Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் சுற்றுத் தையல்

சுற்றுத் தையல்

  • PDF

எம்ப்ட்ராயட்ரிங் தையல்களில் இதுதான் மிகவும் எடுப்பானத் தையல் முறையாகும். துணியோடு துணியாக இல்லாமல் நன்கு எடுப்பாக இருக்கும் வகையில் இந்த சுற்றுத் தையல் அமையும்.

மிகவும் எளிதான மற்றும் அழகான சுற்றுத் தையல் போடுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

அதாவது நூல் கோக்கப்பட்ட ஊசியை துணியின் கீழ் இருந்து மேலாக குத்தி எடுத்து அந்த ஊசியை நூலால் மறைப்பது போன்று சுற்றிவிடுங்கள்.

10 சுற்றுகள் சுற்றியதும் ஊசியை ஓரிடத்தில் குற்றி எடுங்கள். அப்போது நீங்கள் சுற்றிய நூல் அழகாக சுருண்டு இருப்பதை காணலாம். பின்னர் அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு ஊசியைக் குற்றி எடுத்து, நூலின் அடுத்த முனையை ஊசியின் மீது சுற்றி வெளியே எடுத்துவிடுங்கள்.

புகை‌ப்பட‌த்தை‌ப் பாரு‌ங்க‌ள். அதாவது 1 எ‌ன்ற பு‌ள்‌ளி‌யி‌ல் து‌ணி‌யி‌ன் அடி‌‌யி‌ல் ஊ‌சி‌யை‌க் கு‌த்‌தி வெ‌ளியே எடு‌ங்க‌ள், 2 எ‌ன்ற ‌பு‌ள்‌ளி‌யி‌ல் ஊ‌சியை‌க் கு‌த்‌தி 3 எ‌ன்ற பு‌ள்‌ளி‌யி‌ல் ஊ‌சியே வெ‌ளியே பா‌தி இழு‌த்த ‌நிலை‌யி‌ல் அ‌ப்படியே வையு‌ங்க‌ள்.

அடு‌த்த பட‌த்‌தி‌ல் கா‌ண்‌பி‌க்க‌ப்ப‌ட்டது போல து‌ணி‌யி‌ன் ‌‌கீ‌ழிரு‌ந்து வ‌ந்த நூ‌லினை ஊ‌சி‌யி‌ன் ‌மீது சு‌ற்று‌ங்க‌ள். சு‌ற்‌றி முடி‌ந்தது‌ம் ஊ‌சியை வெ‌ளியே இழு‌த்து து‌ணி‌யி‌ல் கு‌த்‌தி ‌‌கீழாக இழு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அ‌வ்வளவுதா‌ன் சு‌ற்று‌த் தையலை‌ப் போடு‌ம் முறைய‌ை‌க் க‌ற்று‌க் கொ‌ண்டீ‌ர்க‌ள்.

இப்படியே அடுத்தடுத்து சுற்றுத் தையல் முறையைப் பயன்படுத்தி ஒரு சில பூ வடிவங்களை அமைத்துப் பாருங்கள்.

இந்த சுற்றுத் தையல் போடப் பயன்படுத்தும் நூல் அதிகம் திரியாமல் அதாவது புதிய நூலாக இருக்க வேண்டும். நூல் அதிகமாக திரிந்து (சிறு இழைகள் வெளியில் தெரிவது) இருந்தால் ஊசியில் நூலை சுற்றி எடுக்கும்போது அது சிக்கலை ஏற்படுத்திவிடும்.

எனவே புதிய, தரமான நூலை மட்டுமே இந்த சுற்றுத் தையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

சுற்றுத் தையல் முறையில் எம்ப்ட்ராயட்ரிங் செய்யப்பட்ட துணிகளை பிரஷ் செய்வதோ, அடித்து துவைப்பதோ கூடாது.

அதிகம் அழுக்காகாத துணிகளுக்கு மட்டும் இந்த சுற்றுத் தையல் முறையைப் பயன்படுத்தி அழகுப்படுத்தலாம்.

தலையணை, கைகுட்டை, டவல் போன்றவைகளுக்கு இந்த முறை சரிவராது.

அழகான ஆடையின் கைகள், முந்தானை, பார்டர் போன்றவைகளுக்கு ஏற்ற முறையாகும். ஸ்வெட்டர் பின்னத் தெரிந்தவர்கள் இந்த முறையை உல்லன் நூலிலும் போடலாம்.

பூக்களில் ரோஜா, அரும்புகள், இலைகள் போன்றவற்றை உருவாக்க இந்த சுற்றுத் தையல் முறை சிறந்த தேர்வாகும்.

இ‌ந்த‌ததைய‌லமுறையஆ‌ங்‌கில‌த்‌தி‌லபு‌ல்‌லிய‌ன் ‌ஸ்டி‌‌ட்‌சஎ‌ன்றஅழை‌ப்பா‌ர்க‌ள்.

http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0807/15/1080715053_1.htm