Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

'பறையர்'!

  • PDF


'பறையர்' என்கிற ஒரு சாதிப்பெயர் நம் நாட்டில் இருப்பதால் தான் 'சூத்திரர்' என்கிற ஒரு சாதிப் பெயர் நம் நாட்டில் இருக்கிறது. 'பறையர்' என்கிற சாதிப் பெயரைவிட 'சூத்திரர்' என்கிற சாதிப்பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரிகளில் பதிவிரதைகளுக்கும் - சரியான ஒரு தாய்க்கும், தகப்பனுக்கும்-பிறந்தவர்களும் இருக்கலாம். 'சூத்திரர்களில் அப்படி இருக்க இடமில்லை. ஏனென்றால், சூத்திரச்சி என்றால் தாசி, வேசி மகள் என்பதுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்மதம். ஆகையால், என் போன்ற 'சூத்திரன்' என்று சொல்லப்படுபவன், 'பறையர்கள்' என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாக சொல்லுவதெல்லாம், 'சூத்திரர்கள்' என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத்தானேயல்லாமல், வேறல்ல. ஆகையால் எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காக பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. உங்களைத் தாழ்மையாகக் கருதும் பெண்களும், ஆண்களும், தாங்கள் பிறரால் உங்களை விடக் கேவலமாய்-தாழ்மையாய்க் கருதப்படுவதை அறிவதில்லை.

 

(சிராவயலில் 07.04.1926 அன்று பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவில் சில வரிகள்)

 http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_04.html