Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பாலியல் நெருக்கடிகள்

பாலியல் நெருக்கடிகள்

  • PDF

மாட்டுடன் உடல் உறவு கொண்ட பொலிஸ் பற்றியும், அவன் கைது பற்றியும் செய்தி இந்தியா டுடேயில் வெளியாகி உள்ளது. (30.12.1998)34


இந்தியாவில் தென்காசியைச் சேர்ந்த அச்சம் புதூர் கிராமத்தில் ''சீற்றம் மாற்றம் தரும்" என்ற தலைப்பில், பெண்ணைத் திருமணம் செய்து கணவன் சவுதி சென்ற நிலையில், வேறு ஓர் ஆணுடன் தொடர்பு எனக் கூறி, ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம் அரசியல் சமயப் பிரமுகர்கள் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று மொட்டையடித்து, மரத்தில் கட்டி வைத்து கற்பழித்துள்ளனர் என்று எழுதப்பட்டுள்ளது.

 


இது போல் திருமணம் செய்த கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு என அறிந்த மற்றொரு பெண் கணவனை விட்டுப் பிரிந்து வந்தாள். இதை எதிர்த்து கணவன், கணவனின் தந்தை (மாமனார்) வசைச் சொற்களால் அவளை விபச்சாரி எனக் கூறி, ஜமாத் உதவியுடன் பகிரங்கமாகத் தாக்கி, ஏசி, உதைத்து ஒன்றாக வாழக் கோரினர். இரண்டு பெண்களும் பல எதிர்ப்புக்கு மத்தியில் வழக்கைப் பதிவாக்கிப் போராடுகின்றனர். (21.4.1997)34


இந்திய ஆண்களின் ''நெருக்கடி மிகுந்த நடுப்பகல்" என்ற கட்டுரையில் ஆண்களுக்கு மத்தியத் தர வயதில் ஆயுள் முடிவது குறித்து எழுதுகின்றது. சைலேஷ் கோத்தாரி என்ற மன இயல் நிபுணர், ''உடலுறவைப் பெற ஆண் அன்பைத் தருகின்றான். பெண் அன்பைப் பெற உடலுறவைத் தருகின்றாள்" என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் அக்கட்டுரை தொடர்கின்றது. (6.6.1990)34


பாலியல் நெருக்கடி இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் கொடையாகும். இது வேறுபட்ட சமூகங்களின் ஆதிக்கத்தில் இருந்த மதப்பிரிவுகளினுடைய வக்கிரத்தின் குறியீடாகிப் போனது. ஆண் பெண்ணின் பாலியல் உறவுகளை நலமடித்தபோது அது சமுதாய நெருக்கடியானது. மிருகங்களை வீட்டில் பழக்கி வளர்க்கத் தொடங்கிய மனிதன் மிருகத்தின் பாலியல் நாட்டத்தைக் கட்டுப்படுத்தி மிருகங்களின் பாலியல் உறுப்புகளைச் சேதப்படுத்தினான். இந்தச் சேதத்தைச் செய்கின்ற போது காட்டுமிராண்டித்தனமாக மிருக உறுப்புகளை நசுக்கிச் (ஆட்டுக்கிடாய்க்குக் காயடித்தல்) சேதப்படுத்துவது என்ற அவனின் அறிவியல் எல்லையில் இருந்து இன்று நவீனப்பட்டுள்ளது. இந்தச் சேதாரம் மட்டுமே உபரியைப் பெற்று தரும் மிருக வளர்ப்பு ஆதாரத்தை வழங்கியது.


