Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் களவாடிய இசையே கர்நாடக இசை

களவாடிய இசையே கர்நாடக இசை

  • PDF

"களம்7" தமிழ் கலைகளின் தன்னம்பிக்கை தொடர்பாக எனத் தலைப்பிட்ட சிவசேகரத்தின் கட்டுரையை விமர்சனத்துக்குட்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

 

 

மொழி என்பது இரண்டு மனிதருக்குள் தொடர்பை ஏற்படுத்தும் ஊடகம் என்ற நிலை மாறி, இது பொருளாதார நலத்துடன் தொடர்புடைய மற்றைய மொழிகள் மீது ஆதிக்கம் செய்யும் ஊடகமாக இன்று உலகில் உள்ளது. உலகளவில் தமிழ் மொழி அதிகமாகப் பேசும் மக்கள் தொகைக்குள் உள்ளடக்கும் வழகயில் முதல் 15க்குள் இருந்து போதும், தமிழ் மொழி தனது நிலையை இழந்துள்ளது. அந்துளவுக்கு ஆதிக்கச் சக்திகளாலும், பொருளீட்டும் வேட்கையின் வெறியில் தமிழ் சிதைந்து போயுள்ளது. நாம் மொழி பற்றிப் பேசும் போது ஒரு மொழி வெறியனாக நின்று பெசுவதல்ல. மாறாக மொழி மீதான ஒடுக்குதலுக்கூடான ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் வகையில் மொழிபற்றிப் பேசுகிறோம்.

 

உலகில் 30 லட்சம் வருடங்களுகஇகு முன் பரந்து வாழ்ந்து மனித இனம் அழிந்து இறுதியாக ஆபிரிக்காவில் ஓரிடத்தில் மாத்திரமே  மனிதன் எஞ்சியிருந்தான். அவனே எல்லா மனித இனத்தின் மூதாதையன் என்பதுடன், அந்து மக்கள் பேசிய ஒரு மொழியிலிருந்தே ஏனைய மொழிகள் தோன்றின என்பதை இன்ஐறய புதைபொருள் சமூக ஆய்வாளர்கள் திட்டவட்டமாக நிறுவியுள்ளனர்.

 

மொழிதொடர்பாகவே, இனம் தொடர்பாகவே பேசும் போது வெறுப்பு என்பதற்கு அப்பால், ஆதிக்க சக்திகளை எதிர்த்தல் என்ற அளவில் நாம் மொழி இனம் தொடர்பாக தெளிவான வரையறையைக் கொண்டிருக்க வேண்டும். உலகளவில் அதிக்க சக்திகளை எதிர்க்கும் வைகையில் மக்கள் தமது போராட்டத்தை எதிர்காலத்தில் முன்னேடுப்பர். இறுதியாக ஆதிக்க சக்திகள் இல்லாத ஒரு நிலையில் உலகில் எல்லா மனிதனுக்கும் ஒடுக்கு முறையற்ற, சுரண்டலற்ற, சகமனிதனாக மாறும் நாளில் மொழி என்பது தொடர்பு ஊடகமாக மத்திரமே இருக்கும். இந்நிலையில் இரண்டு மனிதர்கட்கிடையில் தெடர்பு மொழி என்ற வகையில் பல மொழித் தேவை இல்லாது போய் ஒரு மொழியின் தேவை உருவாகும். அப்போது ஒரு இலகுவான மொழியைத் தேர்ந்தேடுக்கவே, அல்லது புதியதோர் மொழியை மக்கள்  உருவாக்குவர். இது எதிர்காலத்தில் மக்கள் முன் உள்ள பாரிய கடமையாகும்.

 

நாம் இன்று பல்வேறு பட்ட ஆதிக்க எல்லைக்குள் வாழ்வதால் ஆதிக்க எல்லைக்குள் வாழ்வதால் நாம் அதை எதிர்த்துப் போராடும் வாழ் நிலையில், மொழி தொடர்பான பார்வை தெழிவாக இருக்க வேண்டும். இந்து வழகயில் கலை தொடர்பாக, குறிப்பாக இசை தொடர்பாக ஆராய்வோம்.

