Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பின் இணைப்பு : வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?

பின் இணைப்பு : வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?

  • PDF

book _4.jpgசில முக்கியமான விடையங்கள் பற்றிய அடிப்படையான குறிப்புகள் அவசிமாகிவிடுகின்றது. கருணாகுழு பிரிந்து சென்றதை வெறும் தனிப்பட்ட பிரச்சனையாக பிரபாகுழு கூறி, பிரச்சனையின் அடிப்படைச் சாரத்தையே மறுக்கின்றனர். மறுபுறத்தில் ஆதாரமற்ற வதந்திகளையே சமூக கருத்தாக்குகின்றனர். எந்தவிதமான அடிப்படையுமற்ற வகையில் பரப்பும் வக்கிரங்கள், தனிப்பட்ட நபர்களின் கற்பனைத் திறனுடன் இசைந்து செல்லுகின்றது. தமிழ் மீடியாக்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள், கட்டுரைகள் என்று பலவற்றை வண்ணவண்ணமாக வெளியிடுகின்றனர். புலியின் பாசிசக் கோட்பாட்டுக்கு இசைவான பினாமியத்தை அடிப்படையாகக் கொண்ட வானொலிகள், கற்பனைகளை விதைத்து, விவாதம் என்ற பெயரில் வக்கரிக்கின்றது. உண்மையில் பாசிசக் கட்டமைப்பில், தமிழ் மீடியாவும் வக்கரித்து நிற்கின்றது அவ்வளவே.

 கருணா குழுவை உண்மையில் துல்லியமாக நுணுகி ஆராய்ந்தால், அவர் பிரதேசவாத நலன்களைக் கூட முன்னெடுக்கவில்லை. மாறாக குறுகிய பிரதேசவாத நலனையே முன்னிறுத்துகின்றார். அதாவது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் எப்படி குறுந்தேசிய போராட்டமாக சீரழிந்து பாசிசமாகி கிடக்கின்றதோ, அதை ஒத்த தன்மையில் தான் கருணாவின் பிரதேசவாதமும் பிரபலிக்கின்றது. இதனால் கருணா தன்னையே முழுமையாக நியாயப்படுத்த முடியாத ஒரு நிலையில் சிக்கி நிற்கின்றார். மறுபக்கத்தில் பிரபாகுழு அதை விட மோசமான நிலையில், பாசிச வழிகளில் நின்று கருத்துரைக்கின்றனர். கருணாகுழு அரசியல் ரீதியாக தப்பிப் பிழைக்கும் சாத்தியப்பாடானது, பிரபாகுழு பாசிச வழிகளில் கையாளும் யாழ்  பிரதேசவாத அடிப்படைகளில் சார்ந்து கிடக்கின்றது. பிரபாகுழு அரசியல் ரீதியாக கருணாகுழுவை தனிமைப்படுத்த முடியாது, போன நிலையில் அடிப்படையும், ஆதாரமுமற்ற ஒரு அவதூறை நம்பிச் செயல்படுகின்றனர். அவதூறு சார்ந்த படுகொலை மூலம், பழைய நிலையை வந்தடையவே விரும்புகின்றனர். அடிப்படையும் ஆதாரமும் அற்ற வாய்வழி வதந்திகளை மேற்கோள் காட்டும் தமிழ் பாசிசப் பத்திரிகைகள், செய்தி மீடியாக்கள் வக்கிரமாகவே கருத்துரைக்கின்றனர். புத்தி ஜீவிகளாக தம்மைக்காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பவாத பினாமிகள், முன்னைய தமது சொந்த முகங்களை இதற்குள் மூடிக்கொண்டு பொய்களும் அவதூறுமாக வக்கரிக்கின்றர். புலிகள் இயக்கத்தில் பதவி நீக்கப்பட்ட அல்லது ஏதோ ஒரு வகையில் ஒதுக்கப்பட்ட பிரிவுகள் கருணாவை வாயாறத் தூற்றுவதன் மூலம், முன்னுக்கு வருகின்றனர். யார் எல்லாம் உரத்து கருணாவைத் தூற்றமுடியுமோ, அவர்கள் எல்லாம் முன்னணி தேசியவாதிகளாகின்றனர். உண்மையில் சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் இயக்கத்தின் கருத்துரைப்பவராக மாறிவருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் அரசியல் சீரழிவு என்பது உச்சத்தில் போயுள்ளது.


