Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

  • PDF

10_2006.jpg

*விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, சில அறிவாளிகள் கருதிவரும் வேளையில், இந்த மூன்றாவது அரசியல் கழிசடையை அம்பலப்படுத்திக் காட்டியது சிறப்பு. "கோக்' ஆக்கிரமிப்பாளருக்கு விசுவாச சேவை செய்யும் நவீன எட்டப்பர்களான அன்புமணி புத்ததேவ் கருணாநிதி

 ஆகியோரை உரிய தருணத்தில் பு.ஜ. எடுப்பாக அம்பலப்படுத்தியுள்ளது. கிரிமினல் குற்றக் கும்பல்களின் கூட்டாளிகள்தான் போலீசும் அதிகாரவர்க்கமும் என்பதை கேரள அய்யப்பன் கோயில் தந்திரி விவகாரத்தின் மூலம் நிரூபித்துக் காட்டி, வர்க்கக் கோபத்துடன் எழுதப்பட்டுள்ள கட்டுரை பிரச்சாரத்துக்குப் பெரிதும் உதவியது.
வாசகர் வட்டம், ஓசூர்.

 

* "கோக்' என்பது அமெரிக்கா மேலாதிக்கத்தின் சின்னம் என்பதைப் புரிந்து கொண்டு, கோக்கிற்கு எதிராக நாடெங்கும் மக்கள் போராடிய சூழலில், போலி கம்யூனிச முதல்வர் புத்ததேவும் சமூக நீதிபேசும் அன்புமணி, கருணாநிதி ஆகியோரும் கோக்கிற்கு முட்டுக் கொடுத்து ஆதரிப்பது அடிமைத்தனத்தின் புதிய பரிமாணம். ஜெனிவா பேச்சு வார்த்தை குறித்த கட்டுரையின் விவரங்கள், இந்தியா இனி ஒரு விவசாய நாடு அல்ல; விற்பனைக்காடு என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
இரா. மணிகண்டன், சூசுவாடி.

 

* விஜயகாந்தை புதியதொரு அரசியல் மாற்றாகக் கருதுவோருக்கு பு.ஜ.வில் வந்த கட்டுரை சரியான சவுக்கடியாக அமைந்துள்ளது. திராவிட கேப்டனின் கழிசடை அரசியலை இளைஞர்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்க நாம் இன்னும் கடுமையாக வேலை செய்ய வேண்டும்.
யாழினி, சென்னை.

 

*மக்களிடையே நிலவும் கோக்பெப்சி எதிர்ப்புணர்வைப் பூசி மெழுகி 2003இல் துரோகமிழைத்த பா.ஜ.க. கும்பலையே விஞ்சும் வண்ணம் இப்போது 2006இல் பா.ம.க.வின் அன்புமணி துரோகமிழைத்து வருகிறார். அவரோடு சேர்ந்து பின்பாட்டு பாடுகிறார்கள் கருணாநிதியும் புத்ததேவும். இந்தப் போலி முற்போக்குகளும் ஏகாதிபத்திய அடிமைகள்தான் என்பதை பு.ஜ.இதழின் அட்டைப்படக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது.
இராணி, மத்தூர்.

 

*தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் பாடத் தடைவிதிக்கும் மனுநீதி தீர்ப்பானது, தீண்டாமை எந்த அளவுக்கு வீரியமாக உள்ளது என்பதையும், பார்ப்பனக் கும்பலின் ஆதிக்கத்தையும் மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது. களத்தில் நின்று தமிழுக்காகவும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவரும் புரட்சிகர அமைப்புகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.
இராமலிங்கம், காட்டுமன்னார் கோவில்.

 

* கிரிமினல் குற்றக் கும்பல்கள் அம்பலமான பின்னரும் அய்யப்பன் கோவிலின் "புனிதத்தை'க் காக்க போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் புறப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. கோக்பெப்சியின் புதிய அடியாட்களை அம்பலப்படுத்திய அட்டைப்படக் கட்டுரை பிரச்சாரத்துக்குப் பெரிதும் உதவியது.


வாசகர் வட்டத்தின் இறுதியில், ""பிணங்களை அறுவடை செய்யும் இந்திய அரசு'' என்ற தலைப்பில் விதர்பா விவசாயிகளின் அவலத்தை வி.வி.மு. தோழர் ரவி விளக்கிப் பேசி, தாராளமயத்துக்கு எதிராகப் போராட அறைகூவினார்.

வாசகர் வட்டம், திருச்சி.