Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க இராணுவ வாத அரசியலைக் கைவிடவேண்டும்!

எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க இராணுவ வாத அரசியலைக் கைவிடவேண்டும்!

  • PDF

நீண்ட நெடிய பல துயரம் நிறைந்த எமது தேசிய விடுதலைப் போராட்டம் முன்னேப்போதையையும் விட ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆயிரம், ஆயிரம் மக்களும், இளைஞர்களும் விடுதலைக்காக தம்மை தியாகம் செய்ய, அதேவிடுதலையின் பேயரால் ஆயிரம்,

 ஆயிரம் மாற்றுக் கருத்துள்ள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளின் ஊடாகவே நாம் எம் மண்ணையும், எம் சுதந்திரத்தையும் பறி கொடுத்துள்ளோம். ஆம் எம் தெசிய விடுதலைப் போராட்டம் அதன் வீச்சும் சொந்த சகதிக்குள் சிக்கி அழிந்து சிதைந்து போவது என்பது எம் மக்களின் சொந்த தியாகங்களையே அர்த்தமில்லாதாக்கி விடும்.

 

இந்த நிலையில் நாம் எமது கடந்த காலம் மீதான சீரிய விமர்சனத்தை முன்வைக்க வேண்டும். இன்று எம் மண்ணை இழந்தது புலிகளின் அரசியல் கோளாறுகள் மட்டும் இன்றி அவர்களே இந்நிலைக்கு முழமையான காரணமுமாகும்.

 

எம் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரொக்கிய மான வழியல் மக்களை அணி சேர்த்து சென்று விடவில்லை. மக்களின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களின் ஜனநாயக கோரிக்கைகளை முன்னேடுத்து சென்று விடவில்லை. மாறாக மக்களை மந்தைகளாக்கி, அவர்களின் அறியாமை மீது சவாரிவிட்டு, அவர்களையே அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவக் குழுவாக  புலிகள் சீரழிந்து சென்ற நிலையில் தான் இத்தோல்வி வந்தடைந்தது.

 

எம் மண்ணில் தேசிய விடுதலையின் பால் போராட முற்பட்ட அனைத்து சக்கிகளையும் அழித்து ஒழிக்கப்பட்ட நிலை என்பது தேசிய விடுதலைப் போராட்டத்தை படு பாதாளத்துpற்குள் தள்ளிச் சென்றதேயாகும். இந்நிலை என்பது தேசிய விடுதலைப் பொராட்டம் தொடர்பான எந்த ஆரொக்கிய மான விமர்சனத்தையோ மாற்றுக் கருத்தையோ முன்வைக்க முடியாத ஒரு சூனிய நிலைக்குள் இட்டுச் சென்றது. இது புலிகளின் ஒற்றைப் பரிமான சித்தாந்தத்தை மட்டும் சிந்திக்கவும் தமது தவறுகளையும் இனங்காணவும் முடியாத ஒரு வறட்டுத் தணத்துக்குள் இட்டுச் சென்றது. தேசிய விடுதலைப் போராட்டம் வழைவு, சுழிவுகளைக் கடந்து செல்லும் ஒரு அரசியலை பரந்து பட்ட தலைமையைப் பெற முடியாது போனது என்பது எம்மக்களின் இன்றைய துயரத்துக்குக் காரணமாகும்.

 

பேரினவாத சந்திரிக்கா முன்னணி அரசு, கடந்த இனவாத அலரசுகளை விட மிக மோசமான ஒரு பாசிச அரசாகும். புலிகள் வழைமைபோல் இனம் காண மறுத்து ஆரம்பம் முதலே சந்திரிக்கா பற்றிய பிரமையை தாம் கொண்டு இருந்தது மட்டுமின்றி அதை மக்களுக்கும் எடுத்துச் சென்றனர். இந்த பாராளு மன்ற அரசியல் தளத்தில் எந்த முன்னணிப் பிரிவு அரசு நடாத்தினாலும் அது இந்த இனவாதத்தை விட்டு நகர்ந்து விடமாட்டாது. இது இலங்கை மட்டுமல்ல எல்லா உலக நாடுகளிலும் உள்ள ஒரு பொது உண்மை. ஆனால் சில முற்போக்குகள் தம்மையும் தமது வேடத்தையும் கலைத்து சந்திரிக்கா அரசு பற்றி பிரம்மையை மக்கள் மத்தியில் விதைத்து, மக்களை ஏமாற்றி தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைத்தனர். புலிகள் வழைமைபோல் சொந்த தவறுடன் கூடிய எதிர்ப்புடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை மறந்து சந்திரிக்காவை விடிவின் நாயகியாக இனங்காட்டினர்.

 

எல்லா வற்றையும் மிக அழகாகப் பயன்படுத்திய இனவாதி சந்திரிக்கா புலிகளை அரசியல் ரீதியில் அம்பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டனர். ஏனெனில் எமது போராட்டம் சுயநிர்ணயம் என்ற அரசியல் கோரிக்கையை உள்ளடக்கி இருந்தது. இதன் மேலே இராணுவ நடவடிக்கைகளும் அதில் மக்கள் விரோதமும் புரையோடி இருந்தது. இராணுவ ரீதியான மக்கள் விரோதத்தை மிளமிளக் கூறுவதால் புலிகளை அம்பலப் படுத்த முடியாது என உணர்ந்த சந்திரிக்கா அரசு அது தமது இராணுவ மக்கள் விரோதத்தால் தோல்வி பெறும் என சரியாக கணித்தார்.

