Thu04252024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் 'தண்ணீர் கொள்ளைக்குக் காரணம், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தம்!" - த. வெள்ளையன், தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

'தண்ணீர் கொள்ளைக்குக் காரணம், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தம்!" - த. வெள்ளையன், தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

  • PDF

10_2005.jpg'குடிப்பதற்கு குடிநீர் இல்லை; பாசனத்திற்கு நீர் இல்லை; காவிரி நீர் இல்லை; முல்லைப் பெரியாறு தண்ணீர் நமக்கு இல்லை இப்படி, தமிழகம் இருக்கும் நிலையில், ஆற்றுநீரை அந்நியர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாமா?" என்று கேள்வி எழுப்பிய த.வெள்ளையன்,

 

'தமிழகமெங்கும் ம.க.இ.க.வின் சுவரெழுத்துக்களைப் பார்த்தேன். எந்தவொரு அரசியல் கட்சியாவது மக்கள் பிரச்சினைகளுக்காகச் சுவரெழுத்து எழுதியதுண்டா? மாறாக, தலைவர்களின் பிறந்தநாளுக்குத் தான் எழுதுகிறார்கள்" என ஓட்டுக்கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதை விவரித்தார்.

 

'தாமிரவருணி குடிநீர் கடாம்பக்குளம் வரை செல்லவில்லை. தாமிரவருணி கரைபுரண்டு ஓடினால்கூட, கடைமடை வரை தண்ணீர் திறந்துவிட மறுக்கிறார்கள். மணற் கொள்ளை தடைபட்டுப் போகும் என்பதால்தான் தண்ணீர் திறந்துவிடுவதில்லை. ஏற்கெனவே ஸ்டெர்லைட், ஸ்பிக் ஆகிய ஆலைகள் தாமிரவருணி தண்ணீரை உறிஞ்சிக் கொள்வதால், தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இடையே அந்நியர்களையும் தண்ணீரை உறிஞ்ச அனுமதிப்பது மன்னிக்க முடியாத குற்றம்"

 

'தண்ணீர் கொள்ளை, கல்விக் கொள்ளை போன்ற நாட்டைப் பிடித்துள்ள கேடுகளுக்குக் காரணம், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தம். இயற்கை வளங்களை நாம் பயன்படுத்துவதற்குக் கூட வரைமுறை வேண்டும்; பிறகு அந்நியன் வகை தொகையின்றிப் பயன்படுத்த அனுமதிக்கலாமா?" என்பதைச் சுட்டிக் காட்டிய த.வெள்ளையன், 'சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது; ஒரு சிலர் உயிர் இழக்காமல் பகை வெல்ல முடியாது" என மக்கள் எழுச்சி ஏற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.