 

இன்று தமிழிசைக்கு ஏற்படும் ஆபத்து ஒரு புறம், பார்ப்பனிய சமஸ்கிறிதத்தால் ஏற்படும் ஆபத்து மறுபுறம், சினிமா மெல்லிசை மூலம் உட்புகும் மேற்கத்தேய சீரழிவு இசை மூலம் ஏற்படுகின்றது. இன்றுள்ள பார்ப்பனிய கர்நாடக இசை நுட்பமான சதியால் தமிழிசையை விழுங்கியது. அத்தேடு திரையிசையுடன் கூடிய மேற்கத்தேய சீரழிவு இசை தமிழிசையை அழித்தது ஒழிக்கின்றது. இதிலிருந்து மீள சிவசேகரம் உட்பட பலர் கர்நாடக இசையை தமிழில் பாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். இன்று கர்நாடக சங்கீதம் இருக்கும் நிலையில் அது பார்ப்பனிய இந்து வாதத்தின் அடிப்படையாக உள்ளதோடு இந்து மத வெறியின் ஊடாகவும் உள்ளது. குறிப்பாக இது தமிழ் மொழி பெசும் மக்களிடையே இசை என்ற நிலையில் இல்லை. தமிழ் மொழி பெசும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களிடமிருந்து அன்னிபப் பட்ட வகையில் இந்து வாதத்தைப் போமிக்கும் ஒரு வடிவமாகவே உள்ளது. இதை மாற்றி அமைப்பதென்பது இதற்கெதிரான போராட்டத்தின் வெற்றியின் பின்பே சாத்தியமாகும். அந்து வெற்றி சமூக மாற்றத்தின் பின்பே ஒழிய முன்னேருபோதும் சாத்திமில்லை. தமிழிசையிலிருந்து களவாடிய கர்நாடக இசையை மாத்திரம் இன்று பலர் தமிழிசையாக வரையறுக்க முனைவது ஒரு மோசடியே. இன்று நாட்டுப்புற இசை என்பது இழிசார் பிரிவினரதும் உழைக்கும் மக்களின் வடிவமாகவும் உள்ளது. இவ்விசைக்கு மதப்பிரிவுகள் கிடையாது. இவ்விசை மீது நடத்தும் ஆக்கிரமிப்பும், அழிப்பும் இன்றைய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

 

இன்றைய உடனடித் தேவை நாட்டுப் புற இசையை மீட்டேடுப்பதும், அதைத் தமிழ் மக்கள் இசையாக வளர்ப்பதும் அவசியமாகும். இது இந்தியா இலங்கை என்றளவில் விரிவான விடையம். நாட்டுப்புற இசைக்கு சவால் விடும் மெல்லிசையை எடுப்பின்


1.இழையராஜவின் சினிமா இசை ஸ்ரீ நாட்டுப்புற இசை + மெல்லிசை + கர்நாடக இசை + மேற்கத்தேய இசை என்பனவாகும். 


2.ஆர் ரகுமானின் திரையிசை ஸ்ரீ மெல்லிசை + கர்நாடக இசை + மேற்கத்தேய இசை என்பனவாகும்.

 

இதுவே இவ்விருவர்களுக்கும் உள்ள வேறுபாடாகும். நாட்டுப்புற இசைக்கு சவால் விடுபவர்கள் இவர்களாகவே உள்ளனர். இதையொட்டி விரிவாகக் கீழே ஆராய்வோம். கர்நாடக இசை டிஎன்பது தமிழிசையில் இருந்து களவாடப்பட்டதே. இது இந்தியாவிற்கப்பால் தேசியத்தின் (சிவசேகரம் கூறுவது போல்) பல்வேறு இசைத் தொகுதிகளின் தொகுப்பல்ல. இந்துpயத் Nதுசிம் என்ற ஒனஇறு பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டதே ஒழிய அது இயல்பானதாக உள்றும் இருந்துதில்லை, இன்றும் இல்லை.

