யூனியன் கல்லூரியின் அதிபரான ஐ.பி.துரைரத்தினமும் - அமெரிக்கன் மிசனும்
ஐ.பி.துரைரத்தினம் அதிபராக இருந்த காலத்தில் தான், அதாவது 1940 இல் «யூனியன் கல்லூரி» என்ற காரணப் பெயரை யூனியன் கல்லூரி பெற்றுக் கொண்டது. அதற்காக அவர் உழைத்தார்.
தெல்லிப்பழையில் அமைந்துள்ள இக் கல்லூரிக்கு, 200 வருட வரலாறு உண்டு. 1816 நவம்பர் 9 ஆம் திகதி "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்" நிறுவப்பட்டதன் மூலம், அதுவே இன்று இலங்கை வரலாற்றில், யூனியன் கல்லூரியானது ஐந்தாவது கல்லூரியாக வர ஏதுவாகியது.
வடக்கிலே முதலாவது பாடசாலையானது, ஆசியாவில் முதல் கலவன் பாடசாலையாகவும், இலங்கையில் முதலாவது மாணவர் விடுதியைக் கொண்ட பாடசாலையாகவும், வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றது.