Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் இனவாதகோரமும், சிறுபாண்மைமக்களின் பாதையும்

இனவாதகோரமும், சிறுபாண்மைமக்களின் பாதையும்

  • PDF

தேசவிடுதலைப் போராட்டம் அதன் போக்குகளில் மக்களின் துன்பங்கள் முடிவற்றுத் தொடர்கின்றது. பாசிச சிங்கள இனவெறி அரசு தமிழ் தேசிய இனத்தின் உயிர் மூச்சையே நசுக்கி அழித்துவிட கங்கனம் கட்டி பாரிய யுத்த முன்னெடுப்புக்களை முன்னெடுத்து வருகின்றது.

 

இந்த நிலையில் புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கையின் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் அரசுக்கு எதிராக போராடிய பலரைக் கொண்றும், சிறையில் அடைத்தும் தேசிய இன அடையாளத்தை இன்னுமொரு புறத்தில் அழிக்கின்றனர். ஒரு போராட்டம் என்பது அதன் அனைத்து சக்திகளையும் அரவனைத்து செல்வதில் தான் வெற்றி அழிக்கின்றது. முஸ்லீம் சிங்கள அப்பாவி மக்களஇ மீதான தாக்குதல்கள் எல்லாம் இன்னும் தேசவிடுதலைப் போராட்டத்திற்கு பாதகமான அம்சங்களாகும்.

இந்தவகையில் இன்று யுத்தம் வெல்ல முடியாத ஒரு தற்காப்பு யுத்த எல்லைக்குள் மிளமிளத் தொடர்வதும், அதன் விளைவுகள் தமிழ் மக்களையும், இலங்கையின் மொத்த அப்பாவி மக்களையும் எப்படி பாதிக்கின்றது என இக்கட்டுரை மூலம் ஆராய முயல்கின்றேன்.

 

1993 களில் ஆசியாவில் பாகிஸ்தானுக்கு அடுத்ததாக இலங்கையே தனது வருமானத்தில் இராணுவத்திற்காக அதிகம் செலவழித்த நாடாக மாறியிருந்தது. இதன் மூலம் 1993 முந்தைய 10 வருடத்தில் 22000 கோடி பணத்தை யுத்த முனையில் எரித்து நாசமாக்கியுள்ளது. எந்த மீள் உற்பத்தியும் அற்ற 22000 கோடிபணம் என்பது இலங்கையின் படுமோசமான அழிவுக்கு இட்டுச் செல்கின்றது. 1993 இல் நாள் ஒன்றுக்கு 40 பேர் கொல்லப்பட்ட நிலையில், வடக்குக் கிழக்கில் மொத்தமாக 60,000 பேர் கொல்லப்பட்டனர். இதைவிட 5000 பேரை காணவில்லை. இதே நேரம் 1993 இல் இராணுவச் செலவு 3,600 கோடியாக உயர்ந்தது.

 

இந்த யுத்தக் கெடுபிடிகள் என்பது தனது அரசியல் லாப நோக்கில், மேல்மட்ட செல்வந்தர்களின் கணவுகளை ஈடுசெய்ய தொடரப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்கள் தங்கள் வறுமையின் கோரத்தை மூடி மறைக்கவும், அவர்கள் கிளர்ந்தெமுந்துவிடாது தடுக்கவும் இன்று இவ்யுத்தம் தொடரப்படுகின்றது. இதன் விளைவுகள் மூலம் 1993 இல் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அகதிகள் முகாம் பெருக்கெடுத்தது. நாடு முழுவதும் 531 அகதிகள் முகாம்களில், மற்றும் தனிப்பட்ட அகதிகளாகவும் மொத்தமாக 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக புலம் பெயர்ந்தனர்.

 

இது மட்டக்களப்பில் 16,907 குடும்பத்தைச் சேர்ந்த 76,530 பேராக இருந்தது. யாழ்பாணத்தில் 80,271 குடும்பத்தைச் சேர்ந்த 2,65,091 பேர் குடிபெயர்ந்தனர். இது கிளிநேச்சியில் 40,889 பேராகவும், மன்னாரில் 54,760 பேராகவும், வவுனியாவில் 11,407 பேராகவும் திருகோணாமலையில் 33,727 பேராகவும், முல்லைத்தீவில் 30,139 பேராகவும் அம்பாறையில் 23,139 பேராகவும் காணப்பட்டது.