 கருணா பிரச்சனை என்பது, ஜனநாயகம் தொடர்பான பிரச்சனை என்பதை யாரும் மூடிமறைக்க முடியாது. இங்கிருந்துதான் பிரதேசவாதம் முன்தள்ளப்படுகின்றது. புலிகள் இயக்கத்தில் ஜனநாயகம் பற்றிய எந்த உணர்வும், மரணதண்டனைக்குரிய குற்றமாகும். கருணா பற்றிய புலிகளின் யாழ் தலைமை எடுக்கும் எந்த முடிவும் மரணதண்டனைக்கு நிகரானதாக இருப்பதால், அதில் இருந்து தப்பவே கருணா பிரதேசவாதத்தை முன்னிலைக்கு கொண்டு வந்து சவால் விடும் நிலைக்குச் சென்றுள்ளார் என்பது மிகையல்ல. புலிகள் அமைப்பு என்பது பரஸ்பரம் சந்தேகத்தை அடிப்படையாக கொண்டது. ஒருவரை ஒருவர் கண்காணிக்கின்ற அடிப்படையில் நம்பிக்கையினத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கம். பரஸ்பரம் உளவு பார்த்தலை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கம். அரசியல் ரீதியான ஒருமைப்பாட்டால் இயக்க ஒற்றுமை கட்டமைக்கப்படவில்லை. இங்கு விசாரணை, நீதி என்ற ஜனநாயக எல்லைக்குள் எதையும் செய்வதில்லை. மாறாக மரணதண்டனை என்ற எல்லை வரை கையாளப்படும் பாசிச சர்வாதிகார அணுகுமுறையே, புலிகளின் அன்றாட இயக்க நடைமுறையாக இருந்து வருகின்றது.


 மருந்துக்குக் கூட ஜனநாயக உரிமையற்ற புலிகளின் பாசிச அமைப்பில், உடைவு என்பது அதிரடியான ஒன்றாக இருப்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. புலிகளின் இயக்கம் அழிவதும், அப்படித்தான் அமையும்;. மற்றைய இயக்கங்களில் ஜனநாயகம் பற்றிய போராட்டம், சமரசவாதத்துடன் இழுபட்டபோக்குடன் இசைந்து அந்த அமைப்புகளின் உயிர் வாழ்வை நீடித்ததாக்கியது. புலிகளிடம் அது சாத்தியமில்லை. ஒன்றை முற்றாக அழிக்கும் எல்லைவரை இரத்தப் பசி கொண்டதாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது.


 எடுத்தயெடுப்பில் துரோகி முத்திரை குத்துவது இதன் பொதுசாரமாகும். சகோதரப் படுகொலைகள் முதல், சொந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் வரை ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்ட போதும், துரோக முத்திரையைக் குத்துவது சர்வசாதாரணமான விடையமாகவே இருந்தது. அரசியல் ரீதியாக துரோகம் என்னவென்று விளக்க முடியாத எல்லையில், அவதூறுகள் கொலைகள் மூலம் ப+ர்த்தி செய்யப்பட்டன. கருணாவுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூற்றில் பொம்பளைப் பொறுக்கி, நிதி மோசடி, அன்னிய சக்தியுடன் தொடர்பு, இயக்க உட்படுகொலைகளைச் செய்தவர் என்ற ஒரு நீண்ட பட்டியல் தரப்படுகின்றது. ஆனால் இதற்கு அடிப்படையான எந்த ஆதாரத்தையும் எங்கும் யாரும் வைக்கவில்லை. கண்மூடித்தனமான விசுவாசத்தின் மீது, பொதுவான சமூக முட்டாள் தனத்தின் மீது ஒரு படுகொலை அரசியல் வரலாறே தொடருகின்றது. திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட அவதூறுகளின் உண்மைத் தன்மை பற்றிய ஆய்வுக்கு அப்பால், கருணா மீது திடீரென வைக்கும் அபத்தங்கள் எமக்கு சில உண்மைகளை சொல்லிவிடுகின்றன.


