Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் இந்து மதம்!

இந்து மதம்!

  • PDF

 

 இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம். உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும், ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும், ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும் சண்டையிடிகிறோமேயல்லாமல் இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.

 

இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் " அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா? என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது; நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்; யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்" என்கிறார்கள்.

 

அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா? இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே! அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது? இந்து என்ற வார்த்தை 'பெர்ஷியன்' பாஷையில்தான் வழங்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், 'திருடன்' என்பது பொருள். இந்து என்ற வார்த்தை, சிந்து நதிக்கரை வழியே ஆரியர்கள் வந்ததால், 'சிந்து' 'இந்து' வாகி பின் இந்தியனாகிவிட்டதாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உள்ளது.

 

அதே மாதிரி, இந்து சமயம் பார்ப்பனர் சமயம் என்றும் ஆங்கில ஏடுகள் ஆதாரத்தோடு கூறுகிறது. அவ்வாறே ஆங்கில ஏடுகளை நம்பாமல் ஆரியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம், புராணம் என்பன போன்ற ஆதாரங்களில் ஒரு இடத்தில் கூட இந்து என்ற பெயர் இடம் பெறவில்லை.

 

(தந்தை பெரியார் - 1923)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_13.html