 

இதனைவிட நாட்டில் பலபாகத்திலும் அகதிகள் புலம் பெயர்ந்து உள்ளனர். இதைவிட நாட்டுக்கு வெளியில் சிலலட்சம் பேர் பெயர்ந்துள்ளனர். இது மேற்கு நாடுகளில் 2 லட்சத்துக்கு மேலாகவும், இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு மேலாகவும் உள்ளனர். இதைவிட 1994 இல் அமினஸ்ரியின் அறிக்கைப் படி வடக்குக் கிழக்கில் மட்டும் 10 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்.

 

இந்தநிலையில் யுத்தத்தைத் தொடர எல்லாவித முனைவுகளையும் பயன்படுத்தி நாட்டை அழித்து வருகின்றனர். இராணுவபலம் மிகவேகமாக அதிகரித்துச் சென்றவண்ணம் உள்ளது. 1980 களில் இராணுவம் 15,000 பேராக மட்டுமே இருந்தது. இது 1985 இல் 21,500 பேராக அதிகரித்த அடீத நேரம் தற்காலிகமான 18,200 பேரையும், 14,500 பொலீசையும் கொண்டிருந்தது. இதைவிட பாராளுமண்ற உறுப்பினர் பாதுகாப்புப் படை 5,000 ஆக இருந்தது. இது 1993 இன் நடுப்பகுதியில் இராணுவம் 70,000 ஆகவும், கடற்படை 10,000 மாகவும், விமானப்படை 8,000 மாகவும், பொலீஸ் 30,000 மாகவும் கெரில்லா எதிர்ப்புப் படையணி 12,000 மாகவும், தேசிய பாதுகாப்பப் படையில் 15,000 மாகவும், இதைவிட மற்றைய பிரிவுகள் 13,000 பேராகவும் காணப்பட்டது. இது மொத்தமாக 1லட்சத்து 58 ஆயிரம் படையாட்களாக 1993 இல் அதிகரித்தது. இது இன்று மேலும் பலமடங்கு பெருகிஇருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

இராணுவச்செலவைப் பொறுத்த வரையில் 1978 இல் 56 கோடியாக இருந்தது. 1986 இல் இது 886 கோடியாக அதிகரித்தது. இது 1992 இல் 1600 கோடியாகவும், 1993 இல் 3600 கோடியாகவும் அதிகரித்தது. 1993 இல் மொத்த தேசிய வருமானத்தில் 40 வீதம் யுத்தத்திற்காக செலவுசெய்யப்பட்டது. 1992 இல் 1 வீதமாக இருந்த பாதுகாப்பு வரி 1993 இல் 3 வீதமாக அதிகரித்தது. பின் பாதுகாப்பு வரி 1993 இறுதியில் 3.5 வீதமாக அதிகரிக்கப்பட்டது.

 

யுத்தம் என்ற போர்வையின் கீழ் கொழுத்த பணக்காரன் மேலும் பணக்காரனாக மாற கீழ்பட்ட மக்கள் மேலும் ஏழைகளாக முறிவருகின்றனர். அக்களின் அடிப்படைத் தேவைக்கு ஒதுக்கிய பிச்சைக் காசுகள் கூட வேட்டுக்கு உள்ளாகி வருகின்றது.

 

1990 இல் மொத்த மக்கள் சேவைக்கு ஒதுக்கிய பணம் மொத்தமாக 13.5 வீதமாக இருந்தது. 1991 இல் 7.4 விதமாக குறைக்கப்பட்டது. அதன் உட்பிரிவுகளைப் பார்போமாயின்


பொதுச் சேவை மொத்தமாக      1990             1991
தேசிய உற்பத்தியில்                 11.3 வீதம்   9.1 வீதம்
இதில் கல்வி                             3.9 வீதம்    3.6 வீதம்
மருத்துவம்                               4.8 வீதம்     3.4 வீதம்
வீடு                                           1.9 வீதம்     1.6 வீதம்


மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு ஒருபுறம் வெட்டவும், மறுபுறம் யுத்தம் அதைச்சுடுகாடாக்கின்றது. அற்பவருமானத்தையும் காலம் காலமாக சிறு சேமிப்புக்களையும் கூட சாம்லாக மாற்றிவருகின்றது இந்த யுத்தம். இதைஒட்டிக் கிடைத்த தகவல்களை தொகுத்துப் பார்கும் போது அவை அதிர்ச்சிய+ட்டக் கூடியனவாக உள்ளது.