 

எனவே இராணுவ மக்கள் விரோத புலி நடவடிக்கைகளை அம்பலப் படுத்தப் படுவதை விட அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தும் முயற்சியில் ஏகாதிபத்தயங்கள் சரியான வகையில் உதவியும் ஆலோசனையும் வழங்கின.

 

அரசு - புலி பேச்சு வார்த்தையில் புலிகள் அரசியல் கோரிக்கையை முன்தள்ளுவதை கைவிட வைத்து, இராணுவக் கோரிக்கைகளை முன்தள்ள வைத்தது சந்திரிக்கா அரசுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். ஏன் எனில் இப்போராட்டம் தமிழ் பேசும் மக்களில் இருந்து அன்னியப் படுத்தப்படுவதும், சர்வதேச ரீதியாக புலிகளை அரசியல் ரீதியில் அன்னியப் படுத்தவும் கூடிய கோரிக்கைகள் வெறும் இரானுவ ரீதியான புலி என்ற இரானுவக் குழுவுக்கும், அரசின் பின் உள்ள இரானுவத்திற்கும் இடையிலான பிரச்சனையாக நகர்த்தியது என்பது புலிகளின் மோசமான அரசியலில் உள்ள வங்குரோத்தாகும்.

 

இரானுவக் கோரிக்கையில் ஏற்பட்ட இழுபறிகளும், இது மக்களின் அடிப்படைப் பிரச்சனை என புலிகள் மீள மீள என்தான் கூறிய போதும் பரந்த தளத்தில் இது தோல்வி பெற்றது. இது இராணுவத்துக்கு இடையில் ஏற்பட்ட சிலபிரச்சனையாக அதில் விட்டுக் கொடுப்பு அற்ற நெருக்கடியாக உலகம் முழக்க எமது தேசிய விடுதலை போராட்டம் மலினப் பட்டு சிதைந்தது.

 

இந்நிலையில் புலிகள் இராணுவ நடவடிக்கை மூலம் அரசில் நடத்தும் போக்கில் முந்திக் கோண்டே தாக்குதலை நடத்தி பேச்சு வார்த்தையை முறித்து புலிகளை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்த சந்திரிக்கா அரசுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். புலிகள் மக்களின் சுதந்திர சமாதனத்தை ஏற்படுத்த அக்கறை அற்ற மக்கள் விரோத அமைப்பாக உலகம் முமக்க இனங்காட்ட சந்திரிக்கா அரசு முடிந்தது என்றால் அது புலிகளின் அரசியலில் உள்ள தவறேயாகும். அத்தவறுகளை முன்பு எந்த இனவெறி அரசும் செய்ய முடியாது இருந்தாலும் அதை சந்திரிக்காலால் செய்ய முடிந்தது என்பது புலிகளின் அரசியலில் முன்னேறிய பார்வை இன்றி ஒரு சுத்த முறை அரசியலாகும்.

 

சந்திரிக்கா இனவாத பாசிச அரசு, ஒரு இனவெறிபிடித்த சிங்கள மேலாதிக்கம் வாய்ந்த அரசு என்பதை இனம் காண மறுத்து இனவெறி அரசின் முன் தமிழ் மக்களின் சாதாரண  ஜனநாயகக் கோரிக்கைகளை முன்னிறுத்தத் தவறியது என்பது புலிகள் மறைமுகமான சந்திரிக்க இனவெறி அரசை பலப்படுத்துவதேயாகும்.

 

மாறாக தமிழ் மக்களின் சாதாரண இனவெறிக் கெதிரான ஜனநாயகக் கொரிக்கைகளை முன் வைத்து அரசை நிறைவேற்றக் கொரியிருப்பின், அரசு அதை வழங்க முடியாது அம்பலப் படுவது மட்டுமின்றி செந்தத் தளத்தில் இனவாத உடைவுகளை சந்தித்து எம்மண்னை ஆக்கிரமித்திருக்க முடியாது.

 