இதில் இருந்து ஆணாதிக்கச் சமூகம் தனது சொத்துக்குரிய ஆண் தலைமுறையை உருவாக்க ஆண் - பெண் பாலியல் புணர்ச்சியில் நலமடிக்கத் தொடங்கினான். இது பெண் மீதான பாலியல் தடையை ஒழுங்குபடுத்தியது. இதை மீறும் போது கடும் தண்டனைகள் ஈவு இரக்கமின்றி மதத்தின் துணையுடன் பெண் மீது பாய்ந்தது. பெண்களை எரித்தல், சமுதாயத்தில் இருந்து ஒதுக்குதல், தாக்குவது, பெண் உறுப்பைத் தைப்பது, சேதமாக்குவது என பல வடிவங்கள் பெண் மீது ஏவப்பட்டது. பெண் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டாள். மிருக வளர்ப்பில் அனுபவம் பெற்ற மனிதன் ஆண் - பெண்ணை வேறுபடுத்தி, அடைத்து அனுபவப்பட்ட போக்கில் பெண்ணை வீட்டில் அடைத்து வைக்க பழகிக் கொண்டான். இந்தப் போக்கில் உருவான கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள் ஆணுக்கும் பாலியல் பூர்த்தியைக் கட்டுப்படுத்தியது. விபச்சாரம் தீர்வாக ஆணுக்கு விட்டுச் சென்ற ஆணாதிக்கம் அதைச் சந்தைப்படுத்திய போது அதுவும் நெருக்கடிக்குள்ளானது.


பாலியல் நெருக்கடி என்பது இயற்கையின் தெரிவை அனுசரிக்க மறுத்தது. இது இயற்கைக்குப் புறம்பான பாலியல் வடிவங்களைத் தேர்வு செய்வதை ஊக்குவித்தது. ஆணும், பெண்ணும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. மிருகத்துடன் உறவு, பெண்ணும் - பெண்ணும் உறவு, ஆணும் - ஆணும் உறவு, சிறுவர் - சிறுமி மீதான ஓரின மற்றும் எதிர்பால் உறவு, பொம்மைகள் மீதான உறவு, நினைவுகளில் உறவு..... என பல வடிவங்களைக் கிடைக்கக்கூடிய இடைவெளிகளில் எல்லாம் நீக்கல் இன்றி கடைப்பிடிக்கப் பின் நிற்கவில்லை. மனித உருவத்தின் ஏதாவது ஒரு பகுதியுடன் மிருகத்திற்குப் பிறக்கும் குட்டிகளின் நிலைமைக்கு ஆணின் பாலியல் நெருக்கடிகள் தான் காரணம் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும.


இந்தப் போக்கில் இவை, சட்டவிரோதமான பாலியல் உறவாகச் சமூகம் காணத் தொடங்கியது. ஆணாதிக்கம் உருவாக்கிய பாலியல் நெருக்கடியினால் இருட்டில் உருவான, இயற்கைக்குப் புறம்பான பல பாலியல் தீர்வுகள் மாறுபட்ட பொருளாதார மாற்றத்துடன் தன்னை அங்கீகரிக்கக் கோரிப் போராடுவது மாற்று வழியாகியது. இதனால் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க இவைகளை அங்கீகரிப்பதன் மூலம் இயற்கையான பாலியல் கட்டுப்பாட்டைப் பேணிக் கொள்வதன் மூலம் சமுதாயத்தின் ஆணாதிக்க வடிவத்தைப் பேணிக் கொள்ள சுரண்டும் வர்க்கம் தன்னைத் தனது சுரண்டும் ஜனநாயக வழியில் ஒழுங்குபடுத்தி வருகின்றது.


மனித வரலாறே பூமியின் வரலாறாகக் கற்பனை செய்வோர் இயற்கையின் வரலாற்றை மறுப்பதில் தம்மையும், இந்த ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பையும் பாதுகாக்க முயலுகின்றனர். இயற்கையின் பாலியல் தேர்வை ஆணாதிக்கப் பாலியல் ஒழுங்கில் பேணிக் கொண்டு வாழும் உலகில் செயற்கையான பாலியல் ஒழுங்கைப் பாதுகாக்கவும், கோரவும் கோஷம் போடுகின்றனர்.