 

கார்நாடக இசை என்பதற்கும் கர்நாடகாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மலையைக்கல் என்றழைப்புது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது. புறநானூறில் இமய மலையை  வடபெருங்கல் என்று அழைக்கப்படுகின்றது. இNது போல் கல் நாடு என்பது கர்நாடகமாக மருவியது. இதிலிருந்து கர்நாடகத்திற்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. கி.பி 1116 முதல் 1127 வரை மஹாராஷ்டிராவை அடுத்து தெற்கண்டத்திலிருந்து குறுநில மன்னணான சோமேஸ்வரபுல் மோகன் ஒரு இசை மேதையாவான். இவன் மானசொல்லேசம் என்ற  ஒரு இசை நூலை எழுதியவன். இவனது இசையார்வம் தனக்குத் தெற்கேயிருந்து (கீழேயிருந்த) கர்நாடகத்தைப் பார்த்து தமிழிசைக்கு கர்நாடக இசை என்று மதல் மதலில் பெயரிட்டான். இது ஒரு குறிப்பாக கீழே யிருந்து கர்நாடகத்தின் பெயரால் கர்நாடக இசை என்று வழங்கினான். 13ம் நூற்றாண்டில் கரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்னகாரம் என்ற முதல் வடமோழி இசை நூலின் பண்ணின் பெயர்கள் தமிழிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இசை தொடர்பான மதல் வடநூல் இதுவாகும். இதில் கர்நாடக இசை ராகங்கள் தமிழிலேயே உள்ளன. இதில் தேவாரவதனி எனவும், தமிழில் குறிப்பிடப்பட்டுளளது. இன்று இவைகள் மறைக்கப்பட்டு விட்டன. கர்நாடக இசை தமிழில் இருந்து களவாடப்பட்டது என்பதற்கு இதைவிடச் சிறந்து ஆதாரம் தேவையில்லை. அடுத்து பார்ப்பனியத்தின்  இசை எனவும் அதை இறைவன் அருளினான் என்ற மோசடியையும் பார்ப்போம். பத்தாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட வேதம்;, இசை, நாட்டியம் தொடர்பாக என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம். அவர்கள் சாம வேதத்தில் இருந்தே கர்நாடக இசை தேன்றியது எனப் பொய் கூறுவது வழக்கமாக உள்ளது. தேத்தில் பிராமணர்கள் ஆடல், பாடல்களில் ஈடுபடுவது திட்டவட்டுமாகத் தடைசெய்யப்பட்டு இருந்தது. இதை மீறுபவர்கள் பார்ப்பனிய சேரிகளில் ஒதுக்கி விடப்பட்டனர். இது தொடர்பாக உபநிடத்திலும், சிலப்பதிகாரத்திலும் பல குறிப்புகள் உண்டு. மனு சாஸ்திரத்தில் நாலாவது அத்தியாயத்தில் உள்ள பதினைந்தாவது பாடலில் ஆடுவது பாடுவது கூடாது எனப் பிராமணர்கட்கு உபதேசிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மரபுப்படி, வேதப்படி இசை தொடர்பான அடிப்படை அறிவு கூட இருக்கவில்லை. தமிழ் பகுதியுடன் ஏற்பட்ட தொடர்பை அடுத்தே இசையுடன் பாடவேண்டும் என்ற ஆவல் பார்ப்பணர்கட்கு ஏற்பட்டது. இதன் பின்பு ரிக்வேதத்தில் இலகுவான பகுதியைப் பிரித்து சாமவேதம் என்ற பகுதியை உருவாக்கி அதற்கு சாமகானம் என்று பெயரிட்டுப் பாடினர். அது ஒரு இசையாகவே இருக்கவில்லை. இதைப் பார்ப்பணர்களே குறிப்பிட்டுள்ளனர். சாமகாணம் என உருவாக்கிய இசை நரி ஊளையிடுவதைப் போன்றுள்ளது எனவும் பார்ப்பணர்கள் குறிப்பிட்டுள்ளனர். பார்ப்பானின் ~~மனுசங்|| கதையில நாலாவது பகுதியில் 124ஆவது குறிப்பில் சாமவேத இசையும் அதன் இசையின்மை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக்வேதத்தில் எட்டாவது அத்தியாயத்தில் 5தாவது குறிப்பிலுள்ள 160வது பாடலில் சாமகானம் பாடும் போது நரி ஊளையிடுவது போல் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதத்தின் எட்டாவது பகுதியில் சாமகானம் காதுக்கு தவளை கத்துவது போல் உள்ளது என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனரே குறிப்பிட்டுள்ளனர். ஆனவே கர்நாடக சங்கீதம் என்பது பார்பணர்களின் சொந்தச் சரக்கல்ல. மாறாக தமிழர்களிடம் இருந்து சதிமூலம் கைப்பற்றியதாகும்.

