Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • PDF
சனியின் துணைக்கோள்களில் ஒன்றான டைட்டானிலேயே எண்ணெய்வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத் துணைக் கிரகம் பூமியிலிருந்து நூறுகோடியே முப்பது இலட்சம் கிலோமீற்றர் தொலைவிலுள்ளதுடன் இக்கோளின் வெப்பநிலை மறை 179 பாகை செல்சியஸாகவும் உள்ளது.

சனிக் கிரகத்தையும் அதன் துணைக் கோள்கள் பற்றியுமான ஆய்வினை மேற்கொள்ள காசினி என்ற விண்கலத்தை விஞ்ஞானிகள் அனுப்பியுள்ளனர்.

இக்காசினி விண்கலத்தில் உள்ள ராடர் டைட்டான் துணைக்கோளின் 20 சதவீதமான மேற்பரப்பை ஆய்வுசெய்து படம் பிடித்துள்ளது.

அதன் மூலம் `டைட்டான்' துணைக்கோளின் மேற்பரப்பில் நூற்றுக்கணக்கான ஏரிகள், கடல்கள் இருப்பதும் அவற்றில் எண்ணெய் வளங்கள் நிறைந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதாவது, அந்த ஏரிகளிலும் கடல்களிலும் திரவவடிவிலான ஹைட்ரோ காபன் மீத்தேன் எத்தேன் வடிவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இந்த எண்ணெய் வனம் பூமியில் உள்ள வளத்தைப்போல் பலநூறு மடங்குகள் அதிகமென்றும் தெரியவந்துள்ளது.

காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பிய சில அரிய தகவல்களைக் கொண்டே மேற்கண்ட விபரங்கள் தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1203427986&archive=&start_from=&ucat=2&