Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

தீட்டு!

  • PDF

சிலர் கோயிலுக்கு வந்தால் கோயிலும், சாமியும் தீட்டுப்பட்டுப் போவானேன்? சிலர் சாமியைத் தொட்டால் சாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும், உருவமும் உள்ள சாமிக்கு ஊருக்கு ஒருவிதமாய்ச் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்? காசி, பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்குக் கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் தங்களே நேரில் சாமியைத் தொட்டு தலையில் தண்ணீர் விட்டு மலர் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது தமிழ்நாட்டில் மட்டும் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறதா ஏன்? இப்படி சாமிகளின் சக்தியும், உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒருவிதமாய் இருப்பானேன்?

எவன் ஒருவன் கடன் வாங்காமல் வரவுக்கேற்ற முறையில் செலவு செய்து வருகிறானே அவன் தான் பிரபு ஆவான். நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைக்குச் செலவை வரவுக்கு உள்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பந்தான் கண்ணியமான குடும்பம். சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடந்தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல் தான் வகுப்புவாரி விகிதப்பேச்சும் "பேசாதே! அது வகுப்புத் துவேசம்" என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?

(தந்தை பெரியார்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_6671.html