Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

தலைவலி

  • PDF

தலைவலி பொதுவாக இரு வகைப்படும்.

முன்னுணர்வு அற்ற தலைவலி - இது பொதுவான தலையிடி எனக் கூறப்படும்.

 

முன்னுணர்வு உள்ள தலைவலி - இது வேறுபட்ட தலையிடி என கூறப்படும்.


பொதுவாக பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 4 இல் 1 என்ற வீதாசாரத்திலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 12 இல் 1 என்ற வீதாசாரத்திலும் தலையிடி ஏற்படும். சிறு வயதிலேயே தலையிடி உண்டாகக்கூடியது. சிலருக்கு அடிக்கடி ஏற்படும்.


தலையிடி பொதுவாக சில வித்தியாசமான அறிகுறிகளை உண்டாக்கக்கூடியது.


முன்னுணர்வு அற்ற தலைவலிக்கான அறிகுறிகள்.

சில வேளைகளில் முற்புறமாக தலையின் ஒருபக்கத்திலும் வேறு சில நேரங்களில் தலையின் இரு பக்கத்திலும் உண்டாகும். வேதனை அதிகரிக்கும் போது உண்டாகும் தலையிடி துடிப்பை உண்டாக்குவது போல் இருப்பதால் நேரம் செல்லச்செல்ல தலையிடி தாங்கமுடியாமல் இருக்கும். இது பொதுவாக 4 இலிருந்து 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்கலாம்.

 

சில வேளைகளில் தோன்றக்கூடிய அறிகுறிகள்


வயிற்றை பிரட்டுவது போல் இருக்கும். கூடுதலான சத்தத்தை கேட்கவோ அல்லது பிரகாசமான வெளிச்சத்தை பார்க்கவோ முடியாதிருக்கும்.

 

கண்பார்வை குறைந்திருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாதிருக்கும் நிறம் வெளிறிப் போயிருக்கும் மூக்கடைப்பு ஏற்படும் வேர்க்கும் அதிகம் சிறுநீர் கழியும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

 

முன்ணுணர்வு உள்ள தலைவலிக்கான அறிகுறிகள்:

 

எல்லா பொருட்களும் சுற்றுவது போல் இருக்கும் ஒருபக்கப் பார்வை தற்காலிகமாக குறைந்து காணப்படும் வெளிச்சம் வந்து போவதுபோல் இருக்கும்.

விறைப்பு கையில் தொடங்கி தோள்இ முகம்இ உதடுஇ நாக்கு என்று பரவும். சில வேளைகளில் காலிலும் விறைப்பு ஏற்படும்.

 

பேச்சில் தடங்கல் உண்டாகத் தொடங்கும்.


இவ் அறிகுறிகள் தொடங்கி 60 நிமிடத்தில் தலையிடி ஏற்படும்.

 

தலையிடி 4 படிமுறையில் உண்டாகும்

 

களைப்பாக எரிச்சலாக பசி கூடுதலாக இருப்பது போல் இருக்கும். உங்களுக்கு சில வேளைகளில் தலையிடி உண்டாகப்போகின்றது என்று விளங்கும்.

 

அறிகுறிகள் தோன்றிய நேரம்.

தலையிடி உண்டாகிய நேரம்.

 

தலையிடி குறையத் தொடங்கும் நேரம். இதன் போது நீங்கள் களைப்படைந்துஇ கவனம் குறைந்துஇ எரிச்சல் மேலோங்கி காணப்படுவீர்கள்.


கெடுபிடியான நேரத்தில் உண்டாகும் தலையிடி கீழ்வரும் காரணங்களால் சிலருக்கு ஏற்படலாம்:

 

உடலின் எடையை குறைப்பதற்காக அதிகம் குறைவாக உணவுண்பதால் உண்டாகும்.


புகைத்தல் அல்லது புகைப்பவர்களுக்கான அறையில் இருத்தல். சத்தம் கூடிய இடத்தில் அல்லது மணம் கூடிய இடத்திலிருத்தல். தெளிவற்று இயங்கும் தொலைக்காடசியை பார்த்தல்.