 

1993,94 களில் 10-14 வயதுடைய ஒவ்வேரு ஐந்து பேருக்க ஒருவர்வீதம் பாடசாலை செல்லவில்லை. அதாவது 20 வீதம் பேர் பாடசாலை செல்லவில்லை. 19 லட்சம் குழந்தைகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இதைவிட 1 லட்சம் குழந்தைகள் அகதி முகாம்களிலும், 20,000 குழந்தைகள் வேலையிலும் 10 ஆயிரம் குழந்தைகள் வீதிகளிலும் வசிக்கத் தொடங்கியுள்ளனர். இதைவிட 10,000 சிறுவர்கள் பாலியல் தொழிலில் வெள்ளைக்காறனுக்கு கூட்டிக் கொடுத்து எயிட்காவிகளை உருவாக்கி வருகின்றனர்.

 

1993 இல் அரசு புள்ளி விபரப்படியே 90,000 குடும்பங்கள் மீன்பிடி தொழிலை இழந்து அன்றாட வருமானத்தையே இழந்துள்ளனர். 1993 மேயில் வாழ்க்கைச் செலவு 10 வீதமாக இருந்தது. ய+னில் அது 12.3 வீதமாக அதிகரித்தது. இந்தவகையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்கிறது. மரணவீதம் வடக்குக் கிழக்கில் என்றும் இல்லாதவாறு அதிகரிக்கிறது ( இது யுத்தத்தில் இறப்பவர்களை விட்டேயாகும்) இந்தவகையில் யுத்த கோரமும் அதன் இனவாத முகமும் மக்களை படுமோசமான வாழ்நிலைக்கு இட்டுச் செல்கிறது.

 

பாடசாலைக் கல்வியில் திட்டமிட்டே இனவாதம் புகுத்தப்பட்டிருப்பதை கீழ்உள்ள புள்ளி விபரம் விளக்குகிறது.


பாடசாலை     ஆசிரியர்  மாணவர்கள்
சிங்களவர்கள்     1            18 பேர்
தழிழர்கள்           1            43 பேர்
முஸ்லீம்கள்      1            21 பேர்


அதாவது ஒரு ஆசிரியர் தமிழ் மொழிமாணவர்கள் 43 பேரை கற்பிக்கும் அதே நேரம் ஒரு சிங்கள ஆசிரியர் தமிழ் மொழி மாணவர்களின் மொத்தத் தொகையில் அரைவாசி சிங்கள மாணவர்களை கற்பிக்கக்கூடிய வகையில் இலகுபடுத்தப்பட்டு தமிழ் மொழி மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

 

நாட்டில் உள்ள மொத்தப் பாடசாலை 10,000 மாகும் இதில் 2000 மிகப்பின்தங்கிய பாடசாலைகள். இதில் மலையகத்தில் 800 பாடசாலைகள் உள்ளன. இதன் மூலம் மலையகமக்களின் கல்லியை இனவாதநோக்கில் திட்டமிட்டே முடக்கி வருகின்றனர்.


இன்று நாம் நாட்டைப் பார்க்கும் போது உயர்கல்வியில் பல்கழைக்கழகம் செல்லும் தகுதியை 45 ஆயிரம் பேர் அடைகின்றனர். ஆனால் அதில் 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே பல்கழைக்கழக அனுமி வழங்கப்படுகின்றது. அதில் பலர்கூட வேலையின்றி உள்ளனர் என்பது கவனிக்கப்படவேண்டியது. இங்கு இந்த 9 ஆயிரம் பெரை தெரிவு செய்ய தரப்படுத்தல் முறை புகுத்தப்படுவது இனவாதத்தின் ஒரு ஊற்று மூலமாகவே தொடர்கின்றது. இலங்கைக்கு ஏற்ற ஒரு கல்வி முறை உருவாக்கத் தவறி பல்கழைக்கழக த்திற்கு 9 ஆயிரம் மாணவர்களை தெரிவு செய்ய 2லட்சம் மாணவர்கள் தயார் செய்யப்பட்டபின் அவர்கள் துக்கி எறியப்படுகின்றனர். எந்த நோக்கமும் இன்றி படித்த கல்வி எந்ப்பிரயோசனமும் இன்றி, இலங்பை; பொருளாதாரக் கட்டமைப்பை வளர்க்கும் வகையில் இம்மாணவர்கள் கற்பிக்கப்படாமல் சீரழிக்கப்படுகின்றனர்.