 

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து உருவாக்கப் பட்டதாகக் கூறும் சிவசேகரத்தின் கூற்று பார்ப்பணியத்தின் சேவையை மெச்சுவதாகும். பார்ப்பணர்கள் ஆடல் பாடல்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருந்து காலத்தில் அவர்களிடம் இசை எதுவும் இருக்கவில்லை. இதை நாம் மேலும் ஆராயின் இன்று கர்நாடக சங்கீதத்தில் உள்ள சமஸ்கிருதச் சொற்களை எடுப்பின் கீர்த்தனை என்பது வடசொல்லல்ல. கீர்த்தி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கீர்த்தனை என்ற சொல்லை உருவாக்கினார்கள். இசைப்பாட்டு என்பது செந்துரை, வந்துரை, வரி, உரு எனத்தமிழில் அழைக்கப்படுவதாகும். இதில் கீர்த்தனை என்ற கர்நாடக இசைச் சொல் உரு என்பதில் இருந்து உருவானதே. இந்த உரு என்பது தொல்காப்பியத்தில் கூடக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவி என்பது பல்+தளிர் என்பதிலிருந்து உருவானது. அதாவது பல்லவி என்பது தமிழில் தளிர்தல் என வருவதாகும். அனு பல்லவி என்பது தமிழில் பின்னால் வருவதாகும். தமிழிசையைப் பதினைந்தாம் நூற்றாண்டில் முத்துத்தாண்டவப் பிள்ளை என்ற தமிழரே ஒழுங்குபடுத்திப் பயன் படுத்தியவராவார். சுதந்திர தாசனோ அதற்குப் பின்வந்து தியாகராஜரோ இனஇறு பாடும் கர்நாடக இசை வடிவை உருவாக்கினர். இவர்கட்டுகு கீர்த்தனை தெரியாது. முத்துத்தாண்டுவப்பிள்ளை இவ்விசையைத் தேவாடத்தில் இருந்தே உருவாக்கியவர். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவார இசை தொல்காப்பியத்தில் இருந்தே உருவாக்கப்பட்டது. இது தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நாட்டுப்புற இசையிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதை நாம் கூறத்தேவையில்லை. இனஇறுள்ள கர்நாடக இசையிலுள்ள ஒவ்வேரு சமஸ்கிரிதச் சொல்லும்.எந்த தமிழ் சொல்லிலிருந்து உருவானது என்பதற்கு தமிழில் மிகச்சிறந்த ஆதாரங்கள் உண்டு. கிர்த்தனை, பல்லவி, தோடி, சரணம், கல்யாணி, திருச்சங்கராபரணம், அதிகாமபேதி ...... ........ என்ற அனைத்து சமஸ்கிருதச் சொல்லும் எந்தத் தமிழ் சொல்லிலிருந்து களவாடப்பட்டது என நிறுவ முடியம். இன்று ச,ரி,க,ம,ப,த,நி என்ற சமஸ்கிருத சொற்கள் தமிழிசையான குரல், சுத்தம், கைக்கிளை, உழை, இழி, விளரி என்ற சொற்களிலிருந்தே களவாடப்பட்டது. 1917ம் ஆண்டு தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ~கர்ணாமிரத சாகரம்| என்ற 1500 பக்கங்கள் கொண்ட நூலில் கர்நாடக இசை தமிழிலிருந்து எப்படி களவாடப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக நிறுவியுள்ளார். அதை அக்காலத்தில் இருந்து பல சங்கீத வித்துவான்காள் ஏற்றுக் கொண்டதை, அதே நூலில் அவரவர்களால் சமர்பிக்கப்பட்ட மடலின் மூலம் உள்ளடடக்கப் பட்டுள்ளது. இந்து தழில் ஏழு இசையளவு தொடர்பாக 2700 ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொல்காப்பியத்திலும் ஆதாரமுண்டு. எஸ். ராமநாதன் என்ற அறிஞ்ஞர் எந்தெந்துத் Nதுவாரத்தில் இருந்து இன்றுள்ள கர்நாடகக் கீர்த்தனை உருவானது என்பதை ஆதாரத்துடன் நிறுவியுள்ளார். தேவார இசைக்கு மூலம் காரைக்கால் அம்மையார் என்பதையும் இறுதியாக நடந்து தமிழாராச்சி மகாநாடு ஏற்றுக் கொண்டுள்ளது.