 இவை எல்லாம் உண்மை என்று எடுத்தால், புலித் தலைமைக்குள் இப்படி எத்தனையோ பேர் தலைமைகளில் உள்ளனர் என்பதை நாம் நிராகரித்துவிடமுடியாது அல்லவா. கருணா புலிகளால் போற்றப்பட்ட போது, இதை கூறுபவர்களை துரோகி என்று கூறி ~~மண்டையில் போட்டு|| (இந்த மண்டையில் போடுதல் என்பது மண்டையில் சுட்டு படுகொலை செய்தல். இது இயக்கத்தின் தேசிய மொழி) இருப்பார்கள். உண்மையில் அரசியல் ரீதியாகவே துரோகியாகிய ஈ.பி.டி.பி என்ற துரோகக்குழு, கடந்த ஒரு வருடத்துக்கு முன் தனது இணையச் செய்தி ஒன்றில்,  கருணாவுக்கு எதிராக மட்டக்களப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் கருணா பற்றிய இன்றைய சில அவதூறுகளை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. ஆனால் அப்போது எல்லாம் இன்றைய புலானாய்வுக் கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள் எங்கே போனார்கள்;. மலடுபட்டு ஆண்மை இழந்து கிடந்தவர்கள், திடீர் ஆண்மையை பெற்றது போல் விழித்தெழுந்து களத்தில் சந்தர்ப்பவாதிகளாக நக்கிப் பிழைக்கின்றனர். இதுதான் எதார்த்த உண்மை. தமிழ் மக்களை ஏமாற்றி அண்டிப் பிழைக்கும் ஒரு கும்பல், புலிக்கு பின்னால் அணிதிரண்டு வருகின்றது என்பதே உண்மை. புலிக்குள் இந்தக் கும்பல்  புளுத்துக் கிடக்கின்றது. கருணா போன்ற பல கருணாக்களும், அவரை விட மோசமானவர்களும் புலிக்குள் உள்ளனர் என்பதே எதார்த்த உண்மை. சந்தர்ப்பவாதத்தை பயன்படுத்தி பிழைப்பவர்களாலும், தேவை ஏற்பட்டால் கவிழ்ப்பவர்களாலும் புலிகள் இயக்கம் புழுத்துக் கிடக்கின்றது என்பதே உண்மை.


 இங்கு மற்றொரு அடிப்படையான கேள்வி ஒன்று மிக முக்கியமானது. புலிகளால் துரோகியாக்கி பின் கொல்லப்பட்ட புலிகளின் முன்னாள் தலைவர்களும், துரோகியாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளவர்களும், கடந்த காலத்தில் அவர்கள் இயக்கத்தின் பெயரில் செய்த நடவடிக்கைகளை புலிகள் தமதானதாக உரிமை கோருகின்றனரா? இல்லையா என்பதே? புலிகள் இயக்கத்தினுள் முன்னாள் துரோகிகளும் இன்னாள் துரோகிகளும், மற்றவர்களை  துரோகியாக அறிவித்தவர்களின் கதி என்ன? இப்படி அறிவிக்கபட்டு கொல்லப்பட்டவர்கள் பற்றி, துரோகியல்லாத புலிகளின் இன்றைய நிலைப்பாடு என்ன? மாத்தையா செய்த கொலைகள் எத்தனை? இப்படி ஒரு தேசியப் பட்டியலே உண்டு. அவர்கள் எல்லாம் தியாகிகளா! அல்லது துரோகிகளா! உண்மையில் இந்த விடையம் பேசப்பாடத ஜனநாயகமாக உள்ளது. வெட்டிப் புரட்டி கருத்துரைக்கும் பாசிச சந்தர்ப்பவாத பிழைப்புவாத பன்றிகளின் ஜனநாயகம் என்பது, நக்கிப் பிழைப்பத் தான்.  
 அடுத்து கருணா எழுப்பிய அடிப்படையான கேள்விக்குப் பதிலளிக்காது அனைவரும் விடையத்தை சூக்குமமாக்கின்றனர். மதியுரையர் பாலசிங்கம் இதைப்பற்றி கூறும் போது "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்று போற்றப்படுபவர் பிரபாகரன்.  பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாததொன்று, அபாண்டமானது" என்றார். இதில் முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வர்க்கப் பிளவுகள் சமூகத்தில் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதாகும். சமூகத்தில் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் உள்ளது என்றால், அந்த சமூகத்தால் பிரபாகரன் போற்றப்படுகின்றார் என்றால், அந்த இயக்கம் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டதே. இதுதான் எதார்த்த உண்மை. தனிப்பட்ட பிரபாகரன் என்ன நினைக்கின்றார் என்பதல்ல. இதற்கு வெளியிலும் கூட தனிப்பட்ட பிரபாகரன் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் அறியார். பாலசிங்கம் கூறுவது போல் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட" போராட்டம் என்பது இவற்றைக் களையாது தமிழ் தேசியம் கட்டமைக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றது. அதாவது இவற்றை அடிப்படையாகக் கொண்ட தேசிய இயக்கம் என்பது, பிரதேச, சாதிய, ஆணாதிக்க, வர்க்க அடிப்படையைக் கொண்டது. காலம்காலமாக யாழ் மையவாதத்தால் இவை கட்டிப் பாதுகாக்கப்படுகின்றது. இது வெறும் பிரபாகரன் என்ற தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. இதன் பிரதிநிதியாக புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் உள்ளனர் அவ்வளவே.