 

99.9 வீதமான சிங்கள மக்களுக்கு தமிழ் தெரியாத இன்றைய நிலையில் 12.6 வீத இலங்கைத்தமிழ் மக்கள் 5வீத சிங்கள இனவெறியர்களின் இனவெறித் துண்டுதலால் ஒடுக்கப்படுகின்றனர். இது யுத்தத்தின் ஓரு கோர வடிவமாகும்.

 

1990 இல் இலங்கை அரசுத்துறை வேலையான 7 லட்சத்தில், இலங்கை தமிழ் பேசும் மக்கள் பெற்றது என்னவோ 50,400 வேலை மட்டுமே. அதாவது 12.6 வீதமான இலங்கைத் தமிழர், அரசு வேலைகளில் 7.2 வீதம் மட்டுமே பெற்றனர். இது 1980 களில் 11.25 வீதமாக இருந்து 1985 இல் 9.67 வீதமாகக் குறைந்து 1995 இல் 7.2 வீதமாக குறைந்து செல்கின்றது. இது தனிநபர் துறையில் மேலும் அதிகமாகும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்நிலை எனின் முஸ்லீம், மலையகமக்களின் நிலையை கற்பனை செய்யத் தேவையில்லை. இந்தவகையில் இனவாதம் மேலும் தீவிரப்படுத்தப்பட்ட யுத்தத்தை நோக்கி வேகமாக நகர்ந்து செல்வதை பின்வரும் அட்டவணையில் கானமுடியும்.

வேலைவாய்புகள் 1980 - 1985 - 1990
மொத்த வேலை வாய்பு   சிங்களவர் தமிழர் (இலங் - இந்திய)  முஸ்லீம்     ஏனையோர்

அரச துறை
1980    3,68,849          84,34   11,61               3,33     0,72
1985    4,06,359          85,64   9,90     0,25     3,44     0,90
1990    4,21,009          89,4     6,35     0,75     3,3       0,35

கூட்டறவுத் துறை
1980    2,28,531          85,75   10,67               2,56     1,03
1985    3,22,617          85,54   9,38     1,25     2,35     1,14
1990    2,79,584          88,1     8,2       0,5       2,2       1,0

மொத்தம்
1980    59730  84,88   11,25               3,03     0,84
1985    7,28,976          85,80   9,67     0,64     2,95     1,14
1990    7,00,593          88,8     7,2       0,3       2,9       0,8


இப்புள்ளிவிபரத்தை இலங்கையின் இனரீதியான விதத்துடன் ஒப்பிட்டு பார்ப்பதே இனவாதத்தின் போக்கை இனங்காண முடியும். சிங்களவர் 73,9 வீதம், இலங்கைத் தமிழர்கள் 12,7 வீதம், இந்தியத் தமிழர்கள் 5,5 வீதம், முஸ்லீம்கள் 7,0 வீதம், ஏனையோர் 0,9 வீதமாகும். வேலைவாய்புக்கள் யுத்தத்தின் மூலம் குறைந்து செல்ல இனவாதத்தின் மூலம் சிங்களவர் வேலைவாய்பு அதிகரித்துச் செல்கிறது. இதை அட்டவணையில் காணமுடியும். எல்லா சிறுபாண்மை தேசிய இனத்தின் மீதான ஒடுக்கு முறையை வேலைவாய்பிலும் இனங்காண முடியும்.

 

வரண்ட பிரதேசமான யாழ்குடாநாடு இனவெறியர்காளால் புறக்கனிக்கப்பட்டு, யுத்தக் கொடூரங்களால் மேலும் வரட்சியை நோக்கி நகர்கின்றது. 411 சதுரமைல் பரப்பைக் கொண்ட யாழ்குடாநாடு 34,0 சதுரமைல் ஆனையிறவு கடலேரியையும், 125 சதுரமைல் யாழ் கடலேரியையும் கொண்டுள்ளது.

 

யாழ் நன்நீர் ஊற்று என்பது மழையையும், அதன் தேக்கத்தில் உள்ள குளங்களையும் சார்ந்ததேயாகும். 25 வருடங்களுக்கு முன் 1060 சிறு குளங்களை யாழ் குடாநாடு கொண்டிருந்தது. இங்கு 6,600 கிணறுகளையும், 1800 தோட்டக் கிணறுகளையும் கொண்டிருந்ததுடன் தோட்டச் செய்கைக்கு 6000கனலீற்றர் நீரே ஆண்டுக்கு கிணற்றில் இருந்து இறைக்கப்பட்டது.