 

தென்னிந்திய இசை, கர்நாடக இசை, சாஸ்திரிய இசை எனப் பல பெயர்களும் இருந்துள்ளது. தமிழ் மொழியில் இயல், இசை நாடகம் அல்லது முத்தமிழ், மூன்று தமிழ், தமிழ் மூன்று என்ற பெயரிலிருந்து தமிழ் கலை வேறெந்த மொழிக்கும் ஆநேகமாகக் கிடையாது. இசையைப் பொறுத்தவரை செவ்வியல் இசை இருக்கவில்லை. எல்லா மொழிக்கும் நாட்டுப்புற இசை இருந்துள்ளது. நாட்டுப்புற இசையை எடுத்துக் கொண்டால் தமிழில் இன்னும் அழிந்து விடாத சில நூறு சைவகைத் தொகுதிகள் உண்டு. உதாரணம் ஒப்பாரி இசைவகை, தாலாட்டு இசைவகை, மகுடி இசைவகை, வண்டிக்காரப்பாட்டு, அறுவைப்பாட்டு, நடுகைப்பாட்டு, கிளிப்பாட்டு, குயில்பாட்டு, குறவைப்பாட்டு, சங்குப்பாட்டு, நையாண்டிப்பாட்டு, படைப்புவரிப்பாட்டு, பாம்பாட்டிப்பாட்டு, முர்த்தனப் பாட்டு, பல்லாண்டுப்பாட்டு, மயங்கு நிலைப்பாட்டு, முகவரிப்பாட்டு, ........ ...... என சில நூற்றுவகைப் பாட்டு உண்டு. இதற்கு ராகமெல்லாம் உண்டு. இந்தச் சில நூறுப் பாட்டுவகை ஒவ்வேன்றும் தமக்குள் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.


உதாரணமாக தெம்மாங்கு, ஒற்றயைடித் தெம்மாங்கு, நாலடித் தெம்மாங்கு, டப்பாத் தெம்மாங்கு, தெற்கத்தித் தெம்மாங்கு, இழுவைத் தெம்மாங்கு அல்லது நெட்டுத் தெம்மாங்கு, .....  ..... எனத் தொடர்கிறது. நையாண்டி இசை யை எடுப்பின் தெற்கத்தைய நையாண்டி இசை, சோலமலை நையாண்டி இசை, மண்வேட்டி நையாண்டி இசை, ........ ....... எனத் தொடர்கின்றது. சிந்து இசையை எடுப்பின் காவடிச்சிந்து, வழிநடைச்சிந்து, வளையல் சிந்து, கும்மிச்சிந்து, கொலைச் சிந்து, ........ ....... எனத் தொடர்கிறது.

 

பல்வேறு பட்ட தொழில்வகை இருப்பதால் அதைச்சார்ந்து பலவகை நாட்டுப்புற இசைவகைகள் இருப்பது இயல்பாகின்றது. நாட்டுப்புற இசை தொழிலை ஒட்டியும், அவர்களின் அவலத்திலும், சந்தோசத்திலும் உருவானது. இதிலிருந்து சிலவற்றை மூலமாகக் கொண்டே கர்நாடக இசை உருவானது. அந்தத் தமிழிசையைக் களவாடிய பார்ப்பணர்கள் அதைச் சமுஸ்கிருத (தெலுங்கு) இசையாக இந்திய இந்து இசையாக மாற்றியுள்ளனர். இந்நிலையில் தமிழ், நாட்டுப்புற இசையை மீட்டேடுக்க வேண்டும். இது முற்று முழுதாக கர்நாடக சங்கீதத்தில் இருந்து முற்று முழுதாக வேறுபட்டது.

 

நாட்டுப்புற இசையிலிருந்ர் அதை அளந்து கொள்ளும் வகையில் ஒரு எழுத்து முறையுடன் கூடிய இசை அளவுடீகால் உருவாக்கப்பட வேண்டும். அந்து வகையில் த,ந,ர,ல,..... .... என்ற அதிகளவில் வரும் நாட்டுப்புற இசைப்பாடல்களைக் கொண்டு புதிய அளவீட்டு முறையைக் கைக்கொள்ள வேண்டும். இது நடைமுறையுடன் கூடிய அந்து உழைக்கும் மக்களின் இசையைத் தேடுவதுடன் தொடர்புடையது. இதன் மூலம் கர்நாடக சங்கீதத்தின் எழுத்துக்களின் அதிர்வெண்களுக்கு இசைவாக இதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

 