 பாலசிங்கம் மேலும் ஒருபடி மேலே போய் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை தலைவர் பிரபாகரன் தீர்த்துள்ளார் அல்லது தீர்த்து வைப்பார் என்பது மற்றொரு வேடிக்கையான வாதம்;. பிரதேசவாதம், சாதியம், வர்க்கம் போன்ற சமூகப் பிரச்சனைகளை, எப்படி புலிகளின் தனிப்பட்ட தலைவர் பிரபாகரன் தீர்ப்பார் அல்லது தீர்த்துள்ளார் என்றால், அதை மட்டும் சொல்லமாட்டார்கள்;. இதற்கு எதிரான குரல்களை துப்பாக்கி குண்டுகளால் மட்டுமே தீர்க்க முடியும் என்பது புலிகளின் அரசியல் அகாரதி. மறு தளத்தில் கருணா சுட்டிக் காட்டிய யாழ்பிரதேசவாத உணர்வை, புலிகள் ஒத்துக் கொள்ள மறுப்பதே, இதன் மற்றொரு முக்கியமான சாரமாகவும் உள்ளது. சிவத்தம்பி பி.பி.சி க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் சாதியம், பிரதேசவாதம் போன்ற சமூகப் பிரச்சனைகள் உள்ளது என்று மென்று விழுங்கி ஒத்துக்கொண்ட போது, இதை இப்போது எழுப்பியது தவறு என்று கூறியதன் மூலம், யாழ் பிரதேசவாத பாசிசத்தையே நியாயப்படுத்தினார். இதையே பிரபலமான புலிகளின் இராணுவ ஆய்வளராகவும், பத்திரிகையாளருமாக உள்ள சிவராமும் (தராக்கி) கூற முனைகின்றார். இந்தப் பிளவில் இவரின் பெயர் சம்பந்தப்படுத்தி வந்த அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் கருத்துகளை அடுத்து, கட்டுரை ஒன்றை வீரகேசரியில் மூச்சு இழுக்க எழுதியுள்ளார். இப்ப ஏன் தான் கருணா இதை எழுப்பினார் என்று கூறி, தனது அபிப்ராயத்தை வைக்கின்றார். ஆனால் இங்கு யாழ் பிரதேசவாத பிரச்சனை உண்டு என்பதை ஒத்துக் கொள்ளும் சிவராம், சிவத்தம்பி போன்றோர், புலிகளின் தலைமை அதை ஏற்க மறுத்ததை சுட்டிக்காட்டி போராட முன்வரவில்லை. பாலசிங்கம் எதை சொன்னாரோ, அதை இவர்கள் கௌரவமாக மூடிமறைத்துச் சொல்லுகின்றனர் அவ்வளவே. பிரதேசவாதம் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு, அதைத் தீர்க்க முனையும் போது இந்தப் பிரச்சனை இலகுவாக தீர்க்கமுடியும் என்பதை, யாரும் மூச்சுக்குக் கூட புலிகளின் தலைமைக்கு சுட்டி விமர்சிக்கவில்லை. உண்மையில் நிலவும் யாழ் பிரதேசவாத இயக்கச் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட பிரதேசவாதத்தை களையும், முனைப்பில் இறங்கியிருக்க வேண்டும்;. இதன் மூலம் கருணா என்ற நபரின் பின்னுள்ள தனிப்பட்ட பிரச்சனைகளை இலகுவாக கையாண்டு இருக்க முடியும்;. ஆனால் அப்படிச் செய்யாத புலிகளின் நிலை என்பதும், தனிப்பட்ட பிரச்சனை என்பதும், யாழ் தலைமைக்கு எதிரான உணர்வை அடிப்படையாகக் கொண்டது என்பதை தெளிவாக்கின்றது.

