியாவுக்கு 59ம், தாய்வானுக்கு 37ம், சிங்கப்பூருக்கு 34ம், ஹாங்காங் 18ம், சீனா 25ம், இந்தியா 20யையும் கொண்டு இருந்தது. ஒட்டு மொத்தமாக 1,000 நிறுவனங்களின் மொத்த வர்த்தகம் 5,40,920 கோடி டாலராகும். இதன் நிகர லாபம் 9,070 கோடி டாலராக இருந்தது. நிலையான சொத்தின் பெறுமதி 6,26,840 கோடி டாலராக இருந்தது. இங்கு மொத்தமான தொழில் செய்வோர் எண்ணிக்கை 1.46 கோடியாக இருந்தது. இவற்றில் விரல்விட்டு எண்ணக் கூடிய முன்னணி நிறுவனங்கள் மிகப் பிரமாண்டமானவை. உதாரணமாக ஜப்பானின் மிகப் பெரிய 25 நிறுவனங்களின் சொத்துக்கள் 1,29,090 கோடி டாலராகும். ஆஸ்திரேலியாவின் முதல் 10 நிறுவனங்களின் சொத்துக்களின் பெறுமானம் 10,650 கோடி டாலராகும்.


 ஆசியா போல் ஆப்பிரிக்காவை எடுக்கும் போது, 1999இல் முதல் 500 நிறுவனங்களின் மூலதனத்தின் மொத்தப் பெறுமானம் 22,500 கோடி டாலராக இருந்தது. இது ஏகாதிபத்திய நாடுகளில் மிகப் பெரிய நிறுவனங்களின் சொத்தை விடவே குறைவானது. 2001இல் ஆபரிக்காவில் உள்ள மிகப் பெரிய 500 நிறுவனங்களினது மூலதனம் 26,030 கோடி டாலராகும். முதல் 100 நிறுவனத்தின் மூலதனம் 19,000 கோடி டாலராகும். இது 2000இல் 17,800 கோடி டாலராக இருந்தது. முதல் 10 நிறுவனத்தின் சொத்துக்கள் 7,360 கோடி டாலராகும். இது 2000இல் 6800 கோடி டாலராக இருந்தது. எங்கும் மூலதனத்தின் குவிப்பு ஒரு அலையாகவே உள்ளது.


 ஆப்பிரிக்காவின் முதல் 500 நிறுவனங்களை எடுத்தால், அவை பெருமளவில் வெள்ளையின அதிகாரத்தை நீண்டகாலம் கொண்டிருந்த தென்ஆப்பிரிக்காவிலேயே குவிந்து கிடக்கின்றன.


நாடுகள்                                              முதல் பெரிய 500 நிறுவனத்தில்  சதவீதம்                                        கோடி  டாலரில்

தென்ஆப்பிரிக்கா                                                                 66.83                                                                                        17300
அல்ஜீரியா                                                                              10.43                                                                                          2710
மொறோக்                                                                                 7.74                                                                                          2010
எகிப்து                                                                                        2.83                                                                                             730
துனிசியா                                                                                   2.34                                                                                            600
நைஜீரியா                                                                                 1.72                                                                                             440
மற்றையவை                                                                          8.11                                                                                          2100


 ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்களை பெருமளவில் ஏகாதிபத்திய நாட்டு குடியுரிமை கொண்டவர்களுக்கு சொந்தமாகவும், காலனித்துவ வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரும் தமது கையில் குவித்து வைத்து இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. உலகில் உற்பத்திகள், சொத்துக்கள் பெருமளவில்  வெள்ளையின பிரதேசங்களிலும், காலனித்துவ வெள்ளையினப் பரம்பரையினரிடமும் குவிந்து கிடக்கின்றன. காலனிகளின் சுதந்திரம் என்ற பெயரில், சொத்துடைமை பாதுகாக்கப்பட்டு வழங்கப்பட்ட அதிகார மாற்றம்  பொருளாதாரத் துறையில் மக்களைச் சூறையாடுவதை உறுதி செய்தே வழங்கப்பட்டது. அதன் கொழுப்பே முன்னைய வெள்ளையின காலனிகளில் வெள்ளையரிடமும், வெள்ளையரிடம் நக்கிப் பிழைத்த உள்ளூர்க் கும்பலிடமும் குவிந்து கிடக்கின்றது. 


