Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் மழைக்கால வைரஸ்

மழைக்கால வைரஸ்

  • PDF

கோடை காலத்தை காட்டிலும் குளிர், மழை காலத்தில் உடலை பேணி காப்பதில் அதிக அக்கறை கொள்வது அவசியம். மழை காலத்தில் எளிதில் "வைரஸ்' கிருமிகள் உணவு, குடிநீர் மூலம் உடலுக்குள் புகுந்து தொல்லைக்கு உள்ளாக்குகிறது. இதில் இருந்து நம்மையும், குழந்தைகளையும் காத்து கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம்.

சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும்.

சாலையோர கடைகளில் "ஈ' மொய்க்கும் தின்பண்டங்களை குழந்தைகள் வாங்கி சாப்பிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு தேவையான "ஸ்நாக்ஸ்' வகைகளை வீட்டில் செய்தும், தரமான கடைகளில் வாங்கி கொடுத்து அனுப் புவதும் நலம்.

சுத்தமில்லாத குடிநீரில் தயாரிக்கப்படும் ஐஸ் வகைகளை குழந்தைகள் சாப்பிடாமல் பெற்றோர் பார்த்து கொள்ளவது அவசியம்.

கொட்டும் மழையில் குழந்தைகள் நனைவதன் மூலம் ஜுரம் எளிதில் தொற்றி கொள்ளும். எனவே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது குடை அல்லது "ரெயின் கோட்' கொடுத்து அனுப்பலாம்.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரில் குழந்தைகள் குதித்து விளையாடி வருவர். அதேபோல, பள்ளி மைதானத்தில் தேங்கியுள்ள மழை தண்ணீரிலும் குழந்தைகள் விளையாடுவர். அவ்வாறு மழை நீரில் குழந்தைகள் விளையாடுவதால் நோய் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து பெற்றோர் அறிவுரை அளிக்க வேண்டும்.

மழைக் காலத்தில்சளி, காய்ச்சல், தொண்டை சம்பந்தமான பிரச்னை, சைனஸ் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.குழந்தைகளை இந்த நோய்கள் எளிதில் தாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளுக்கு வைட்டமின் உணவுகளை வழங்கி, மழைக்கால நோய்களில் இருந்து பெற்றோர் பாதுகாத்து கொள்ளலாம்.

. வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்காமலும், பிளாஸ்டிக் டப்பா, உரல், கொட்டாங்குச்சி போன்றவற்றில் மழை நீர் தேங்காமலும் பார்த்து கொள்ள வேண்டும்.

நீரில் சிக்குன் குனியா நோய் கிருமியை பரப்பும் "இடிஸ்' கொசு வகைகள் அதிக உற்பத்தியாகிறது. எனவே, சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காப்பதில் அதிக அக்கறை செலுத்துவது உடல் நலத்துக்கு நலம்.

தெருக்களில் உள்ள குப்பை தொட்டி, சாக்கடை அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சுகாதார நல அலுவலக அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி, சுத்தமாக வைத்து கொள்வதால் தொற்று நோய் கிருமி அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.

வீடுகளில் கிணறு உள்ளவர்கள் மாநகராட்சியில் உள்ள மலேரியா டிபார்ட் மென்ட் அலுவலர்களை தொடர்பு கொண்டு மருந்து தண்ணீர் வாங்கி ஊற்றி கொள்ளலாம்.

 

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=7886