ச-240, ரி- 256, க-258, ம-324, ப-360, த-384, நி-485 என்ற அதிர்வெண் அளவுகோல் போல் நாட்டுப்புற இசையை அளவிடும் புதியதோர் முறையை உருவாக்கவேண்டும். இது த,ந,ர,ல ..... ... என்ற பல நாட்டுப்புற இசையை அடிப்படையாகக் கொண்டதாகும். இன்றுள்ள கர்நாடக இசை சும்மா இருந்து தின்னும் ஒருத்தனுக்கே பொருந்தும் வகையில் உள்ளது. இது உழைக்கம் மக்களிடம் இருந்து முற்றாக அன்னியப்பட்டுள்ளது.

 

மனிதனின் முதல் மொழியான தாளத்தின் பின்பே மொழி உருவானது. தாளம் உடலுக்குள் உள்ளது. உடல் தாளகதியில் இயங்குகின்றது. தாளத்தைக் கையில் எடுக்கும் சினிமா மெல்லிகையுடன் கூடிய மேற்கத்தைய சீரழிவு இசை என்பது மனிதனின் உணர்ச்சியைக் குழப்பி மழுங்கடிக்கின்றது. உணர்ச்சி மனிதனிடம் இருந்து பறிட்டு எழுவது, அதை சிதைப்பதன் மூலம் அவனின் இசையறிவை இல்லாது ஒழுpக்கின்றது.

 

இதன் மூலம் பண்பாட்டுச் சீரழிவைப் புகுத்துகின்றனர். உணர்ச்சி என்ற தளத்தைப் பிடித்தபடி பண்பாட்டுச் சீரழிவு பரப்பப்படுகின்றது. இசை இன்பது ஒரு சூட்சுமமான மொழியாக உள்ளதால் இலகுவாகப் பண்பாட்டுச் சீரழிவு ஏற்படுகின்றது.

இன்று தேவை மக்கள் தமக்கான ஒரு இசையை நாட்டுப்புற இசையிலிருந்து உருவாக்க வேண்டும். இந்து இசையின் மூலம் உன்னதமான மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தை முன் தள்ளிய படி களவாடப்பட்ட கர்நாடக இசையை மீட்பதாகும். இது ஒரு சமுதாயப் புரட்சியின் தொடர்புடைய நடைமுறையுடன் தொடர்புடைய விடையமாகும். இது மாநாடுகள் மூலமே கட்டுரைகள் மூலமே சாத்தியமில்லை. இது நடைமுறையில் உந்தித் தள்ளம் ஒரு கருவியாக மாத்திரமே இருக்க முடியும்.

 

இன்று கர்நாடக சங்கீதம் ஒரு முட்டுச் சந்தியில் உள்ளது. அதைக் கேட்போர் இன்றி பண முதலைகளின் தயவில், இந்திய பார்ப்பனிய அரச ஆதிக்க சதிமூலமே உயிர்வாழ்வது போல் நடிக்கின்றது. இன்று சங்கீதக் கச்சேரிகளை நடத்தும் பணப்போய்களின் கைகளில் கர்நாடகக் கச்சேரி விதைகட்ட மாத்திரமே பயன்படுகிறது. இதிலிருந்து மீள சில தமிழ்பாடல்களை முன்தள்ளுவதும் இசைக்கருவிகளை மாற்றவதும் என வித்தைகாட்டுகின்றனர். இது முன்னேற முடியாத முட்டுச் சந்துpக்கு வந்துள்ளது. இதை அவர்களின் பத்திரிகைகள் தவிர்க்க முடியாமல் ஒத்துக் கொள்கின்றன. இதிலிருந்து மீள நாட்டுப்புற இசையை உண்டுசெரிக்க முயல்கின்றனர் இதை ஒருபோதும் அனுபமிக்கக் முடியாது. கர்நாடக சங்கீதத்துக்கு எதிரான போரில் மேற்குடன் கூடிய மெல்லிசைக்கு எதிரான போரில் நாட்டுப்புற இசை போராடி தமிழிசையை மீட்க வேண்டுமேயொழிய உடசெரிப்புக் உட்பட்டல்ல. என்பதை நாம் தெழிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இக்கட்டுரை தமிழ் நாட்டில் நடந்த 2ம் ஆண்டு தமிழிசை மகாநாட்டுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.   

Last Updated on Friday, 18 April 2008 18:04