நித்திரை குளிசைகள் அல்லது ஓமோன்களிற்கான மாற்றுக் குளிசைகள் கருத்தடை மாத்திரைகள் போன்றவை எடுத்தல். நேரம்மாற்றி வேலைசெய்தல், மாதவிடாய் நேரம், இறுதியாக மாதவிடாயின் நிறுத்தம்.

 

பரசிற்றமோல் அல்லது அஸ்பிரின் போன்ற மருந்துகளை எடுப்பதன் மூலம் தலையிடி குறையும். இது இலேசாக தொடங்கினவுடனே குளிசையை எடுப்பதன் மூலம் விரைவில் தலையிடியை நிற்பாட்டலாம். இக் குளிசைகளிலும் விட iடிரிசழகநnஇ னiஉடழகநயெஉஇ nயிசழஒநn என்பன சில வேளைகளில் விரைவில் தலையிடியை நிற்பாட்டக்கூடியது.

 

தலையிடியின் போது உண்டாகும் வயிற்றுப் பிரட்டலை குறைத்தல்

நீங்கள் எடுத்த குளிசைகள் வயிற்றில் சில வேளைகளில் சமிபாடடையாமல் இருந்தால் வயிற்றைப் பிரட்டுவது போல் இருக்கும். இதற்கு வாந்தி எடுத்தல் மூலம் அக்குளிசையை வெளியேற்றலாம். இதை தவிர்ப்பதற்கு கையாளக்கூடிய வழிவகைகள்:


கரையக்கூடிய குளிசைகளை எடுத்தால் அவை விரைவில் வேலை செய்யும்.
வயிற்றுப்பிரட்டலை நிறுத்தும் குளிசையை தலையிடிக்கான மருந்துடன் எடுத்தல்.


சேர்க்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள்.

 

ஆபைசயடநஎநஇ Pயசயஅயஒஇ ஆபைசயஅயஒஇ யனெ னுழஅpநசயஅழட போன்ற சில குளிசைகள் தலையிடிக்கும் வயிற்றுப்பிரட்டலை நிறுத்துவதற்கும் ஏற்றதாக சேர்த்து தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாமல் இருக்க வாய்ப்புண்டு. இதற்கு நீங்கள்; தலையிடியை நிப்பாட்டும் குளிசையையும் வயிற்றை பிரட்டலை நிறுத்தும் குளிசையையும் வௌ;வேறு நேர இடைவெளியில் எடுக்கலாம்.


டீரிப்டன் மருந்துகள்

யடஅழவசipவயnஇ நடநவசipவயnஇ கசழஎயவசipவயnஇ யெசயவசipவயnஇ சணையவசipவயnஇ ளரஅயவசipவயn போன்றன வேதனையை குறைக்கும் குளிசைகளுக்கு பதிலாக பாவிக்கக்கூடியவை. ஆனால் இவை மூளையிலுள்ள தலையிடியை உண்டாவதற்கான காரணி என்று நம்பப்படுகின்ற 5ர்வு எனும் இரசாயனப்பொருளின் இயக்கத்தை தடைசெய்யக்கூடியது. இக் குளிசையால் பெரும் பக்க விளைவுகள் உண்டாக அதிகம் வாய்ப்புகளில்லை. இவை எந்தவொரு தலையிடியையும் நிப்பாட்டக்கூடிய சக்தி வாய்ந்தவை.

 

நீங்கள் டிரிப்டனை எடுக்கும் போது முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியது என்னவெனில் மற்றைய குளிசைகளைப் போல் அல்லாது தலையிடி தொடங்கிய ஆரம்ப நேரத்தில் டிரிப்டன் மருந்தை எடுத்தல் கூடாது. தலையிடிக்கான அறிகுறிகள் எல்லாம் முடிந்து தலையிடி விருத்தியடைய தொடங்கியதன் பின்பே இக்குளிசையை எடுத்தல் நன்று.

 

http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=76&Itemid=92