  
 யாழ் பிரதேசவாத உணர்வைக் களைய மறுத்த புலித்தலைமை, கருணாவுக்கு பின்னால் ஒரு சர்வதேச உளவு அமைப்பு உள்ளது என்பது, அடிப்படையான புலித் தலைமையின் நேர்மையைத் தகர்க்கின்றது. மறுபக்கத்தில் சர்வதேச உளவு அமைப்பே பிளவுக்கான அடிப்படை என்ற தூற்றலுக்கு ஆதாரம் எதையும் இதுவரை இவர்கள் முன் வைக்கவில்லை. பிரபா கருணா பிளவை, சர்வதேச சக்தி ஏற்படுத்தியது என்றால், அந்தப் பிளவு அரசியலே புலியின் அரசியலுமாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பிளந்தது, பல்கலைக்கழக மாணவர் அமைப்பை பிளந்தது, முஸ்லீம் கங்கிரசை பிளந்தது என்று பட்டியல் நீண்டது. அண்மையில் புலிகள் பிளந்த பல பிளவுகளை எல்லாம் பாசிசம் நியாயப்படுத்தியது. இது கடந்த அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால் ஈரோஸ்சை பிளந்தது முதல் பல இயக்கத்தை பிளக்கும் சதியின் பின்னணியில் புலிகள் இருந்தனர் என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. புலம் பெயர்ந்த நாடுகளில் சிறுவர் பாடசாலைகள், கோயில்கள், தொலைக்கட்சி நிறுவனங்கள் முதல் பல நூறு சுயாதீனமான சமூக அமைப்புகளை புலிகள் பிளந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அரசியல் அடிப்படையைக் கொண்டு, கருணா பிளவை நிராகரிக்க முடியாது. இந்தப் புலிகளின் அரசியல் அடிப்படையில் புலிகளை ஒரு ஏகாதிபத்தியம் பிளந்து இருந்தால், எந்த மூஞ்சியினால் இதை விமர்சிக்கவும் எதிர்க்கவும் உங்களால் முடிகின்றது.