 உலகில் அமெரிக்கா அல்லாத மிகப் பெரிய 500 நிறுவனங்களில், மிகப் பெரிய பிரிட்டிஷ் நிறுவனங்களின் சொத்துக்கள் கோடி டாலரில்


                                                                                                                    2003            2002            2001         2000          1999         1998          1997
மிகப்பெரிய பிரிட்டிஷ் நிறுவனம்                                          17,943         17,421        14,914      10,536         9,370       12,810      12,818
மிகப்பெரிய 5 பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்கள்      49,895         43,390         45,280     33,565       28,875       32,395      30,550

மிகப்பெரிய 10 பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்கள்    68,650         59,825         61,985     51,275       44,880      67,815       41,455
மிகப்பெரிய 25 பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்கள்    98,000         90,625         91,130      73,700      72,205      91,900       63,670


 இப்படி அமெரிக்கா அல்லாத நிறுவனங்களின் சொத்துக்கள் குவிந்து வருகின்றது. அமெரிக்கா பற்றிய முழுத் தகவலையும் பெற முடியவில்லை. அமெரிக்காவில் மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் 1960இல் 13 தொழில் பிரிவுகளில் மட்டும் செயற்பட்டன. ஆனால் 1980இல் 22 தொழில்களில் ஈடுபட்டன. 1976இல் 17,500 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வர்த்தகம் செய்த 12 மிகப் பெரிய அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்காவின் மிகப் பெரிய 500 தொழில் நிறுவனங்களின் மதிப்பில் 27 சதவீதத்தையும், வர்த்தகத்தில் 29 சதவீதத்தையும் கட்டுப்படுத்தின. 50 மிகப் பெரிய வங்கிகளின் சொத்து மற்றும் வைப்புத் தொகையில் 61 சதவீதத்தை 10 வங்கிகளே கட்டுப்படுத்தின. இதுவே 1985இல் அமெரிக்காவில் இருந்த 500 பெரும் ஏக போக நிறுவனங்கள் அங்கிருந்த ஆலைத் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கையும், ஆலைச்சொத்து மற்றும் லாபத்தில் முக்கால்வாசிப் பங்கையும் கட்டுப்படுத்தின. ஆனால் இந்த 500 ஏகபோக நிறுவனங்கள் அமெரிக்கா தொழில் கழகங்களில் 0.2 மட்டுமே. இந்த 500 உற்பத்தியில் 50 சதவீதத்தைக் கட்டுப்படுத்தின.


 பிரதான ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் கடும் முரண்பாட்டுக்கு இடையில், எப்படி மூலதனக் குவிப்பு நடைபெறுகின்றது என்பதையே இவை எடுத்துக் காட்டுகின்றது. அமெரிக்கா மற்றும் அமெரிக்கா அல்லாத ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் உள்ள மூலதனத்துக்கு இடையேயான முரண்பாடுகள், தவிர்க்க முடியாமல் தேசங்கடந்த சந்தைப் போட்டியைக் கூர்மையாக்கி வருகின்றது. மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் மற்றைய ஏகாதிபத்தியங்களுக்கும் இடையேயும் முரண்பாடுகள் கூர்மை அடைந்து  சந்தையைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிகழ்கின்றது. இதனால் முன்னணி நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் மூலதனத்தின் இருப்பு அங்கும் இங்குமாக அலைபாய்கின்றது.


 ஏகாதிபத்திய முரண்பாடுகளை இராணுவ ரீதியாக அணுகுவதைத் தவிர்க்கவே, உலகை மேலும் உலகமயமாதலூடாகக் கடுமையாகச் சூறையாடுகின்றனர். இதன் மூலம் தமக்கிடையேயான மூலதனப் போட்டியைத் தணிக்க விரும்புகின்றனர். அதாவது உலகின் சிறு உற்பத்திகளையும், தேசிய உற்பத்திகளையும் கைப்பற்றி அழிப்பதன் மூலம், தமது சொந்த மூலதனத்தின் ஏகபோகத்தைத் தக்கவைத்து அதை உலகமயமாக்கவே விரும்புகின்றனர். இதன்மூலம் ஏகபோக மூலதனத்துக்கு இடையிலான ஏகாதிபத்தியப் போட்டியைப் பின்தள்ள வைப்பதன் மூலம், ஏகாதிபத்தியத்திற்கு இடையேயான முரண்பாட்டைத் தவிர்க்க முனைகின்றனர். ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான மூலதனப் போட்டியைத் தவிர்க்கும் மற்றொரு வழியாக, மிகப்பெரிய பன்னாட்டு தேசங்கடந்த நிறுவனங்கள் தமக்கு இடையில் ஒன்று சேருகின்றன. இதன் மூலம் மிகப் பலம் பொருந்திய வகையில், உலகச் சந்தையைக் கைப்பற்றக் களமிறங்கி நிற்கின்றன. இவை உலகமயமாதலில்


புதிய ஒரு தொடர் அலையாக உள்ளது. இவற்றைக் கடந்தும் ஏகாதிபத்திய முரண்பாடு உலகமயமாதலில் அக்கம் பக்கமாகவே வழிநடை போடுகின்றது. மிகப்பெரும் வீதத்தில் உலகம் சூறையாடப் படுவதால் இந்த முரண்பாடு முதன்மை முரண்பாடாக முன்னிலைக்கு வரவில்லை. ஆனால் அவை தணலாகவே வெந்து சிவந்து நிற்கின்றது. மேலுள்ள தரவுகள் இதைத் தெளிவாக எடுத்துக் காட்டி நிற்கின்றன.