 

இன்று யுத்தம், மற்றும் குளங்களை புணரமைப்பதில் புறக்கணிப்பம் என்ற இனவாதம் யாழ் குடாநாட்டை பாலைவனமாக மாற்றிவருகின்றது. இது எதிர்காலத்தில் நன்நீர் பெறுவதே கேள்விக்கு உள்ளாகிவிடும்.

 

இப்படிப் பல புள்ளிவிபரங்களை நாம் தொடுக்க முடியும் இனவாதம் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை குழிதோண்டிப் புதைக்க எல்லாவகையிலும் எல்லாத் துறையிலும் காணப்:படுவதை இக்கட்டுரை மூலம் காணமுடியும். தமிழ் பேசும் மக்கள் இதை எதிர்த்து முறியடிக்க சொந்த மக்களுக்கு போராட ஜனநாயகமும், சிங்கள முஸ்லீம் சாதாரண மக்களை அரவணைத்தும் செல்லும் வழியில் மட்டுமே இனவாதத்தை தோற்கடித்து தமிழ் தேசிய சுயநிர்ணயத்தை பெற முடிவதுடன் சொந்த சகோதர சிங்கள முஸ்லீம் மலையக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்ட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இக்கட்டுரையில் தற்போது சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் ஒருசில புள்ளிவிபரங்கள் காட்டப்பட்டுள்ளன. இப்புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தற்போது ஆட்சி செய்யும் அரசு இனவாதத்தை மக்கள் மத்தியஙில் வீசுகின்றது என கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மையானது. இருந்தபோதும் தற்போது இலங்கையில் நடப்பது ஒரு இனவாதம்கலந்த போர் என்பது தான் உண்மை. அதாவது சிங்கள அரசு எந்தனவு இனவாதத்தை மக்கள் மத்தியில் விதைக்கின்றதோ அதே அளவு தமிழ், முங்லீம் மக்கள் மத்தியிலும் இனவாதம் இவ் மக்கட்பிரிவினரை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களால் விதைக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமை பெருந்தேசியஇன அரசால் மறுக்கப்பட்டு வருகின்றது. இருந்த போதும் சுயநிர்னய உரிமைக்கான போராக இதை நாம் முற்று முழுதாக அங்கீகரிக்கவில்லை. காரணம் இது நாடுபிரிக்கும் யுத்தமே. இங்கு நாடு பிரிக்கப்பட்டால் உழைக்கும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை முற்று முழுதாகக் கிடைத்துவிடுமா? என்பது கேள்விக்குறியே. அடக்கியாளும் வர்கம் இருக்கும் வரை அடக்கப்பட்டு இருப்பவர்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாத ஒருவிடையம். தரைப்படுத்தல், வேலைவாய்பு வசதி என்பன சிங்களவர்களுக்கே அதிகமாக லாபம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.  அதேவேளை இப்பிரச்சனையில் பாதிக்கப்படுவது. தமிழ்மேல்தட்டுவர்கமும் தமிழ் குட்டி முதலாளித்துவ வாதிகளுமே. மேலும் நடைபெறும் யுத்த ஆரம்பத்தில் தமிழர் தலைவர்களான தரகுமுதலாளிகள் கும்பல் இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒடுக்கு முறைக் காரணிகளைக் கூறியே யுத்தத்திற்கு விதையிட்டனர். இன்று சிங்கள தரகு முதலாளித்துவ அரசும், தமிழ் தரகுகளான புலிகளும் தமது நலன்களைப் பாதுகாக்க மேற்படி காரணிகளையே பயன்படுத்துகின்றனர். எம்மைப் பொறுத்தவரையில் அங்கு ஆட்சிசெய்யும் முறை மாற்றப்படவேண்டும் அதற்காகவே மக்கள் அணிதிரள வேண்டும். அப்போதுதான் இனவாதம் என்ற செல்லை இலங்கை மண்ணில் இருந்து துக்கி எறியமுடியும். இல்லாவிடத்து எந்த ஆட்சிமுறை வந்தாலென்ன, புதிய தேசம் உருவாகினால் என்ன இனவாதம் என்றும் அழியாது, யுத்தத்தையே தோற்றிவித்தபடி காணப்படும்.

Last Updated on Saturday, 17 June 2017 13:34