 கருணாவுக்குப் பதிலளித்த பாலசிங்கம் மற்றொரு உண்மையை போட்டு உடைத்து விடுகின்றார். நாங்களும் ஏகாதிபத்திய கைக்கூலிகள் தான் என்பதை அவர் சொல்லிவிடுகின்றார். அவர் அதை அழகாகவே ~~சர்வதேச உதவியோடு சிங்களவர்கள், முஸ்லீம்கள் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்குமான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனருத்தாரணம் தொடர்பான பாரிய திட்டங்களை மேற்கொள்ளமுடியும்.|| என்று வருணித்துள்ளார். சர்வதேச உதவியுடன் தான், தேசியத் தலைவர் தேசத்தை முன்னேற்றுவார் என்பதை மதியுரையர் தெளிவாக்கி விடுகின்றார். என் மனைவியை காப்பாற்ற எனக்கு வக்கில்லை. அதனால் வசதிபடைத்த நீ என் மனைவியை வைத்துக் கொள் என்பதே புலிகளின் அரசியலாகித் தொக்கி நிற்கின்றது. நாங்கள் முன்பு கூறியவற்றை இது மறுபடியும் மெய்ப்பித்துவிடுகின்றது. சர்வதேச உதவி என்பது என்ன? உதவி, கடன், முதலீடு என்ற பெயரில் நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு எதிராக, உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள் இவற்றைத் தெளிவாக விளக்கி நிற்கின்றது. ஏகாதிபத்தியத்துக்கு ஏழை நாடுகள் மீது ஏன் இந்த அக்கறை? சொந்த மக்களின் இரத்தத்தை சுவைத்தது போதாது என்ற நிலையில் ஏழை நாடுகளின் மக்களின் இரத்தத்தை சுவைக்கவே ~உதவி| எனும் பெயரில் வருகிறது அதன் அக்கறை. சொந்த தேசத்தை முன்னேற்ற (கற்பழிக்க) ஏகாதிபத்தியத்தின் உதவியை நாடுவதாகக் கூறுவது கையாலாகாத்தனமான புலிகளின் கைக் கூலித்தனமாகும். முன்பு சொன்ன சோசலிசத் தமிழீழம் எல்லாம், இன்று உலகமயமாதலாகும். ஒரு தேசத்தை சொந்தமாக நிர்மாணம் செய்ய முடியாத உங்களுக்கு எல்லாம், எதற்காக தேசவிடுதலைப் போராட்டம் தேவைப்படுகின்றது? ஏகாதிபத்தியக் கைக் கூலிகளாக மக்களை அடக்கியொடுக்கி வாலாட்டி நக்கிப் பிழைப்பதை தாண்டி இந்த "உதவி" என்பது எதையும் விளக்காது. இந்த இடத்தில் கருணா அதைச் செய்தால், அதை தூற்ற என்ன தார்மீகப்பலம் என்ன அருகதை உங்களுக்கு உண்டு? சர்வதேசம் என்னும் ஏகாதிபத்தியத்திடம் கடன் வாங்கியே தேசத்தைக் காட்டிக் கொடுக்கவும், கற்பழிக்கவும் முனையும் நீங்கள், கருணாவைக் குற்றம்சாட்ட எந்த தார்மீகப்பலமும் கிடையாது.


 மறுபக்கத்தில் துடித்துப் பதைத்த பாலசிங்கம் ~~அங்கீகாரத்தையும் சலுகைகளையும் பெறுவதற்காக சிங்கள இராணுவத் தலைமையோடும், பேரினவாத அரசியல் சக்திகளோடும் ஒளிவுமறைவானத் தொடர்புகளை அவர் இப்போது ஏற்படுத்தியுள்ளார்|| என்கிறார். உண்மையில் நீங்கள் செய்ய முனையாததையா அவர் செய்ய முனைந்தார். நீங்கள் அவருடன் சேர்ந்து செய்யாததையா, அவர் தனியாக செய்ய முனைகின்றார்? நீங்கள் முன்பு சேர்ந்து செய்ததை, இப்போது அவர் தனியாக செய்ய முனைகின்றார் அவ்வளவே. இதை எப்படி பாலசிங்கம், எதிர்த்தரப்பு மீதான ஒரு குற்றமாக முன்வைக்க முடியும்;. அவர் உங்களுடன் இருந்த போது, சர்வதேச சமூகத்துடன் உங்களுக்காக எதை எல்லாம் பேசினாரோ, அதையே இன்று தனக்காகச் செய்ய முனைகின்றார். இதை எதிர்தரப்பின் மீதான குற்றமாக முன்வைக்கும் புலிகள், மாற்றாக என்ன தீர்வை வைத்துள்ளனர்? உண்மையில் நாட்டை ஏலம் விட்டுள்ள இரண்டு பிரிவும், ஏகாதிபத்திய கைக்கூலிகளாக இருக்கவே தனித்தனியாக முனைகின்றனர். இந்த உண்மையைத் தாண்டி, கருணாவுக்கு எதிரான அவதூறுகள் எதுவும், எதார்த்தத்தில் மாற்றாக எதையும் முன்வைக்கவில்லை.