ஜே.ஆர், பிரேமதாசா, சந்திரிக்கா அரசு என எல்லாமே ஒரே முறையிலான சாக்கடையாகும். இதில் உள்ள நண்பர்களை கொல்வதன் மூலம் எந்த மாற்றத்தையும் தமிழ் மக்கள் பெற முடியாது. பிரமதாசா, காமினி, ரஞ்சன்விஜயவர்தனா, ராஜீவ் ......... போன்ற அரசின் முன்னணிப் பிரதிநிதிகளைக் கொன்று விடுவதால் தமிழ் பேசும் மக்கள் எதைச் சந்தித்தனர். அரசுக்கு பதில் முரண்பாடு குறைந்து மிக மேசமான ஒரு புதிய தலைமையே உருவாகின்றது அதேவழிகளில். இவர்களைக் கொல்வதால் எதுவும் மாறிவிடமாட்டாது. முன்பைவிட தீவிர அடக்கு முறையாளர்கள் உருவாகின்றனர். எவ்வளவுதான் தமிழ் மக்களின் மிக மோசமான இவ்வெதிரிகளை னொன்று ஒழிப்பதை விட அரசில ரீதியில் அம்பலப்படுத்துவதன் மூலம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு கொன்று ஒழிக்கும் அரசியல் சர்வதேச ரீதியாக எமது போராட்டம் ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக இனங்காட்டும் அனவுக்கு சீரழிந்துள்ளது. பிரிவினைவாதப் போராட்டம் என்றபதம் இன்று மங்கி மறைந்து விட்டது. அது பெயரளவில் கூட உச்சரிக்க தயார் அற்ற நிலைக்கு உலகம் இசைந்து போகின்றது.

 

இந்நிலை புலிகளின் மோசமான இராணுவவாத மக்கள் விரோத அரசியலுக்கு அடிக்கல் நாட்டி உள்ளது. தேவையற்ற படுகொலைகள், இராணுவம் சாராத கொழும்புக் குண்டு வெடிப்பு, சிங்கள முஸ்லீம் கிராமப் படுகொலைகள், ........ .............. என்பன புலிகளைத் தனிமைப் படுத்தவும், எமது விடுதலைப் போர் மீது எதிர் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இது பயங்கரவாத நடவடிக்கையாக சீரழிந்து போனது.

 

இன்று யாழ் குடாநாட்டைஇனவெறி சிங்கள இராணுவம் கைப்பற்றி இனவெறிக் கொடிபறக்க விட்ட நிலையில் எம் பொராட்டம் மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆக்கிரமித்த மண்னில் இருந்து முற்றாக இராணுவத்தை துரத்தி அடிக்க நாம் எம்மை அரசியல் ரீதியில் மறு வார்ப்பு செய்ய வேண்டும். இந்த வகையில் நாம் மீளவும் ஆரம்ப நிலைக்கு எம்மை நகர்த்தி தமிழ் முக்கள் மீதான இனவாதத்திற்கு எதிரான அடிப்படை ஜனநாயகக் கொரிக்கைகளை முன்நிறுத்தவும் அதன் பொக்கில் நாம் ஆன்று முன்வைத்த திம்புக் கோரிக்கைகளை பிரதானப்படுத்துவது அவசியமாகும்.

 

இன்று எமது கோரிக்கைகள் செயல்கள் இனவாத சந்திரிக்கா அரசை அதன் இனவாதத் தளத்தில் அம்பலப்படுத்தும் வகையில் அதன் மீதான கோரிக்கைகளை முன்நிறுத்துவது அவசியமாகும். புலிகள் அதை மீளவும் செய்து பார்க்க பற்று உள்ள நிலையில் இரானுவ வாதக் கோரிக்கையே மீள மீள முன்தள்ளுவது புலிகளின் அரசியல் சீரழிவையே மேலும் இட்டுச் செல்லும்.

 

இனவெறி அரசு எதிர்காலத்தில் புலிகளின் மக்கள் விரோத நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி புலிகளின் ஒற்றைப் பரிமான தலைமை அழித்து ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடும் என நாம் எதிர்பார்க்கலாம். ஏனெனில் புலிகளின் தலைமை ஜனநாயகம் அற்றதும், உறுப்பினர்கள் தலைவரின் பெயரால் கட்டப்பட்டவதும், புலிகளின் தலைமையை படுகொலை செய்வதன் மூலம் புலி இயக்கத்தை சிதறவைத்து குறைந்த பட்சம் இன்று உள்ள தேசிய விடுதலைப் போராட்டத்தின் குரல் வளையை நசிக்கிவிட முடியும் என அரசு கணக்குப் போடுகிறது.

 

இன்று எம்முன் உள்ள பிரச்சனை புலிகள் தமது தலைமையை அரசியல் ரீதியில் மறுவார்ப்பு செய்வதும் மத்தியப் படுத்தப்படாத தலைமையை உருவாக்குவதும், மாற்றுக் கருத்துக்கு தளத்தில் கருத்துச் சுதந்திரத்தை வளங்குவதும் ஆகம். யாழ் குடாநாட்டை விம்மு வெளியேறிய முஸ்லீம் மக்களை மிளக் குடியேறக் கூறுவதும் முன்னைய அனைத்து தவறுகளையும் தவறு என ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

 

அரசை நோக்கி இராணுவக் கோரிக்கை முன்னிறுத்துவதை விட சாதாரன இனவாதத்திற்கு எதிராக ஜனநாயகக் கோரிக்கைகளை உலகெங்கும் முன்னிறுத்தி அரசை அம்பலப்படுத்த வேண்டும். இது மட்டும் எமது மண்ணை பாதுகாக்கவும் எமது சுயநிர்ணய உரிமையை வென்றேடுக்க எம்முன் உள்ள ஒரே ஒரு அரசியல் பாதையாகும்.

 

 

 

Last Updated on Friday, 18 April 2008 18:03